பிரேசில் அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து

December 12th, 09:50 pm

பிரேசில் அதிபர் திரு லூலா டா சில்வா அறுவை சிகிச்சைக்குப் பிறகு நல்ல உடல்நலம் பெற்று விரைவில் குணமடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரேசில் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

November 20th, 08:05 pm

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரேசில் அதிபர் திரு. லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். அதிபர் லூலாவின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், பிரேசிலின் ஜி20 மற்றும் இப்சா தலைமைப் பதவிகளின் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை உருவாக்கும் பிரேசிலின் முன்முயற்சியைப் பாராட்டிய பிரதமர், அதற்கு இந்தியாவின் வலுவான ஆதரவைத் தெரிவித்தார். ஜி-20 முக்கூட்டு உறுப்பினர் என்ற முறையில், நீடித்த வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆளுமை சீர்திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பிரேசிலின் ஜி-20 நிகழ்ச்சி நிரலுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மற்றும் COP 30-க்கு பிரேசில் தலைமை வகிப்பதற்கான தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், இந்தியாவின் முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

"சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம்" என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை

November 18th, 08:00 pm

ஜி-20 உச்சிமாநாட்டை நடத்துவதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளுக்காக அதிபர் லூலாவை நான் முதலில் பாராட்ட விரும்புகிறேன்.

சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம் குறித்த ஜி-20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்

November 18th, 07:55 pm

'சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் ஜி 20 மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்ததற்காகவும், சிறப்பான விருந்தோம்பலுக்காகவும் பிரேசில் அதிபர் மேதகு திரு. லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். நிலையான வளர்ச்சி இலக்குகளை மையமாகக் கொண்ட பிரேசிலின் ஜி 20 செயல்திட்டத்தைப் பாராட்டிய அவர், இந்த அணுகுமுறை உலகளாவிய தெற்கின் கவலைகளை எடுத்துக்காட்டுகிறது என்றும் புதுதில்லி ஜி 20 உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட மக்களை மையமாகக் கொண்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்கிறது என்றும் குறிப்பிட்டார். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்திய ஜி20 தலைமைத்துவத்தின் அழைப்பு ரியோ உரையாடல்களில் தொடர்ந்து எதிரொலிக்கிறது என்பதை அவர் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

November 16th, 12:45 pm

நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன்.

நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்

November 12th, 07:44 pm

பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு நவம்பர் 16-21 தேதிகளில் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். நைஜீரியாவில், மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தவும், இந்திய சமூகத்தில் உரையாற்றவும் அவர் உயர்மட்ட விவாதங்களில் ஈடுபடுவார். பிரேசிலில் அவர் ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். கயானாவில், பிரதமர் மூத்த தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார், பாராளுமன்றத்தில் உரையாற்றுவார், கரீபியன் பிராந்தியத்துடனான உறவுகளை ஆழப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் CARICOM-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்பார்.

Human-Centric approach should be the way forward for G20 Nations: PM Modi

November 22nd, 09:39 pm

PM Modi made the concluding remarks at the Virtual G20 Summit. He emphasized on the path-breaking G20 Leaders' Declaration that was accorded a unanimous acceptance. He also reiterated the commitment of 'Zero Tolerance' to terrorism and reinforced the concept of the 'Two State Solution' for the Israel-Palestine conflict.

பிரேசில் அதிபரிடமிருந்து பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு

November 10th, 08:35 pm

பிரேசில் அதிபர் திரு. லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேற்கு ஆசியாவில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து இரு தலைவர்களும் கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பிரேசில் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

September 10th, 08:06 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (10-09-2023) புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை சந்தித்தார்.

இந்தியா-பிரேசில் கூட்டறிக்கை

September 10th, 07:47 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவும் செப்டம்பர் 10, 2023 அன்று புதுதில்லியில் ஜி 20 உச்சி மாநாட்டின் போது சந்தித்தனர்.

ஜி20 மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 10th, 02:12 pm

பிரேசிலுக்கு நமது ஆதரவை உறுதிப்படுத்துகிறோம். அவர்களின் தலைமையின் போது, ஜி20 அமைப்பு, நம் பொதுவான நோக்கங்களை மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறோம்.

பிரேசில் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

May 21st, 09:49 am

2023 மே 21 அன்று ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டிற்கிடையே மேன்மை தங்கிய பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

பிரேசில் அதிபராக பொறுப்பேற்றுள்ள லூயிஸ் இனாஷியோ லுலா டா சில்வாவுக்கு பிரதமர் வாழ்த்து

January 02nd, 07:38 pm

பிரேசில் அதிபராக பொறுப்பேற்றுள்ள லூயிஸ் இனாஷியோ லுலா டா சில்வாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 31st, 12:26 pm

பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.