இந்தியாவிற்கும் நார்டிக் நாடுகளுக்கும் இடையேயான உச்சி மாநாடுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டுச் செய்தி அறிக்கை
April 18th, 12:57 pm
ஸ்டாக்ஹோம் நகரில் இன்று (18.04.2018) இந்தியப் பிரதமர் மற்றும் ஸ்வீடன் பிரமர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஃபின்லாந்து பிரதமர் திரு. ஜூஹா சிப்பிலியா, ஐஸ்லாந்து பிரதமர் திருமிகு. காட்ரின் ஜேக்கப்தாத்ரின், நார்வே பிரதமர் திருமிகு. எர்னா சோல்பெர்க், ஸ்வீடன் பிரதமர் திரு. ஸ்டீஃபன் லோஃப்வென் ஆகியோர் பங்கேற்றனர்.இந்தியப் பிரதமரின் சுவீடன் பயணம்(16-17 ஏப்ரல் 2018)
April 17th, 11:12 pm
இந்தியா-ஸ்வீடன் இணைந்து ஏற்பாடுசெய்த இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் கலந்துகொண்டார். “இந்தியா-நார்டிக் உச்சிமாநாடு: பகிரப்பட்ட மாண்புகள், பரஸ்பர முன்னேற்றம்” என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்தியா மற்றும் ஸ்வீடன் பிரதமர்களின் அழைப்பின்பேரில், டென்மார்க் பிரதமர் லார்ஸ் லொக்கே ரஸ்முஸன், பின்லாந்து பிரதமர் ஜூஹா சிபிலா, ஐஸ்லாந்து பிரதமர் கத்ரிக் ஜாகோப்ஸ்டாட்டிர், நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் ஆகிய அனைத்து நார்டிக் நாடுகளின் பிரதமர்கள் ஏப்ரல் 17இல் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த நாடுகளுடன் இந்தியாவுக்கு வலுவான பொருளாதார உறவுகள் உள்ளன. இந்தியா-நார்டிக் நாடுகளுக்கு இடையே 530 கோடி டாலர் அளவுக்கு ஆண்டு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தியா பெற்றுள்ள நார்டிக் நாடுகளின் ஒட்டுமொத்த நேரடி முதலீடு 250 கோடி டாலராகும்.