சிங்கப்பூரில் ஏஇஎம் நிறுவனத்தை பிரதமர் பார்வையிட்டார்

September 05th, 12:31 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடியும், பிரதமர் திரு. லாரன்ஸ் வோங்கும், செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் துறையில் முன்னணி சிங்கப்பூர் நிறுவனமான ஏஇஎம்-ஐ பார்வையிட்டனர். உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தியில் ஏஇஎம்-ன் பங்களிப்பு, அதன் செயல்பாடுகள் மற்றும் இந்தியாவுக்கான திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. சிங்கப்பூர் செமிகண்டக்டர் தொழில்துறை அமைப்பு, சிங்கப்பூரில் செமிகண்டக்டர் வளர்ச்சி மற்றும் இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தது. இந்தத் துறையைச் சேர்ந்த பல்வேறு சிங்கப்பூர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 2024 செப்டம்பர் 11-13 தேதிகளில் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள செமிகான் இந்தியா கண்காட்சியில் பங்கேற்குமாறு சிங்கப்பூர் செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி சிங்கப்பூர் பிரதமரை சந்தித்துப் பேசினார்

September 05th, 10:22 am

இந்தியா-சிங்கப்பூர் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். இருதரப்பு உறவுகளின் விரிவான மற்றும் ஆழ்ந்த அளப்பரிய வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த உறவை விரிவான உத்திசார் கூட்டாண்மையாக வளரச் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். இது இந்தியாவின் கிழக்கத்திய கொள்கைக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்

September 05th, 09:00 am

நீங்கள் பிரதமராக பதவியேற்ற பிறகு நாம் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். உங்கள் தலைமையின் கீழ், சிங்கப்பூர் இன்னும் வேகமாக முன்னேற்றத்தை அடையும் என்று நான் நம்புகிறேன்.

PM Modi arrives in Singapore

September 04th, 02:00 pm

PM Modi arrived in Singapore. He will hold talks with President Tharman Shanmugaratnam, Prime Minister Lawrence Wong, Senior Minister Lee Hsien Loong and Emeritus Senior Minister Goh Chok Tong.

இந்தியாவின் இசை வரலாறு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணமித்த தாளங்கள் மூலம் எதிரொலிக்கும் பன்முகத்தன்மையின் சிம்பொனியாகும்: பிரதமர்

November 14th, 09:43 am

சிங்கப்பூர் துணைப் பிரதமர் திரு. லாரன்ஸ் வோங்க்-இன் சித்தார் இசை முயற்சிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.