மனதின் குரல், டிசம்பர் 2023

December 31st, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் என்பது உங்களோடு கலந்துறவாடும் ஒரு சுபமான சந்தர்ப்பம். குடும்பச் சொந்தங்களோடு இணையும் போது, அது மிகவும் சுகமான அனுபவமாக இருக்கிறது, இனிமை தருவதாக அமைகிறது. மனதின் குரல் வாயிலாக, உங்களோடு கலந்து பேசும் போது என் உணர்வு இப்படித் தான் இருக்கிறது, மேலும் இன்றோ, தொடரும் நமது பயணத்தின் 108ஆவது பகுதியாக இருக்கிறது. நம் நாட்டிலே 108 என்ற எண்ணுக்கு மிகப் பெரிய மகத்துவம் உண்டு, அதன் புனிதத்துவம் என்பது ஆழமான ஆய்வுக்கான விஷயம். மாலையில் 108 முத்துமணிகள், 108 முறை ஜபித்தல், 108 திவ்யதேசங்கள், கோயில்களில் 108 படிகள், 108 மணிகள், 108 என்ற இந்த எண் மிக ஆழமாக நம்பிக்கையோடு இணைந்திருக்கிறது. ஆகையால் மனதின் குரலின் இந்த 108ஆவது பகுதி என்னைப் பொறுத்த மட்டிலே, மிகவும் சிறப்பானதாக ஆகி விட்டது. இந்த 108 பகுதிகளிலும் நாம் மக்களின் பங்களிப்புக்கான எத்தனையோ எடுத்துக்காட்டுகளைப் பார்த்திருக்கிறோம், அவற்றிலிருந்து கருத்தூக்கம் பெற்றிருக்கிறோம். இப்போது இந்தக் கட்டத்தை எட்டிய பிறகு, நாம் புதிய வகையில், புதிய சக்தியோடு, விரைவோடு முன்னேற உறுதிப்பாடு மேற்கொள்ள வேண்டும். நாளைய சூரியோதயம் 2024ஆம் ஆண்டிற்கான முதல் சூரியோதயமாக இருக்கும் என்பது எத்தனை இயல்பாக அமைந்த ஒன்று!! அப்போது நாம் 2024இலே கால் பதித்திருப்போம். உங்கள் அனைவருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கலின் மகாத்மா பூலேயின் மரபு குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

April 12th, 01:33 pm

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திருமிகு சுனிதா துக்கல் எழுதிய ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். ‘ஒடுக்கப்பட்ட மகளிருக்கு அதிகாரம் அளித்தலில் மகாத்மா பூலே மரபின் உண்மையான வாரிசு’ என்பது அந்தக் கட்டுரையாகும்.

மகாத்மா புலே பிறந்த தினம் – பிரதமர் மரியாதை

April 11th, 10:23 am

மகாத்மா புலே பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

PM Narendra Modi pays tribute to Mahatma Phule on his Jayanti

April 11th, 11:20 am



PM pays tributes to Mahatma Phule on his birth anniversary

April 11th, 01:18 am

PM pays tributes to Mahatma Phule on his birth anniversary