India is the best bet of the 21st century: PM Modi at the 4th Global Renewable Energy Investor’s Meet and Expo
September 16th, 11:30 am
Prime Minister Narendra Modi inaugurated the 4th Global Renewable Energy Investor’s Meet and Expo (RE-INVEST) in Gandhinagar, Gujarat. The summit celebrates India's achievement of over 200 GW of non-fossil fuel capacity. The PM said that India's persity, scale, capacity, potential and performance are all unique and pave the way for Indian solutions for global applications.குஜராத் மாநிலம் காந்திநகரில் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
September 16th, 11:11 am
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில், நான்காவது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, 200 ஜிகாவாட் புதைபடிவம அல்லாத எரிபொருள் திறனை நிறுவியதில், இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைக்கு முக்கிய பங்களிப்பாளர்களை கௌரவிக்கிறது. பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில்துறை நிறுவனங்களின் அதிநவீன கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சியையும் திரு மோடி பார்வையிட்டார்.இந்தியாவின் ஜி 20 தலைமைப் பதவி நாட்டின் சாதாரண குடிமக்களின் திறனை வெளிக்கொணர்ந்துள்ளது: பிரதமர்
August 15th, 02:24 pm
77வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் ஜி 20 தலைமைப் பதவி நாட்டின் சாதாரண குடிமகனின் திறனை உலகிற்குக் காட்ட எவ்வாறு உதவியது என்பதை விளக்கினார். இந்தியாவின் திறன் மற்றும் இந்தியாவின் சாத்தியக்கூறுகள் நம்பிக்கையின் புதிய உயரங்களைத் தாண்டப் போகின்றன என்பது உறுதி என்றும், நம்பிக்கையின் இந்த புதிய உயரங்களை புதிய திறனுடன் எட்ட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இந்தியாவின் ஜி 20 தலைமைப் பதவி இந்தியாவின் சாதாரண குடிமகனின் திறனை உலகிற்கு உணர்த்தியுள்ளது. ஜி-20 மாநாட்டை நடத்தும் வாய்ப்பு இன்று இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஓராண்டாக, இதுபோன்ற பல ஜி -20 நிகழ்வுகள் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட விதம், நாட்டின் சாமானிய மக்களின் திறனை உலகிற்கு உணர்த்தியுள்ளது என்று அவர் கூறினார்.குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில் காணொலிப் பதிவின் மூலம் பிரதமர் ஆற்றிய உரை
August 02nd, 10:41 am
மகாத்மா காந்தியின் பெயரில் அமைந்துள்ள நகரமான காந்திநகர் உருவான நாளில் உங்கள் அனைவரையும் இங்கு வரவேற்கிறேன். அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தைப் பார்வையிட உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று, முழு உலகமும் பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றில் நிலையான தீர்வுகளைக் கண்டுபிடிப்பது பற்றி பேசுகிறது. காந்தி ஆசிரமத்தில், காந்திஜியின் வாழ்க்கை முறையின் எளிமைத்தன்மை, நிலைத்தன்மை, தற்சார்பு மற்றும் சமத்துவம் போன்றவை குறித்த அவரது தொலைநோக்கு சிந்தனைகளை நீங்கள் நேரடியாகக் காண்பீர்கள். நீங்கள் அதை உத்வேகமாகக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். தண்டி குதீர் அருங்காட்சியகத்திலும் நீங்கள் அதை அனுபவிக்க முடியும், இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிடக்கூடாது. காந்தியடிகளின் புகழ்பெற்ற சர்க்கா நூற்புச் சக்கரம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கங்காபென் என்ற பெண்ணால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை நான் இங்கு குறிப்பிடத் தேவையில்லை. அன்றிலிருந்து காந்தியடிகள் எப்போதும் கதர் ஆடையை அணிந்திருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். இது தற்சார்பு மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக மாறியது.மகளிர் அதிகாரமளித்தல் தொடர்பான ஜி20 அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் உரை
August 02nd, 10:40 am
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மகாத்மா காந்தியின் பெயரிடப்பட்ட நகரமான காந்திநகருக்கு அதன் நிறுவன தினத்தை முன்னிட்டு முக்கிய பிரமுகர்களை வரவேற்றார், மேலும் அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தைப் பார்வையிடும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார். பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சினைகளுக்கு அவசரமான மற்றும் நிலையான தீர்வுகளைக் காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், காந்திஜியின் வாழ்க்கை முறையின் எளிமையையும், நிலைத்தன்மை, தற்சார்பு மற்றும் சமத்துவம் குறித்த அவரது தொலைநோக்கு சிந்தனைகளையும் காந்தி ஆசிரமத்தில் நேரடியாகக் காணலாம் என்று கூறினார். பிரமுகர்களுக்கு இது உத்வேகம் அளிக்கும் என்று திரு. மோடி நம்பிக்கை தெரிவித்தார். தண்டி குதீர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டதை நினைவுகூர்ந்த அவர், காந்திஜியின் புகழ்பெற்ற ராட்டையை, அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கங்காபென் என்ற பெண் கண்டுபிடித்ததை சுட்டிக்காட்டினார். அப்போதிருந்து, காந்திஜி கதர் அணியத் தொடங்கியதாக கூறிய பிரதமர், இது தற்சார்பு மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக மாறியது என்று தெரிவித்தார்.இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்)-2022 பிரிவு, பயிற்சி அதிகாரிகள் பிரதமருடன் சந்திப்பு
July 25th, 07:56 pm
இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்)-2022 பிரிவு, பயிற்சி அதிகாரிகள் எண்-7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று காலை சந்தித்துப் பேசினர்.ஜி 20 எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமரின் காணொலி உரை
July 22nd, 10:00 am
நமது வெவ்வேறு யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு, ஆற்றல் மாற்றத்திற்கான நமது பாதைகள் வேறுபட்டவை. இருப்பினும், நமது இலக்குகள் ஒன்றுதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பசுமை வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றத்தில் இந்தியா பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இருப்பினும், எங்கள் காலநிலை கடமைகளில் நாங்கள் வலுவாக நகர்ந்து வருகிறோம். காலநிலை நடவடிக்கையில் இந்தியா தலைமையைக் காட்டியுள்ளது. புதைபடிவமற்ற நிறுவப்பட்ட மின் திறன் இலக்கை நாங்கள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே அடைந்தோம். நாங்கள் இப்போது அதிக இலக்கை நிர்ணயித்துள்ளோம். 2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீத புதைபடிவமற்ற நிறுவு திறனை எட்ட திட்டமிட்டுள்ளோம். சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்தில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. பணிக்குழுப் பிரதிநிதிகள் பாவகடா சோலார் பூங்கா மற்றும் மொதேரா சோலார் கிராமத்தைப் பார்வையிட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தூய்மையான எரிசக்திக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அளவையும் அவர்கள் கண்டுள்ளனர்.ஜி20 எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
July 22nd, 09:48 am
இந்தியாவிற்கு வருகை தந்த பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், எதிர்காலம், நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய எந்தவொரு விவாதமும் எரிசக்தியைக் குறிப்பிடாமல் முழுமையடையாது, ஏனெனில் இது அனைத்து மட்டங்களிலும் தனிநபர்கள் மற்றும் நாடுகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார்.CoP28-ன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சுல்தான் அல் ஜாபருடன் பிரதமரின் சந்திப்பு
July 15th, 05:33 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி 2023 ஜூலை 15-ம் தேதியன்று CoP28-ன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவரும், அபுதாபியில் உள்ள அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் சுல்தான் அல் ஜாபரை சந்தித்தார்.அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் உரை
June 23rd, 07:17 am
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது எப்போதும் பெரும் கௌரவமாகும். இரண்டு முறை உரையாற்றுவது மிகச் சிறந்த பெருமைக்குரிய விஷயமாகும். இந்த கௌரவத்தை அளித்தமைக்காக 140 கோடி இந்திய மக்களின் சார்பில் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 2016 ஆம் ஆண்டில் உங்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இங்கே இருந்ததை என்னால் காண முடிகிறது. பழைய நண்பர்களாக உங்கள் அன்பை உணர்கிறேன். மறுபாதியில் ஒரு புதிய நட்பின் உற்சாகத்தையும் என்னால் பார்க்க முடிகிறது. செனட்டர் ஹாரி ரீட், செனட்டர் ஜான் மெக்கெய்ன், செனட்டர் ஓரின் ஹாட்ச், எலியா கம்மிங்ஸ், ஆல்சி ஹேஸ்டிங்ஸ் உள்ளிட்ட உறுப்பினர்களை நான் நினைவில் வைத்திருக்கிறேன், அவர்கள் 2016 ஆம் ஆண்டில் இங்கு என்னைச் சந்தித்தனர், அவர்கள் இப்போது இங்கு நம்முடன் இல்லாதது வருத்தமளிக்கிறது.அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
June 23rd, 07:00 am
அமெரிக்க நாடாளுமன்ற அவைத்தலைவர் மாண்புமிகு திரு கெவின் மெக்கார்த்தி, செனட் சபையின் பெரும்பான்மை தலைவர் மாண்புமிகு திரு சார்லஸ் ஷூமர், குடியரசுக் கட்சியின் தலைவர் மாண்புமிகு திரு மிட்ச் மெக்கானல் மற்றும் ஜனநாயக அவைத் தலைவர் மாண்புமிகு திரு ஹக்கீம் ஜெஃப்ரிஸ் ஆகியோரின் அழைப்பின் பேரில் ஜூன் 22, 2023 அன்று அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.மைசூருவில் புலிகள் பாதுகாப்புத் திட்ட 50-ம் ஆண்டைக் குறிக்கும் வகையிலான நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
April 09th, 01:00 pm
இங்கு தாமதமாக வந்துள்ளதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். காலையில் 6 மணியளவில் நான் புறப்பட்டேன். வனப்பகுதியில் பயணம் மேற்கொண்டு சரியான நேரத்தில் இங்கு வந்துவிடலாம் என்று நினைத்தேன். உங்கள் அனைவரையும் காத்திருக்க வைத்தது குறித்து வருந்துகிறேன்.கர்நாடகாவின் மைசூருவில் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50-ம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்
April 09th, 12:37 pm
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின்’ 50-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், சர்வதேச புலிகள் கூட்டமைப்பையும் (ஐபிசிஏ) பிரதமர் தொடங்கி வைத்தார். ”அமிர்த காலத்தில் புலிகளின் பாதுகாப்பு” என்ற புலிகள் காப்பக மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டின் 5-வது பருவ அறிக்கைகளை வெளியிட்ட பிரதமர், புலிகளின் எண்ணிக்கையை அறிவித்ததோடு, அகில இந்திய புலிகள் மதிப்பீட்டின் (5வது பருவ) அறிக்கையையும் வெளியிட்டார். புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நினைவு நாணயத்தையும் அவர் வெளியிட்டார்.புதுதில்லியில் சர்வதேச சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 18th, 02:43 pm
சர்வதேச சிறுதானியங்கள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதற்காக உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுபோன்ற நிகழ்வுகள் உலகளாவிய நலனுக்கு மட்டுமல்லாமல் உலக நலனில் இந்தியாவின் பொறுப்பின் அடையாளமாக திகழ்கிறது.உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 18th, 11:15 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புது தில்லியில் பி யு எஸ் ஏ IARI வளாகத்தில் உள்ள NASC வின் சுப்ரமணியம் அரங்கில் உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த இரண்டு நாள் உலகளாவிய மாநாட்டில் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் பிற பங்குதாரர்களிடையே சிறுதானியங்கள் பற்றிய விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு போன்ற சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) தொடர்பான அனைத்து முக்கியப் பிரச்சினைகள் குறித்த அமர்வுகள் நடைபெறும். சிறுதானியங்களின் மதிப்பு சங்கிலி வளர்ச்சி தினைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து அம்சங்கள் சந்தை இணைப்புகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.புதுதில்லியில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாள் விழாவைத் தொடங்கிவைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 12th, 11:00 am
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ் விரத் அவர்களே, ஆரிய பிரதிநிதி சபையின் சர்வதேசத் தலைவர் திரு சுரேஷ் சந்திர ஆரியா அவர்களே, தில்லி ஆரிய பிரதிநிதி சபையின் தலைவர் திரு தரம்பால் ஆரியா அவர்களே, திரு வினய் ஆரியா அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான கிஷன்ரெட்டி அவர்களே, மீனாட்சி லேகி அவர்களே, அர்ஜுன் ராம் மெக்வால் அவர்களே, பிரதிநிதிகளே, சகோதர சகோதரிகளே!புதுதில்லியில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த ஆண்டு விழாவை பிரதமர் தொடங்கி வைத்தார்
February 12th, 10:55 am
மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்களை தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். விழாவில் நினைவு இலச்சினை சின்னத்தையும் அவர் வெளியிட்டார்.உலகின் தென்பகுதி நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டில் பிரதமரின் நிறைவுரை
January 13th, 06:37 pm
உங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி! இது உண்மையிலேயே பயனுள்ள கருத்துக்கள் மற்றும் யோசனைகளின் பரிமாற்றமாக உள்ளது. இது உலகின் தென்பகுதி நாடுகளின் பொதுவான அபிலாஷைகளை பிரதிபலித்தது.ஜி-20 மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளம் வெளியிடப்பட்டது
November 08th, 07:15 pm
ஜி-20 மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.India is a rapidly developing economy and continuously strengthening its ecology: PM Modi
September 23rd, 04:26 pm
PM Modi inaugurated National Conference of Environment Ministers in Ekta Nagar, Gujarat via video conferencing. He said that the role of the Environment Ministry was more as a promoter of the environment rather than as a regulator. He urged the states to own the measures like vehicle scrapping policy and ethanol blending.