பிரதமர் தலைமையில் குறைக்கடத்தி நிர்வாகிகளின் வட்டமேசை கூட்டம்
September 10th, 08:10 pm
இந்த சந்திப்பின் போது, அவர்களின் யோசனைகள், வர்த்தகத்தை வடிவமைப்பது மட்டுமின்றி, இந்தியாவின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் என்று பிரதமர் கூறினார். வரும் காலம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர், குறைக்கடத்தி என்பது டிஜிட்டல் யுகத்தின் அடிப்படையாகும் என்றும், நமது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட குறைக்கடத்தி தொழில்துறை அடித்தளமாக இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் கூறினார்.பிரதமர் தலைமையில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆட்சி மன்றக் குழு கூட்டம்
September 10th, 04:43 pm
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (10.09.2024) 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்ப நிலப்பரப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மறுவடிவமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.2023 தொகுப்பைச் சேர்ந்த இந்திய வெளியுறவுப் பணி பயிற்சி அதிகாரிகள் பிரதமரை சந்தித்தனர்
August 29th, 06:35 pm
பிரதமரின் தலைமையின் கீழ், வெளிநாட்டுக் கொள்கையின் வெற்றியைப் பாராட்டிய பயிற்சி அதிகாரிகள், எதிர்வரும் புதிய பணிகள் குறித்து அவரிடமிருந்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் கேட்டறிந்தனர். நாட்டின் கலாச்சாரத்தை எப்போதும் தங்களுடன் பெருமிதத்துடனும், கண்ணியத்துடனும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அவர்கள் எங்கு பணியமர்த்தப்பட்டாலும் அதை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். தனிப்பட்ட நடத்தை உட்பட வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் காலனித்துவ மனநிலையை வென்று, அதற்கு பதிலாக நாட்டின் பெருமைமிக்க பிரதிநிதிகளாக தங்களை முன்னெடுத்துச் செல்வது பற்றி அவர் பேசினார்.முன்னாள் பிரதமர் திரு ஹெச்.டி. தேவகௌடா, பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு
July 25th, 08:41 pm
புதுதில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள எண் 7 இல்லத்தில் முன்னாள் பிரதமர் திரு ஹெச்டி தேவகௌடா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.PM reviews preparedness for cyclone “Remal”
May 26th, 09:20 pm
Prime Minister Shri Narendra Modi chaired a meeting to review the preparedness for cyclone “Remal” over North Bay of Bengal at his residence at 7, Lok Kalyan Marg earlier today.பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 23rd, 06:01 pm
பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காலை 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் கலந்துரையாடினார்.ஒரு கோடி வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி அமைப்பை நிறுவும் இலக்குடன் "பிரதமரின் சூர்யோதயா யோஜனா" என்ற திட்டத்தைத் தொடங்குவது தொடர்பான கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை வகித்தார்
January 22nd, 07:42 pm
சூரியவம்சத்தைச் சேர்ந்த பகவான் ஸ்ரீ ராமரின் பிரதிஷ்டை விழா நடைபெற்றுள்ள புனிதத் தருணத்தில் அயோத்திக்குப் பிரதமர் சென்று புதுதில்லி திரும்பியதைத் தொடர்ந்து, ஒரு கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட பிரதமரின் சூர்யோதயா யோஜனா என்ற திட்டத்தைத் தொடங்குவதற்கான கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் குழுவுடன் பிரதமர் கலந்துரையாடல்
December 24th, 07:28 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று காலை, எண் 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள் குழுவுடன் கலந்துரையாடினார். ஜம்மு காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.அமெரிக்க அதிபர் பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
September 08th, 09:32 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் அமெரிக்க அதிபர் திரு ஜோசப் ஆர் பைடனை சந்தித்தார். அமெரிக்க அதிபராக முதல் முறையாக இந்தியா வந்துள்ள ஜோ பைடன், செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியாளர்களுக்கு பிரதமர் புகழாரம்
September 05th, 09:51 pm
ஆசிரியர் தினமான இன்று, கனவுகளைத் அடையத் தூண்டும், எதிர்காலத்தை வடிவமைக்கும் மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் அனைத்து கல்வியாளர்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பிரதமர் வாழ்த்து
September 05th, 09:58 am
நமது எதிர்காலம் மற்றும் எழுச்சியூட்டும் கனவுகளைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் மகத்தான தாக்கத்திற்காக ஆசிரியர் தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தேசிய ஆசிரியர் விருது 2023 வெற்றியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
September 04th, 10:33 pm
நாட்டின் இளம் மனங்களை வளர்ப்பதில் ஆசிரியர்களின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். நல்ல ஆசிரியர்களின் முக்கியத்துவத்தையும், நாட்டின் தலைவிதியை வடிவமைப்பதில் அவர்கள் வகிக்கக்கூடிய முக்கியப் பங்கையும் அவர் எடுத்துரைத்தார். அடித்தட்டு சாதனையாளர்களின் வெற்றி குறித்து குழந்தைகளுக்குக் கற்பிப்பதன் மூலம் அவர்களுக்கு ஊக்கமளிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.பிரதமர், சிறுவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார்
August 30th, 04:39 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 7, லோக் கல்யாண் சாலையில் சிறுவர்களுடன் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடினார்.இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்)-2022 பிரிவு, பயிற்சி அதிகாரிகள் பிரதமருடன் சந்திப்பு
July 25th, 07:56 pm
இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்)-2022 பிரிவு, பயிற்சி அதிகாரிகள் எண்-7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று காலை சந்தித்துப் பேசினர்.PM interacts with delegation of community leaders of various tribes of Arunachal Pradesh
May 16th, 05:51 pm
PM Modi interacted with community leaders of various tribes of Arunachal Pradesh. PM expressed his happiness and enquired about their experience of their recent visit to Gujarat. PM also discussed the historical and cultural ties between both states.பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களைப் பிரதமர் பாராட்டினார்
January 24th, 09:49 pm
பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டினார். புதிய கண்டுபிடிப்பு, சமூக சேவை, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் வீரம் ஆகிய ஆறு பிரிவுகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு மத்திய அரசு பிரதமரின் தேசிய சிறார் விருதினை வழங்கி வருகிறது. இந்த விருது பெற நாடு முழுவதும் இருந்து 11 சிறார்கள் தெரிவு செய்யப்பட்டனர். விருது பெற்றவர்களில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 6 சிறுவர்களும் 5 சிறுமிகளும் அடங்குவர்.பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 24th, 07:38 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி, 7, லோக் கல்யாண் மார்கில் உள்ள தமது இல்லத்தில் பிரதமரின் தேசிய சிறார் (ராஷ்ட்ரீய பால புரஸ்கார்) விருதுபெற்ற குழந்தைகளுடன் இன்று கலந்துரையாடினார்.நாடாளுமன்றத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு மரியாதை செலுத்துவதற்காக ‘உங்கள் தலைவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 23rd, 08:03 pm
நாடாளுமன்றத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை கௌரவிக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ‘உங்கள் தலைவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.சீக்கிய சமுதாய பிரதிநிதிகளை பிரதமர் இன்று தமது இல்லத்தில் சந்தித்தார்
September 19th, 03:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, சீக்கிய சமுதாயப் பிரதிநிதிகளை தமது இல்லம் அமைந்துள்ள நெ.7 லோக் கல்யாண் மார்கில் இன்று சந்தித்தார்.தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் செப்டம்பர் 5-ஆம் தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்
September 04th, 01:29 pm
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் செப்டம்பர் 5-ஆம் தேதி 7, லோக் கல்யாண் மார்கில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடவிருக்கிறார்.