இந்தியா-மொரீஷியஸ்: திட்டங்களின் மெய்நிகர் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 29th, 01:15 pm
கடந்த 6 மாதங்களில் பிரதமர் ஜுக்னவுத்துக்கும் எனக்கும் இடையே நடைபெறும் ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான துடிப்பான, வலுவான மற்றும் தனித்துவமான கூட்டாண்மைக்கு இது ஒரு சான்றாகும். நமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் முக்கிய பங்கெடுப்பாளராக மொரீஷியஸ் திகழ்கிறது.மொரீஷியஸ் நாட்டில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், படகுத்துறையைப் பிரதமரும், மொரீஷியஸ் பிரதமரும் இணைந்து தொடங்கி வைத்தனர்
February 29th, 01:00 pm
மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை, ஆறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜூக்நாத் ஆகியோர் இன்று காணொலி மூலம் கூட்டாகத் தொடங்கி வைத்தனர். இது மொரீஷியஸ் மற்றும் அகலேகா இடையேயான சிறந்த போக்குவரத்துக்கான தேவையை நிறைவேற்றுவதாகவும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், சமூக-பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதாகவும் அமையும். 2024 பிப்ரவரி 12 அன்று இரு தலைவர்களும் மொரீஷியஸில் யுபிஐ, ரூபே அட்டை சேவைகளை தொடங்கியதைத் தொடர்ந்து இந்தத் திட்டங்களின் தொடக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.