When the strength of the youth increases, the nation grows stronger: PM Modi
October 04th, 10:45 am
PM Modi launched various youth-focused initiatives worth over ₹62,000 crore during the Kaushal Deekshant Samaroh in New Delhi. He highlighted several schemes and projects dedicated to the youth of Bihar and announced the launch of the PM SETU scheme. Expressing satisfaction that Bihar has received a new Skill University, the PM noted that it has been named after Bharat Ratna Jananayak Karpoori Thakur.இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து திறன் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
October 04th, 10:29 am
புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற திறன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களுடன் தொடர்புடைய லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், பீகார் மாநிலத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், தொழிற்பயிற்சி நிறுவனங்களின் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவை மிகப்பெரிய அளவில் நடத்தும் புதிய பாரம்பரியத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடங்கியதை நினைவு கூர்ந்தார்.குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்ற ‘கடலில் இருந்து வளம்’ என்ற நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 20th, 11:00 am
குஜராத் முதல்வர் திரு புபேந்திர படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர்கள் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, சி.ஆர்.பாட்டில் அவர்களே, திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, திரு சாந்தனு தாக்கூர் அவர்களே, திருமிகு நிமுபென் பம்பானியா அவர்களே, நாடு முழுவதும் சுமார் 40 இடங்களில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரமுகர்களே, முக்கிய துறைமுகங்களுடன் தொடர்புடைய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, உயர் அதிகாரிகளே, இதர முக்கிய விருந்தினர்களே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே வணக்கம்!!குஜராத்தின் பாவ்நகரில் 'கடலில் இருந்து வளம்' என்ற நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் - ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்
September 20th, 10:30 am
குஜராத்தின் பாவ்நகரில் இன்று (20.09.2025) ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 'சமுத்திர சே சம்ரிதி' எனப்படும் கடலில் இருந்து வளம் என்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, நாடு முழுவதும் சேவை இயக்கம் நடைபெறுவதை எடுத்துரைத்தார். கடந்த சில நாட்களில் குஜராத்தில் பல சேவை சார்ந்த நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான இடங்களில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் இவற்றில் இதுவரை ஒரு லட்சம் பேர் ரத்த தானம் செய்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார். ஏராளமான நகரங்களில் தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் அதில் தீவிரமாக பங்கேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட சுகாதார முகாம்கள் நடைபெறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாடு முழுவதும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அவர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.பிரதமரின் ஸ்வநிதி திட்ட மறுசீரமைப்பு மற்றும் கடன் கால நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
August 27th, 02:49 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (27.08.2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதித் (பிரதமரின் ஸ்வநிதி) திட்டத்தில், 31.12.2024-க்குப் பிறகும் கடன் காலத்தை மறுசீரமைத்து 2030 மார்ச் 31 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு 7,332 கோடி ரூபாய். மறுசீரமைக்கப்பட்ட இந்தத் திட்டம் 50 லட்சம் புதிய பயனாளிகள் உட்பட 1.15 கோடி பேருக்குப் பயனளிக்கும்.தில்லியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 03rd, 01:03 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் மனோகர் லால் அவர்களே, தர்மேந்திர பிரதான் அவர்களே, டோகன் சாஹு அவர்களே, டாக்டர் சுகந்தா மஜும்தார் அவர்களே, ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களே, தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா அவர்களே, எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே.தில்லியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்
January 03rd, 12:45 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லியில் பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்ததோடு, மேலும் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், திரளாகக் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய திரு மோடி, அவர்களுக்கு தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். 2025-ம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான வாய்ப்புகளைக் கொண்ட ஆண்டாக இருக்கும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இன்று, இந்தியா அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் உலகளாவிய அடையாளமாக நிற்கிறது என்று பிரதமர் கூறினார். இந்த ஆண்டில் நாட்டின் நற்பெயர் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 2025-ம் ஆண்டிற்கான தொலைநோக்குத் திட்டத்தை சுட்டிக் காட்டிய திரு மோடி, இந்தியா உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாறுவதற்கும், இளைஞர்களுக்கு புதிய தொழில்முனைவு வாய்ப்புகளையும்தொழில்முனைவோருக்கான அதிகாரத்தையும் அளிப்பதற்கும், புதிய வேளாண் சாதனைகளைப் படைப்பதற்கும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வாழ்க்கையை எளிதாக்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்கும் இந்த ஆண்டு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
November 06th, 03:14 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் புதிய மத்திய அரசு திட்டமான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் தேசிய கல்விக் கொள்கை- 2020-ன் கீழ் மற்றொரு முக்கிய முயற்சியாகும். இது அரசு, தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் திறமையான மாணவர்களுக்கு நிதி உதவி கிடைக்க வகை செய்யும் திட்டமாகும். இதன் கீழ், தலைசிறந்த உயர்கல்வி நிறுவனத்தில் (QHEIs) சேர்க்கை பெறும் எந்தவொரு மாணவரும் வங்கிகள், நிதி நிறுவனங்களிடமிருந்து பிணையம் இல்லாத, உத்தரவாதம் இல்லாத கடனைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர். எளிய, வெளிப்படையான, மாணவர்களுக்கு ஏற்ற எளிய நடைமுறைகளின் மூலம் முற்றிலும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படும் திட்டம் இதுவாகும்.