அயோத்தி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்
January 05th, 08:28 pm
பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அயோத்தி விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்றி , மகரிஷி வால்மீகி சர்வதேச விமானநிலையம், அயோத்திதாம் என்று அறிவிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.அயோத்தி தாமில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்
December 30th, 04:50 pm
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயரை சூட்டியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். வால்மீகி மகரிஷியின் ராமாயணம் நம்மை ஸ்ரீராமருடன் இணைக்கும் ஞான மார்க்கம் என்றார். மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் பிரமாண்டமான புதிய தெய்வீக ராமர் கோயிலுடன் நம்மை இணைக்கும் என்று அவர் தெரிவித்தார். முதல் கட்டமாக இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளை கையாளும் என்றும் இரண்டாவது கட்டத்திற்குப் பிறகு, மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.