Congress opposes abrogation of Article 370 and CAA to enable divisive politics: PM Modi in Junagadh
May 02nd, 11:30 am
Addressing a rally in Junagadh and attacking the Congress’s intent of pisive politics, PM Modi said, “Congress opposes abrogation of Article 370 and CAA to enable pisive politics.” He added that Congress aims to pide India into North and South. He said that Congress aims to keep India insecure to play its power politics.Congress 'Report Card' is a 'Report Card' of scams: PM Modi in Surendranagar
May 02nd, 11:15 am
Ahead of the impending Lok Sabha elections, Prime Minister Narendra Modi addressed powerful rally in Surendranagar, Gujarat. He added that his mission is a 'Viksit Bharat' and added, 24 x 7 for 2047 to enable a Viksit Bharat.PM Modi addresses powerful rallies in Anand, Surendranagar, Junagadh and Jamnagar in Gujarat
May 02nd, 11:00 am
Ahead of the impending Lok Sabha elections, Prime Minister Narendra Modi addressed powerful rallies in Anand, Surendranagar, Junagadh and Jamnagar in Gujarat. He added that his mission is a 'Viksit Bharat' and added, 24 x 7 for 2047 to enable a Viksit Bharat.புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற முதலாவது தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 08th, 10:46 am
காலம் மாறி, ஒரு புதிய சகாப்தம் உதயமாகும் போது, அதற்கு ஈடுகொடுக்க வேண்டியது தேசத்தின் கடமையாகும். இன்று இங்கே பாரத மண்டபத்தில் இந்தப் பொறுப்பை நாடு நிறைவேற்றி வருகிறது. முதல் தேசிய படைப்பாளிகள் விருது, வளர்ந்து வரும் திறமையாளர்களை அங்கீகரிப்பதைக் குறிக்கிறது. இந்த விருது வரும் நாட்களில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கும். இந்த புதிய சகாப்தத்தை இயக்கும் இளைஞர்களை கௌரவிப்பதற்கும், படைப்பாற்றலைக் கொண்டாடுவதற்கும், படைப்பாளிகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அங்கீகரிப்பதற்கும் இது ஒரு வாய்ப்பு. இந்த விருது உள்ளடக்க படைப்பாளர்களுக்கு சிறந்த ஆதாரமாக செயல்படும். அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும். இன்று நான் தேசிய படைப்பாளிகள் விருது பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் அதில் முழு மனதுடன் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு மிகக் குறைந்த நேரமே இருந்தது. அதனால், இந்த நிகழ்வை எங்களால் அதிகம் பிரபலப்படுத்த முடியவில்லை. குறைந்த நேர கால அளவிலும்கூட, சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் படைப்பாளிகளை இதில் ஈடுபடுத்த முடிந்தது.முதல் தேசிய படைப்பாளர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
March 08th, 10:45 am
புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முதலாவது தேசிய படைப்பாளர் விருதுகளை வழங்கினார். வெற்றி பெற்றவர்களுடன் சிறிது நேரம் அவர் கலந்துரையாடினார். நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு ஏவுதளமாக இந்த விருது கருதப்படுகிறது.மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
March 08th, 08:58 am
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மகத்தான பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய சக்தியைக் கொண்டுவருவதுடன், அமிர்த காலத்தில் நாட்டின் தீர்மானங்களுக்கு புதிய பலத்தை அளிக்கட்டும் என்றும் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நாடாளுமன்ற சமஸ்கிருதப் போட்டி விருது வழங்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 23rd, 11:00 am
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, பேராசிரியர் வசிஷ்ட் திரிபாதி அவர்களே, காசி வித்வத் பரிஷத் தலைவர் பேராசிரியர் நாகேந்திரா அவர்களே, காசி விஸ்வநாத் நியாஸ் பரிஷத் தலைவர் அவர்களே, மாநில அரசின் அமைச்சர்களே, மதிப்பிற்குரிய அறிஞர்களே, பங்கேற்பாளர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, இந்த நிகழ்ச்சியில், பங்கேற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்! அனைத்து அறிஞர்களுக்கும், குறிப்பாக இளம் அறிஞர்களுக்கு மத்தியில், மஹாமன என்ற புனித அரங்கில் ஞான நதியில் நீராடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. காலத்தைக் கடந்த காசியும், தொன்மையானதாகக் கருதப்படும் காசியும், நமது நவீன இளைஞர்களும் எவ்வளவு பெரிய பொறுப்புடன் தங்கள் அடையாளத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது மனதிற்கு மனநிறைவை அளிப்பது மட்டுமின்றி, பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது, அமிர்த காலத்தின் போது அனைத்து இளைஞர்களும் எதிர்காலத்தில் நாட்டைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உண்மையில் காசி என்பது அனைத்து அறிவின் தலைநகரம். காசி நாடாளுமன்ற சமஸ்கிருதப் போட்டி, காசி நாடாளுமன்ற அறிவுப் போட்டி, காசி நாடாளுமன்ற புகைப்படக்கலை போட்டி ஆகிய விருதுகளை வழங்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். வெற்றி பெற்ற அனைவருக்கும் அவர்களின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள். அவர்களின் திறமைக்காக, நான் அவர்களின் குடும்பத்தினரை வாழ்த்துகிறேன், அவர்களின் வழிகாட்டிகளையும் வாழ்த்துகிறேன். வெற்றியை நோக்கி சில அடிகள் பின்தங்கியவர்கள், சிலர் நான்காவது இடத்தை எட்டியவுடன் தடுமாறியிருக்கலாம், அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். காசியின் அறிவுப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக நீங்கள் மாறிவிட்டீர்கள் என்பதும், அதன் போட்டிகளில் பங்கேற்றீர்கள் என்பதும் நமக்குப் பெருமை அளிக்கிறது. உங்களில் யாரும் தோற்றுவிடவுமில்லை, பின்தங்கவுமில்லை. இந்தப் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம், நீங்கள் நிறையக் கற்றுக்கொண்டீர்கள். பல படிகளை முன்னோக்கி எடுத்து வைத்துள்ளீர்கள். எனவே, இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுதந்திர சபாகரில் நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்
February 23rd, 10:20 am
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சுதந்திர சபாகரில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டியில் வென்றவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். காசி நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டி குறித்த கையேட்டையும், காபி டேபிள் புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். காசி நாடாளுமன்ற சமஸ்கிருத அறிவுப் போட்டி , காசி நாடாளுமன்ற புகைப்படக்கலை போட்டி மற்றும் காசி நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டியில் வென்றவர்களுக்கு விருதுகளை வழங்கிய பிரதமர், வாரணாசியைச் சேர்ந்த சமஸ்கிருத மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், இசைக் கருவிகள் மற்றும் தகுதி உதவித்தொகைகளையும் வழங்கினார். காசி நாடாளுமன்ற புகைப்படக் கலை போட்டி காட்சியகத்தையும் பார்வையிட்ட பிரதமர், சன்வர்த்தி காசி என்ற தலைப்பில் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார்.வாரணாசியில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
December 18th, 02:16 pm
உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் ஸ்ரீ கேசவ் பிரசாத் மவுரியா, குஜராத் சட்டமன்ற சபாநாயகரும் பனாஸ் பால்பண்ணையின் தலைவருமான திரு சங்கர் பாய் சவுத்ரி. மாநில அமைச்சரவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், பிற பிரமுகர்கள் மற்றும் வாரணாசியின் எனது குடும்ப உறுப்பினர்களே!உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.19,150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
December 18th, 02:15 pm
சுமார் ரூ.10,900 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நகர்-நியூ பாவ்பூர் பிரத்யேக சரக்கு வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். வாரணாசி-புது தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், தோஹ்ரிகாட்-மவு மெமு ரயில் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் ஒரு ஜோடி நீண்ட தூர சரக்கு ரயில்களை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் தயாரித்த 10,000-வது என்ஜினையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ரூ. 370 கோடிக்கும் அதிகமான செலவில் இரண்டு ஆர்.ஓ.பி.க்களுடன் கூடிய பசுமை வயல் ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தாரா சாலையை அவர் திறந்து வைத்தார். 20 சாலைகளை வலுப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார். கைதி கிராமத்தில் சங்கம் படித்துறை சாலை மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுதல், காவலர் குடியிருப்பு மற்றும் பிஏசி புல்லன்பூரில் 200 மற்றும் 150 படுக்கைகள் கொண்ட இரண்டு பல அடுக்குப் பாசறை கட்டிடங்கள், 9 இடங்களில் கட்டப்பட்ட ஸ்மார்ட் பேருந்து நிழற்குடைகள் மற்றும் அலைப்பூரில் 132 கிலோவாட் துணை மின் நிலையம் ஆகியவற்றையும் தொடங்கிவைத்த பிரதமர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சுற்றுலா பாஸ் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.காசி சன்சாத் சம்ஸ்கிருதிக் மஹோத்சவ் 2023 இன் நிறைவு விழா மற்றும் வாரணாசியில் அடல் அவாசியா வித்யாலயாக்களின் அர்ப்பணிப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 23rd, 08:22 pm
உத்தரப்பிரதேசத்தின் பிரபலமான முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, மேடையில் அமர்ந்துள்ள மதிப்பிற்குரிய விருந்தினர்களே, காசி சன்சாத் சம்ஸ்கிருதிக் மஹோத்சவத்தின் சக பங்கேற்பாளர்களே, ருத்ராக்ஷ மையத்தில் கூடியிருக்கும் காசியின் என் அன்பான சக குடியிருப்பாளர்களே!உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தேசிய கலாச்சார மஹோத்சவ 2023 நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
September 23rd, 04:33 pm
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்று வந்த தேசிய கலாச்சார மஹோத்சவ நிகழ்வின் நிறைவு விழா இன்று நடைபெற்றது.வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 23rd, 02:11 pm
உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, மேடையில் அமர்ந்துள்ள உத்தரப்பிரதேச அரசின் அமைச்சர்களே, விளையாட்டு உலகின் சிறப்பு விருந்தினர்களே மற்றும் காசியைச் சேர்ந்த எனது அன்பான குடும்ப உறுப்பினர்களே!உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார்
September 23rd, 02:10 pm
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.போதைப்பொருள் பாவனைக்கு எதிரான திட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது மிகவும் ஊக்கமளிக்கிறது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
July 30th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்கள் அனைவரையும் மனம் நிறைய வரவேற்கிறேன். ஜூலை மாதம், மழைக்காலம் ஆகும், அதாவது பருவமழைக்காலம். கடந்த சில நாட்களாகவே, இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, கவலையும், இடர்களும் நிறைந்திருந்தன. யமுனை உட்பட, பல நதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக பட இடங்களில் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. மலைப்பகுதிகளில் நிலநடுக்கச் சம்பவங்களும் நடந்தன. இதற்கிடையில் தேசத்தின் மேற்குப் பகுதியில் சில காலம் முன்பாக குஜராத்தின் பகுதிகளில், விபர்ஜாய் சூறாவளியும் வந்தது. ஆனால் நண்பர்களே, இந்தப் பேரிடர்களுக்கு இடையிலே, தேசத்தின் மக்களனைவரும், சமூகரீதியான முயற்சிகளின் பலம் என்ன என்பதைக் காட்டியிருக்கிறார்கள். வட்டார மக்கள், நமது தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நிர்வாகத்தினர் என அனைவரும் இரவுபகலாகத் தொடர்ந்து செயலாற்றி இந்தப் பேரிடர்களை எதிர்கொண்டார்கள். எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தையும் எதிர்கொள்வதில் நமது திறன்களூம் ஆதாரங்களும் பெரும்பங்காற்றுகின்றன. ஆனால் இதோடு கூடவே, நமது சகிப்புத்தன்மையும், ஒருவருக்கு ஒருவர் உதவும் உணர்வும், அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. அனைவருக்கும் நலன் என்ற இந்த உணர்வு தான் பாரதத்தின் அடையாளம், இதுவே பாரத நாட்டின் சக்தியும் ஆகும்.உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தல் மற்றும் அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்
March 24th, 05:42 pm
உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, மாநில அரசின் அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, பிற உயரதிகாரிகளே மற்றும் காசியின் என் அன்பு சகோதர சகோதரிகளே!உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ.1780 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
March 24th, 01:15 pm
வாரணாசியில் ரூ.1780 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். வாரணாசி கண்டோன்மென்ட் நிலையத்திலிருந்து கடோவ்லியாவுக்கு பயணிகள் கம்பிவடப் பாதை, கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் பகவான்பூரில் 55 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சிக்ரா விளையாட்டு மைதானத்தின், 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட மறுமேம்பாட்டுப் பணி, இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகத்தால் சேவாபுரியின் இசர்வார் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள எல்பிஜி நிரப்பும் நிலையம், பர்தாரா கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையம், மிதக்கும் ஜெட்டி ஆகிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. 63 கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்குப் பயனளிக்கும், 19 குடிநீர் வழங்கும் திட்டங்கள், ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 59 குடிநீர் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். கர்கியாவோனில், பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தும் ஒருங்கிணைந்த நிலையத்தை அவர் திறந்து வைத்தார். வாரணாசி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.தில்லி கர்நாடக சங்கத்தின் அமிர்தப் பெருவிழா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 25th, 05:20 pm
கர்நாடகா முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி அவர்களே, நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் டாக்டர் வீரேந்திர ஹெக்டே அவர்களே, மரியாதைக்குரிய நிர்மலானந்த சுவாமி அவர்களே, மரியாதைக்குரிய ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி அவர்களே, ஸ்ரீ ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமி அவர்களே, ஸ்ரீ ஸ்ரீ நஞ்சவடுத சுவாமி அவர்களே, ஸ்ரீ ஸ்ரீ சிவமூர்த்தி சிவாச்சாரிய சுவாமி அவர்களே, மத்திய அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சி டி ரவி அவர்களே, தில்லி கர்நாடக சங்க உறுப்பினர்களே, சகோதர சகோதரிகளே!புது தில்லி தல்கதோரா ஸ்டேடியத்தில் தில்லி-கர்நாடக சங்கத்தின் ‘பாரிசு கன்னட திம் திமாவா’கலாச்சார அமிர்தப் பெருவிழாவை பிரதமர் தொடங்கி வைத்தார்
February 25th, 05:00 pm
புதுதில்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் ‘பாரிசு கன்னட திம் திமாவா’கலாச்சார விழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, கண்காட்சியைப் பார்வையிட்டார். விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் கீழ் நடைபெறும் இந்த விழா கர்நாடகாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றைக் கொண்டாடுகிறது.We are against war, but peace is not possible without strength: PM Modi in Kargil
October 24th, 02:52 pm
Keeping in with his tradition of spending Diwali with armed forces, the PM Modi spent this Diwali with the forces in Kargil. Addressing the brave jawans, the Prime Minister said that the reverence for the soil of Kargil always draws him towards the brave sons and daughters of the armed forces.