ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி

September 10th, 12:26 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ஜி 20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இன்று புகழ்பெற்ற ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். காலத்தால் அழியாத காந்திஜியின் லட்சியங்கள், இணக்கமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான உலகளாவிய எதிர்காலத்திற்கான கூட்டுக் கண்ணோட்டத்தை வழிநடத்துகின்றன என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

13-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் தலைமை வகித்தார்

September 09th, 09:21 pm

13-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று தலைமை வகித்தார்.

13-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் தொடக்கவுரை

September 09th, 05:43 pm

இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். பிரிக்ஸ் அமைப்பின் 15-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் இந்த உச்சி மாநாட்டிற்கு தலைமை வகிப்பது எனக்கும் இந்தியாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய உச்சி மாநாட்டிற்கான விரிவான செயல்திட்டம் உங்கள் முன்னால் உள்ளது. நீங்கள் ஒப்புதல் அளித்தால் இந்த செயல்திட்டத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம். நன்றி, செயல்திட்டம் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.

13 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு

September 07th, 09:11 am

2021 ஆண்டின் 13 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. அந்த வகையில், செப்டம்பர் 9, 2021 அன்று நடைபெறும் மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி மெய்நிகர் வழியாக தலைமையேற்று நடத்துகிறார்.

திரு கல்யாண் சிங்கின் மறைவு குறித்து ஊடகங்களிடம் பிரதமர் தெரிவித்த கருத்து

August 22nd, 11:42 am

நம் அனைவருக்கும் இது ஒரு மிகவும் சோகமான தருணம். திரு கல்யாண் சிங் அவர்களின் பெற்றோர், அவருக்கு கல்யாண் சிங் என்று பெயர் சூட்டினார்கள். அவரது பெற்றோர் வழங்கிய பெயருக்கு ஏற்றவாறு தமது வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக தமது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அவர் அர்ப்பணித்ததோடு, அதனை தமது வாழ்க்கையின் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார். பாரதிய ஜனதா கட்சி, பாரதிய ஜன சங் மற்றும் நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக தம்மை அர்ப்பணித்தார்.

IPS Probationers interact with PM Modi

July 31st, 11:02 am

PM Narendra Modi had a lively interaction with the Probationers of Indian Police Service. The interaction with the Officer Trainees had a spontaneous air and the Prime Minister went beyond the official aspects of the Service to discuss the aspirations and dreams of the new generation of police officers.

சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளிடம் பிரதமர் ஆற்றிய உரை

July 31st, 11:01 am

உங்கள் அனைவருடனும் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களது எண்ணங்களை அறிந்து கொள்வதற்காக உங்களைப் போன்ற இளம் நண்பர்களுடன் ஒவ்வொரு ஆண்டும் உரையாடுவதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன். உங்களது வார்த்தைகள், கேள்விகள் மற்றும் ஆர்வம் ஆகியவை எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு எனக்கு உதவிகரமாக உள்ளன.

சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

July 31st, 11:00 am

சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் போது, பயிற்சி அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மற்றும் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த ராய் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு பின்னர் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

June 24th, 11:53 pm

மாண்புமிகு பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சற்று முன்பு முடிவடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், வளர்ச்சியை நோக்கியும் எடுக்கப்பட்ட ஆக்கபூர்வமான முயற்சி இது. மிகவும் சுமுகமான முறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சாசனத்தின் மீதும் தங்களுக்குள்ள முழுமையான நம்பிக்கையை பங்கேற்ற அனைத்து தலைவர்களும் தெரிவித்தனர்.

வளர்ச்சியடைந்த மற்றும் முன்னேறிய ஜம்மு&காஷ்மீரை நோக்கி எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் முக்கிய நடவடிக்கையாக ஜம்மு&காஷ்மீர் குறித்த இன்றைய கூட்டம் அமைந்தது: பிரதமர்

June 24th, 08:52 pm

ஜம்மு&காஷ்மீரின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்பட்டு வரும் நிலையில், வளர்ச்சியடைந்த மற்றும் முன்னேறிய ஜம்மு&காஷ்மீரை நோக்கி எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் முக்கிய நடவடிக்கையாக ஜம்மு&காஷ்மீரை சேர்ந்த அரசியல் தலைவர்களுடனான இன்றைய கூட்டம் அமைந்தது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

தில்லி கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற என்சிசி பேரணியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

January 28th, 12:07 pm

தில்லி கரியப்பா மைதானத்தில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படை (என்சிசி) பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு படைகளின் தலைவர், முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் என்சிசி மாணவர் பிரிவுகளின் அணிவகுப்பையும், கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டனர்.

கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற என்சிசி பேரணியில் பிரதமர் உரையாற்றினார்

January 28th, 12:06 pm

தில்லி கரியப்பா மைதானத்தில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படை (என்சிசி) பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு படைகளின் தலைவர், முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் என்சிசி மாணவர் பிரிவுகளின் அணிவகுப்பையும், கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டனர்.

நேதாஜியின் 125வது பிறந்த நாளை நினைவுகூர கொல்கத்தாவில் நடைபெற்ற பராக்கிரம தின விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

January 23rd, 08:18 pm

கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்த தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். கொல்கத்தா விக்டோரியா நினைவு மண்டபத்தில் நடைபெற்ற ‘பராக்கிரம தின’ விழாவுக்கு அவர் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், நேதாஜி பற்றிய நிரந்தர கண்காட்சி மற்றும் படக்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். ‘ அமர நூதன் ஜவ்போனோரி தூத்’ என்ற கருப்பொருளின் அடிப்படையிலான கலை நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது.

கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்த தின விழாவில் பிரதமர் கலந்து கொண்டார்

January 23rd, 05:15 pm

கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்த தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். கொல்கத்தா விக்டோரியா நினைவு மண்டபத்தில் நடைபெற்ற ‘பராக்கிரம தின’ விழாவுக்கு அவர் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், நேதாஜி பற்றிய நிரந்தர கண்காட்சி மற்றும் படக்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். ‘ அமர நூதன் ஜவ்போனோரி தூத்’ என்ற கருப்பொருளின் அடிப்படையிலான கலை நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது.

Impact and Influence of Swami Vivekananda remains intact in our national life: PM Modi

January 12th, 10:36 am

இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நடந்தது. இந்த விழாவில் தேசியளவில் வெற்றி பெற்ற மூன்று இளம் வெற்றியாளர்களின் கருத்துக்களை பிரதமர் கேட்டார். மக்களவைத் தலைவர், மத்திய கல்வி அமைச்சர், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

January 12th, 10:35 am

இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நடந்தது. இந்த விழாவில் தேசியளவில் வெற்றி பெற்ற மூன்று இளம் வெற்றியாளர்களின் கருத்துக்களை பிரதமர் கேட்டார். மக்களவைத் தலைவர், மத்திய கல்வி அமைச்சர், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மனதின் குரல் 2.0 (17ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள்: 25.10.2020

October 25th, 11:00 am

நண்பர்களே, நாம் பண்டிகைகளைப் பற்றிப் பேசும் போதும், இவற்றுக்கான தயாரிப்புகளில் ஈடுபடும் போதும், முக்கியமாக நமது மனதில் எழக்கூடிய விஷயம், எப்போது சந்தைக்குச் செல்வது என்பது தான். என்னவெல்லாம் வாங்க வேண்டும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த விஷயத்தில் அதிக உற்சாகம் இருக்கும். இந்த முறை பண்டிகைக் காலத்தில் புதியதாக நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்கள். பண்டிகைகளின் இந்த உல்லாசம், சந்தைகளின் பகட்டு ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. ஆனால் இந்த முறை நீங்கள் வாங்கச் செல்லும் போது, Vocal for Local, அதாவது உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற நமது உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். சந்தைகளில் பொருட்களை வாங்கும் சமயத்தில், நாம் உள்நாட்டு பொருட்களுக்கே முதன்மை அளிக்க வேண்டும்.

For Rajmata Scindia, public service was above everything else: PM Modi

October 12th, 11:01 am

PM Modi recalled the legacy of Rajmata Vijaya Raje Scindia on her birth centenary while releasing a commemorative coin of Rs 100 in her honour. Rajmata Scindia dedicated her life to the poor. She proved that for people's representatives not 'Raj Satta' but 'Jan Seva' is important, said PM Modi.

ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ரூ.100 சிறப்பு நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிட்டார்

October 12th, 11:00 am

பிரதமர் திரு.நரேந்திரமோடி, ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் பிறந்த நாள் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் ரூ.100 மதிப்புள்ள நினைவு நாணயத்தை இன்று காணொலி காட்சியின் வாயிலாக வெளியிட்டார். ராஜமாதாவின் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்.

மக்களவை உறுப்பினர் பள்ளி துர்கா பிரசாத் ராவ் காரு மறைவுக்கு பிரதமர் இரங்கல்

September 16th, 11:16 am

பிரதமர் திரு.நரேந்திர மோடி, மக்களவை உறுப்பினர் பள்ளி துர்கா பிரசாத் ராவ் காரு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.