புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற முதலாவது தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 08th, 10:46 am
காலம் மாறி, ஒரு புதிய சகாப்தம் உதயமாகும் போது, அதற்கு ஈடுகொடுக்க வேண்டியது தேசத்தின் கடமையாகும். இன்று இங்கே பாரத மண்டபத்தில் இந்தப் பொறுப்பை நாடு நிறைவேற்றி வருகிறது. முதல் தேசிய படைப்பாளிகள் விருது, வளர்ந்து வரும் திறமையாளர்களை அங்கீகரிப்பதைக் குறிக்கிறது. இந்த விருது வரும் நாட்களில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கும். இந்த புதிய சகாப்தத்தை இயக்கும் இளைஞர்களை கௌரவிப்பதற்கும், படைப்பாற்றலைக் கொண்டாடுவதற்கும், படைப்பாளிகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அங்கீகரிப்பதற்கும் இது ஒரு வாய்ப்பு. இந்த விருது உள்ளடக்க படைப்பாளர்களுக்கு சிறந்த ஆதாரமாக செயல்படும். அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும். இன்று நான் தேசிய படைப்பாளிகள் விருது பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் அதில் முழு மனதுடன் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு மிகக் குறைந்த நேரமே இருந்தது. அதனால், இந்த நிகழ்வை எங்களால் அதிகம் பிரபலப்படுத்த முடியவில்லை. குறைந்த நேர கால அளவிலும்கூட, சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் படைப்பாளிகளை இதில் ஈடுபடுத்த முடிந்தது.முதல் தேசிய படைப்பாளர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
March 08th, 10:45 am
புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முதலாவது தேசிய படைப்பாளர் விருதுகளை வழங்கினார். வெற்றி பெற்றவர்களுடன் சிறிது நேரம் அவர் கலந்துரையாடினார். நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு ஏவுதளமாக இந்த விருது கருதப்படுகிறது.மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
March 08th, 08:58 am
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மகத்தான பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய சக்தியைக் கொண்டுவருவதுடன், அமிர்த காலத்தில் நாட்டின் தீர்மானங்களுக்கு புதிய பலத்தை அளிக்கட்டும் என்றும் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மகா சிவராத்திரி தினத்தில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
February 18th, 11:18 am
மகா சிவராத்திரி தினத்தில் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்