வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தை தொடங்கிவைத்த பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

November 19th, 07:00 pm

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல் அவர்களே, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது சகா தர்மேந்திர பிரதான் அவர்களே மற்றும் எல் முருகன் அவர்களே, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களே, உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா அவர்களே, பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணை வேந்தர் சுதிர் ஜெயின் அவர்களே, சென்னை இந்திய தொழில்நுட்ப கழக இயக்குநர் பேராசிரியர் காமக்கோட்டி அவர்களே, காசி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது விருந்தினர்களே, அனைத்து பிரதிநிதிகளே,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

November 19th, 02:16 pm

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ என்னும் ஒரு மாத கால நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் மிகப் பழமையான, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவதும், அந்தப் பெருமையை மீட்டெடுத்து உறுதிப்படுத்துவதும், இந்த திட்டத்தின் நோக்கமாகும். தமிழகத்தில் இருந்து 2500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காசிக்கு வருகை தரவுள்ளனர். இந்த தொடக்க நிகழ்ச்சியின் போது, 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ‘திருக்குறள்’ புத்தகத்தையும் பிரதமர் வெளியிட்டார். ஆரத்தியைத் தொடர்ந்து நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார்.

தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமர் சென்னையில் ஆற்றிய உரை

February 14th, 11:31 am

பிரதமர் திரு.நரேந்திரமோடி, சென்னையில் இன்று, பல்வேறு முக்கியத் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், அர்ஜுன் பீரங்கி(எம்கே-1ஏ)யை ராணுவத்திடம் ஒப்படைத்தார்.

தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியத் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

February 14th, 11:30 am

பிரதமர் திரு.நரேந்திரமோடி, சென்னையில் இன்று, பல்வேறு முக்கியத் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், அர்ஜுன் பீரங்கி(எம்கே-1ஏ)யை ராணுவத்திடம் ஒப்படைத்தார்.

பிப்ரவரி 14-ம் தேதி தமிழகம், கேரளாவுக்கு பிரதமர் பயணம்

February 12th, 06:10 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில், அன்று காலை 11.15 மணியளவில், பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், அர்ஜூன் போர் பீரங்கி வண்டியை ( எம்கே-1ஏ) ராணுவத்திடம் ஒப்படைக்கிறார். மாலை 3.30 மணியளவில், கொச்சியில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தத் திட்டங்கள், இந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கிய உத்வேகத்தை அளிப்பதுடன், முழுமையான வளர்ச்சி ஆற்றலை கொண்டு வரும் வேகத்துக்கு பெரிதும் உதவும்.

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் முழுமையான உரை

September 30th, 12:12 pm

தமிழ்நாட்டின் ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களே, முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களே, எனது சக அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களே, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களே, சென்னை ஐஐடி தலைவர், நிர்வாக அவை உறுப்பினர்கள், இயக்குநர், இந்த மகத்தான நிறுவனத்தின் பேராசிரியர்கள், மதிப்புமிகு விருந்தினர்கள் மற்றும் பொன்னான எதிர்காலத்திற்காகக் காத்திருக்கும் எனது இளம் நண்பர்களே, இன்று நான் இங்கே வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகும்.

சென்னை ஐஐடி-யின் 56 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்.

September 30th, 12:11 pm

சென்னையில் இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் 56 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.