
India is not just a workforce, we are a world force driving global change: PM Modi
March 01st, 11:00 am
The Prime Minister Shri Narendra Modi participated in the NXT Conclave in the Bharat Mandapam, New Delhi today. Addressing the gathering, he extended his heartfelt congratulations on the auspicious launch of NewsX World. He highlighted that the network includes channels in Hindi, English, and various regional languages, and today, it is going global. He also remarked on the initiation of several fellowships and scholarships, extending his best wishes for these programs.
என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
March 01st, 10:34 am
கடந்த காலங்களில் இதுபோன்ற ஊடக நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொண்டதாகவும், ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் இப்போது ஒரு புதிய போக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறிய திரு நரேந்திர மோடி, இந்த சாதனைக்காக சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுபோன்ற ஊடக நிகழ்வுகள் நாட்டில் ஒரு பாரம்பரியம் என்று அவர் எடுத்துரைத்தார். ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார். இதன் உச்சிமாநாடு, கொள்கைகள் பற்றிய விவாதத்தில் கவனம் செலுத்தியது என்றும், அரசியலை மையமாகக் கொண்டு ஒப்பிடும்போது கொள்கைகள் மையமாக இருந்தன ன்றும் அவர் கூறினார். இந்த உச்சிமாநாடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களின் விவாதங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவர்கள் ஒரு புதுமையான மாதிரியில் பணியாற்றியுள்ளதாக ஒப்புக் கொண்ட அவர், மற்ற ஊடக நிறுவனங்கள் இந்த போக்கையும் வார்ப்புருவையும் தங்கள் சொந்த புதுமையான வழிகளில் வளப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமரின் பதிலின் ஆங்கில மொழிபெயர்ப்பு
February 04th, 07:00 pm
மாண்புமிகு குடியரசு தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். நேற்றும் இன்றும் இரவு வெகுநேரம் வரை, அனைத்து மாண்புமிகு எம்.பி.க்களும் இந்த நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தங்கள் கருத்துகளால் வளப்படுத்தினர். பல மாண்புமிகு அனுபவம் வாய்ந்த எம்.பி.க்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர், மேலும், ஜனநாயகத்தின் பாரம்பரியத்தைப் போலவே, தேவை இருந்த இடத்தில், பாராட்டு இருந்தது, ஒரு பிரச்சனை இருந்த இடத்தில், சில எதிர்மறை விஷயங்கள் இருந்தன, ஆனால் இது மிகவும் இயல்பானது! திரு. சபாநாயகர் அவர்களே, நாட்டு மக்கள் 14வது முறையாக இந்த இடத்தில் அமர்ந்து குடியரசு தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிக்க எனக்கு வாய்ப்பளித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம், எனவே, இன்று நான் மக்களுக்கு மிகுந்த மரியாதையுடன் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவையில் விவாதத்தில் பங்கேற்று விவாதத்தை வளப்படுத்திய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதில்
February 04th, 06:55 pm
மக்களவையில் இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்தார். அவையில் உரையாற்றிய பிரதமர், நேற்றும் இன்றும் விவாதங்களில் பங்கேற்ற அனைத்து மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புகளையும் பாராட்டினார். ஜனநாயகத்தின் பாரம்பரியம் என்பது தேவையான இடங்களில் பாராட்டு மற்றும் கூடவே சில எதிர்மறையான கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இது இயற்கையானது என்று பிரதமர் குறிப்பிட்டார். 14 ஆவது தடவையாக குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்க மக்கள் வாய்ப்பு வழங்கியதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், குடிமக்களுக்கு தனது மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவித்ததுடன், கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரையும் தங்கள் எண்ணங்களால் விவாதங்களைச் செழுமைப்படுத்தியதற்காக பாராட்டினார்.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் போர் கப்பல்களை அர்ப்பணித்த போது பிரதமர் ஆற்றிய உரை
January 15th, 11:08 am
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, மகாராஷ்டிரத்தின் பிரபலமான முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது மூத்த சகாக்களே, திரு ராஜ்நாத் சிங் அவர்களே, மகாராஷ்டிர முதலமைச்சர் சஞ்சய் சேத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, அஜித் பவார் அவர்களே, ராணுவ தளபதி அவர்களே, கடற்படை தளபதி அவரகளே, அனைத்து கடற்படை சகாக்களே, மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து சக ஊழியர்களே, விருந்தினர்களே, பெண்கள் மற்றும் தாய்மார்களே.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்ஷீர் ஆகிய முன்னணி கடற்படை போர் கப்பல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
January 15th, 10:30 am
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது உரையாற்றிய திரு மோடி, ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கடைபிடிக்கப்படுவதாகவும், நாட்டின் பாதுகாப்புக்காக தனது உயிரைத் தியாகம் செய்யும் ஒவ்வொரு துணிச்சலான போர்வீரருக்கும் மரியாதை செலுத்துவதாகவும் கூறினார். இந்த தருணத்தில் அனைத்து துணிச்சலான வீரர்களையும் அவர் வாழ்த்துவதாக தெரிவித்தார்.We are not just the Mother of Democracy; democracy is an integral part of our lives: PM
January 09th, 10:15 am
PM Modi inaugurated the 18th Pravasi Bharatiya Divas convention in Bhubaneswar, Odisha. Expressing his heartfelt gratitude to the Indian diaspora and thanking them for giving him the opportunity to hold his head high with pride on the global stage, Shri Modi highlighted that over the past decade, he had met numerous world leaders, all of whom have praised the Indian diaspora for their social values and contributions to their respective societies.ஒடிசாவில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 09th, 10:00 am
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை வரவேற்ற திரு மோடி, இந்த தொடக்க பாடல் எதிர்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இந்திய புலம் பெயர்ந்தோர் நிகழ்வுகளிலும் இசைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய புலம் பெயர்ந்தோரின் உணர்வுகளை வெளிப்படுத்திய அற்புதமான பாடலுக்காக கிராமி விருது பெற்ற கலைஞர் ரிக்கி கெஜ்-ஐயும், அவரது குழுவினரையும் அவர் பாராட்டினார்.பல்வேறு ரயில்வே திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
January 06th, 01:00 pm
தெலங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா அவர்களே, ஒடிசா ஆளுநர் திரு ஹரி பாபு அவர்களே, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா அவர்களே, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு ஒமர் அப்துல்லா அவர்களே, தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி அவர்களே, ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களே, டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, திரு வி சோமையா அவர்களே, திரு ரவ்னீத் சிங் பிட்டு அவர்களே, திரு பண்டி சஞ்சய் குமார் அவர்களே, ஏனைய அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
January 06th, 12:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்து பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். புதியதாக ஜம்மு ரயில்வே கோட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய ரயில் முனையத்தையும் தொடங்கி வைத்தார்.குஜராத் மாநிலம் அம்ரேலியில் அடிக்கல் நாட்டி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
October 28th, 04:00 pm
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
October 28th, 03:30 pm
குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில், சாலை, நீர் மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளை உள்ளடக்கியதாகும். இவை அம்ரேலி, ஜாம்நகர், மோர்பி, துவாரகா, ஜூனாகத், போர்பந்தர், கட்ச் மற்றும் போடாட் மாவட்டங்களின் மக்களுக்கு பயனளிக்கும்.இன்று, உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி.
October 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே வணக்கம். இன்றைய மனதின் குரலில் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பு. உங்கள் வாழ்க்கையின் மிகவும் நினைவில் கொள்ளத்தக்க கணம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் என்றால், அப்படி ஏராளமாக இருக்கின்றன என்றாலும், இவை அனைத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட கணம் மிகவும் விசேஷமானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி, அவர் பிறந்த இடமான ஜார்க்கண்டின் உலிஹாதூ கிராமத்திற்கு நான் சென்ற கணம் தான் அது. இந்தப் பயணம் எனக்குள்ளே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பவித்திரமான இந்த பூமியின் மண்ணை என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பெரும்பேறு கிடைத்த, தேசத்தின் முதல் பிரதமர் என்ற சௌபாக்கியம் எனக்கு வாய்க்கப்பெற்றது. அந்தக் கணத்தில் சுதந்திரப் போராட்ட்த்தின் சக்தியை மட்டும் நான் உணரவில்லை, இந்த மண்ணின் சக்தியோடு என்னை நானே இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்தது. மேற்கொண்ட ஒரு உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வல்லமை இருந்தால், எப்படி அதனால் தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை நான் ஆழமாக உணர்ந்தேன்.அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் ஆற்றிய உரை
September 22nd, 10:00 pm
அமெரிக்காவுக்கு வணக்கம் நமது நமஸ்தே உலகளாவிய வகையில் பரவியுள்ளது. இது உங்களால்தான் நடந்துள்ளது. உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. பாரதத்தை உயர்வாக மதிக்கும் ஒவ்வொரு இந்தியனின் வலுவான பாசத்தால் இது சாத்தியமாகியுள்ளது.நியூயார்க்கில் இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் உரையாற்றினார்
September 22nd, 09:30 pm
நியூயார்க் லாங் தீவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏராளமான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 15,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.This is the golden period of India: PM Modi in Ahmedabad, Gujarat
September 16th, 04:30 pm
PM Modi inaugurated and laid the foundation stone for multiple development projects of railways, road, power, housing and finance sectors worth more than Rs 8,000 crore in Ahmedabad, Gujarat. The PM also inaugurated Namo Bharat Rapid Rail between Ahmedabad and Bhuj. PM Modi said that it will prove to be a new milestone in India’s urban connectivity. He said that he dedicated the first 100 days towards formulating policies and taking decisions towards public welfare and national interest.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.8,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
September 16th, 04:02 pm
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரயில்வே, சாலை, மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நிதித் துறைகளில் ரூ.8,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். முன்னதாக, அகமதாபாத் மற்றும் பூஜ் இடையே, இந்தியாவின் முதலாவது நமோ பாரத் விரைவு ரயிலை திரு மோடி தொடங்கி வைத்தார். நாக்பூர் முதல் செகந்திராபாத், கோலாப்பூர் முதல் புனே, ஆக்ரா கன்டோன்மென்ட் முதல் வாரணாசி, துர்க் முதல் விசாகப்பட்டினம், புனே முதல் ஹூப்பள்ளி மற்றும் வாரணாசியில் இருந்து தில்லி வரையிலான 20 பெட்டிகள் கொண்ட முதல் வந்தே பாரத் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையத்தின் ஒற்றைச் சாளர தகவல் தொழில்நுட்ப முறையையும் அவர் தொடங்கி வைத்தார்.நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார்
August 15th, 03:04 pm
பிரதமர் உரையின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 15th, 01:09 pm
நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தீரமிக்க எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும் நாம் மரியாதை செலுத்தும் இன்றைய தினம் மிகவும் உன்னதமான தருணமாகும். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடினார்கள், பாரத் மாதா கி ஜே என்ற முழுக்கத்துடனும், துணிச்சலுடனும் தூக்குமேடை ஏறினார்கள். இவர்களின் மனஉறுதியையும், தேச பக்தியையும் நினைவுகூர்வதற்கான விழாவாகும் இது. இந்த சுதந்திர தின விழாவில், நாம் சுதந்திரமாக சுவாசிக்கும் நல்ல தருணத்தை பெற்றிருப்பதற்கு வீரம் செறிந்த இவர்களே காரணமாவார்கள். இவர்களுக்கு நாடு மிகவும் கடன்பட்டுள்ளது. இத்தகைய மகத்தான ஆளுமைகள் ஒவ்வொருவருக்கும் நாம் மரியாதை செலுத்துவோம்.78-வது சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவின் வருங்காலத்திற்கான லட்சியத்துடன் கூடிய இலக்கை நிர்ணயித்துள்ளார்
August 15th, 10:16 am
78-வது சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவை பல்வேறு துறைகளிலும் உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கு, நாட்டின் வளர்ச்சியை வடிவமைத்து, புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில், வருங்காலத்திற்கான தொடர் இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.