மும்பையில் நடைபெற்ற அபிஜத் மராத்தி மொழி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 05th, 07:05 pm

மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களே, அஜித் பவார் அவர்களே, மத்திய அரசில் உள்ள எனது சகாக்களே, தனது பாடல் மூலம் பல தலைமுறைகளில் முத்திரை பதித்த ஆஷா அவர்களே, புகழ்பெற்ற நடிகர்கள் பாய் சச்சின் அவர்களே, நம்தியோ காம்ப்ளே அவர்களே, சதானந்த் மோரே அவர்களே, மகாராஷ்டிர அரசின் அமைச்சர்களான பாய் தீபக் அவர்களே, மங்கள் பிரபாத் லோதா அவர்களே, பிஜேபி கட்சியின் மும்பைத் தலைவர் பாய் ஆஷிஷ் அவர்களே, இதர பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற அபிஜத் மராத்தி மொழி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்

October 05th, 07:00 pm

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மராத்தி மொழிக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, மராத்தி மொழி பேசும் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை அங்கீகரித்ததோடு, மகாராஷ்டிராவின் கனவை நிறைவேற்றுவதில் பங்களிப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மகாராஷ்டிர மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்த வரலாற்று சாதனையின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் தெரிவித்தார். மேலும், பெங்காலி, பாலி, பிராகிருதம் மற்றும் அசாமி மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்த பிரதமர், இந்த மொழிகளுடன் தொடர்புடைய மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மகாத்மா ஜோதிபா ஃபுலேயின் பிறந்த நாளில் பிரதமர் மரியாதை

April 11th, 09:28 am

மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியான மகாத்மா ஜோதிபா ஃபுலேயின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பையும் திரு மோடி நினைவு கூர்ந்தார். மகாத்மா ஜோதிபா ஃபுலே பற்றிய தனது எண்ணங்களையும் ஒரு சிறிய வீடியோ மூலம் திரு மோடி பகிர்ந்துள்ளார்.

'ஏக் பாரத், ஷ்ரேஷ்ட் பாரத்' (ஒரே இந்தியா, வலிமையான இந்தியா) என்ற எண்ணம் நமது தேசத்தை பலப்படுத்துகிறது: 'மன் கீ பாத்' தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

March 26th, 11:00 am

எனக்கு மிகவும் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம், பிறருக்கு சேவையாற்றவே தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த ஆயிரக்கணக்கான மனிதர்களைப் பற்றி உரையாடியிருக்கிறோம். பலர் எப்படிப்பட்டவர்கள் என்றால், பெண்களின் கல்விக்காகவே தங்களின் மொத்த ஓய்வூதியத்தையும் அளித்தவர்கள், சிலர் தங்களுடைய வாழ்க்கை முழுவதின் சம்பாத்தியத்தையும் சுற்றுச்சூழல் மற்றும் பிராணிகளின் சேவைக்காகவே அர்ப்பணம் செய்தவர்கள். நமது தேசத்திலே பொது நலனுக்கு மிக உயரிய இடம் அளிக்கப்பட்டிருக்கிறது, பிறர் நலன் பொருட்டு, தங்களுடைய அனைத்தையும் எந்த மறு சிந்தனையும் இல்லாமல் தானமளிப்பார்கள். ஆகையால் தானே நமக்கெல்லாம் சிறுவயதிலேயே சிபிச்சக்கரவர்த்தி, ததீசி போன்ற உறுப்பு தானம் புரிந்தவர்களின் கதைகள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

மகாத்மா ஜோதிபா பூலே-வின் பிறந்தநாளையொட்டி அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார்

April 11th, 10:16 am

தலை சிறந்த சமூக சீர்திருத்தவாதியும், தத்துவ மேதை மற்றும் எழுத்தாளருமான மகாத்மா ஜோதிபா பூலே-வின் பிறந்தநாளையொட்டி அவருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். சமூக நீதியின் முன்னோடியாகவும், எண்ணற்ற மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்த மகாத்மா பூலே சமூக சமத்துவம், மகளிர் அதிகாரமளித்தல் மற்றும் கல்வியை ஊக்குவிக்க அயராது பாடுபட்டவர் என்றும் திரு.மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

‘தடுப்பூசித் திருவிழாவை’ முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தி

April 11th, 09:22 am

திரு ஜோதிபா புலேவின் பிறந்த நாளான ஏப்ரல் 11 முதல், ‘தடுப்பூசித் திருவிழாவை' இன்று நாம் துவக்குகிறோம். பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 வரை ‘தடுப்பூசித் திருவிழா' தொடர்ந்து நடைபெறும்.

‘தடுப்பூசித் திருவிழா’, கொரோனாவுக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய போர் துவக்கம் பிரதமர்

April 11th, 09:21 am

‘தடுப்பூசித் திருவிழாவை’, கொரோனாவுக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய போரின் துவக்கம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தனிநபர் சுகாதாரத்துடன், சமூக சுகாதாரத்திலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.