லோகமான்ய திலகரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை

July 23rd, 09:57 am

லோகமான்ய திலகர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டு புனேயில் லோக்மான்ய திலகரின் தேசிய விருதைப் பெற்ற நிகழ்ச்சியில் தாம் ஆற்றிய உரையையும் திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற லோகமான்ய திலகர் விருது வழங்கும் விழா 2023-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 01st, 12:00 pm

இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே உற்சாகமாகவும், உணர்ச்சிகரமாகவும் இருக்கிறேன். இன்று, நமது முன்மாதிரியும், இந்தியாவின் பெருமையுமான பாலகங்காதர திலகரின் நினைவு தினம் ஆகும். மேலும், இன்று அன்னா பாவ் சாத்தே அவர்களின் பிறந்த நாளாகும். லோகமான்ய திலகர் அவர்கள் நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றின் நெற்றித் திலகம் போன்றவர். அதேசமயம், சமூக சீர்திருத்தங்களுக்கு அன்னா பாவ் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது, அசாதாரணமானது. இந்த இருபெரும் ஆளுமைகளின் பாதங்களில் மரியாதையுடன் தலைவணங்குகிறேன்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் லோக்மான்ய திலக் தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது

August 01st, 11:45 am

விழா நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர், லோக்மான்ய திலகர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், லோக்மான்ய திலகரின் நினைவு நாளில், அவருக்கு அஞ்சலி செலுத்தினார், மேலும் இது அவருக்கு ஒரு சிறப்பு நாள் என்று கூறினார். லோக்மான்ய திலகரின் புண்ணிய திதி மற்றும் அன்னா பாவ் சாத்தேவின் பிறந்த தினம் இன்று என்று பிரதமர் குறிப்பிட்டார். லோக்மான்ய திலகர் அவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 'திலகம்' என்று பிரதமர் கூறினார். சமூகத்தின் மேம்பாட்டிற்காக அன்னா பாவ் சாத்தேவின் அசாதாரணமான மற்றும் இணையற்ற பங்களிப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார். சத்ரபதி சிவாஜி, சபேகர் சகோதரர், ஜோதிபா புலே மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோர் அவதரித்த பூமிக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். முன்னதாக தக்துஷேத் கோவிலில் பிரதமர் ஆசி பெற்றார்.

லோக்மான்ய திலகரின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி

August 01st, 08:29 am

இன்று புனேவில் லோக்மான்ய திலக் தேசிய விருதை பிரதமர் திரு மோடி ஏற்றுக் கொள்வார். மேலும், புனேவில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார்.

ஆகஸ்ட் 1-ம் தேதி புனே செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

July 30th, 01:51 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகஸ்ட் 1 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில் தக்துஷேத் மந்திரில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை செய்கிறார். காலை 11.45 மணிக்கு அவருக்கு லோக்மான்ய திலக் தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்படுகிறது. அதன்பின், மதியம், 12:45 மணிக்கு, மெட்ரோ ரயில்களை கொடியசைத்து துவக்கி வைத்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.