உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

November 26th, 08:15 pm

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவர்களே, நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களே, நீதிபதி சூர்ய காந்த் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, அட்டர்னி ஜெனரல் திரு. வெங்கடரமணி அவர்களே, பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா அவர்களே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு. கபில் சிபல் அவர்களே, உச்சநீதிமன்ற நீதிபதிகளே, முன்னாள் தலைமை நீதிபதிகளே, இதர சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு

November 26th, 08:10 pm

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் திரு. மோடி, அரசியலமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு அனைத்து பிரமுகர்கள், பிரதிநிதிகள் மற்றும் குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு நிறைவு என்பது பெருமைக்குரிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியலமைப்பு உறுப்பினர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை -2024, தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 15th, 10:05 am

எனது அமைச்சரவை சகாவான ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, ஐடியு-வின் பொதுச் செயலாளர் சந்திரசேகர் அவர்களே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களே, பாரதத்தின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, தொழில்துறைத் தலைவர்களே, தொலைத் தொடர்பு நிபுணர்களே, புத்தொழில் உலகின் இளம் தொழில்முனைவோரே, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள மதிப்புமிக்க விருந்தினர்களே, தாய்மார்களே,

புதுதில்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

October 15th, 10:00 am

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ஐடியு) – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் 8 வது பதிப்பையும் திரு மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

Lakshadweep is not just a group of islands; it's a timeless legacy of traditions and a testament to the spirit of its people, says PM Modi

January 04th, 03:29 pm

PM Modi visited Agatti, Bangaram and Kavaratti in Lakshadweep for the launch of various projects. Sharing glimpses from his two-day visit on ‘X’, PM Modi said, “Our focus in Lakshadweep is to uplift lives through enhanced development. In addition to creating futuristic infrastructure, it is also about creating opportunities for better healthcare, faster internet and drinking water, while protecting as well celebrating the vibrant local culture. The projects that were inaugurated reflect this spirit.”

லட்சத்தீவில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

January 03rd, 01:49 pm

லட்சத்தீவுகளில் மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.01.2024) கலந்துரையாடினார்.

லட்சத்தீவின், கவரட்டியில் வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 03rd, 12:00 pm

லட்சத்தீவின் நிர்வாகி திரு பிரபு படேல் அவர்களே, உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களே, லட்சத்தீவில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களே! அனைவருக்கும் வணக்கம்!

லட்சத்தீவு, கவரட்டியில் ரூ.1150 கோடிக்கும் மேல் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

January 03rd, 11:11 am

லட்சத்தீவின் கவரட்டியில் ரூ.1150 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொழில்நுட்பம், எரிசக்தி, நீர்வளம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. மடிக்கணினி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய பிரதமர், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். விவசாயிகள், மீனவர் பயனாளிகளுக்கு பிரதமர் வேளாண் கடன் அட்டைகளையும் அவர் வழங்கினார்.

லட்சத்தீவின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை வகித்தார்

January 02nd, 11:16 pm

லட்சத்தீவின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.01.2024) தலைமை வகித்தார். பிரதமர் மோடி இன்று லட்சத்தீவு சென்றடைந்தார். நாளை (03.01.2024) அவர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

லட்சத்தீவின் அகட்டி விமான நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 02nd, 04:45 pm

லட்சத்தீவு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. இருப்பினும் சுதந்திரத்திற்குப் பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு மட்டுப்படுத்தப்பட்டது. கப்பல் போக்குவரத்து முக்கியத் துறையாக இருந்தபோதும், துறைமுக உள்கட்டமைப்பு வளர்ச்சியடையவில்லை. கல்வி, சுகாதாரம் முதல் பெட்ரோல், டீசல் கிடைப்பது வரை பல்வேறு துறைகளில் சவால்கள் காணப்பட்டன. எங்கள் அரசு இப்போது இந்தப் பிரச்சினைகளைத் தீவிரமாக கவனித்து வருவது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. லட்சத்தீவின் முதல் பெட்ரோல், எண்ணெய், உயவு எண்ணெய்க்கான மொத்த சேமிப்பு வசதி கவரட்டி, மினிக்காய் தீவுகளில் நிறுவப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பல துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

லட்சத்தீவு அகத்தி விமான நிலையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு மோடி உரையாற்றினார்

January 02nd, 04:30 pm

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், லட்சத்தீவுகள் வழங்கும் மகத்தான சாத்தியக்கூறுகளைக் குறிப்பிட்டதோடு, சுதந்திரத்திற்குப் பிறகு லட்சத்தீவுகள் எதிர்கொண்ட நீண்டகால புறக்கணிப்பையும் சுட்டிக்காட்டினார். கப்பல் போக்குவரத்து இப்பகுதியின் உயிர்நாடியாக இருந்தபோதிலும் பலவீனமான துறைமுக உள்கட்டமைப்பை அவர் குறிப்பிட்டார். இது கல்வி, சுகாதாரம், பெட்ரோல், டீசலுக்கும் பொருந்தும் என்று அவர் கூறினார். தற்போது அரசு அதன் அபிவிருத்திப் பணியை சரியான அக்கறையுடன் மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த சவால்கள் அனைத்தும் எங்கள் அரசால் எதிர்கொள்ளப்படுகின்றன, என்று அவர் கூறினார்.

2024 ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் தமிழ்நாடு, லட்சத்தீவு மற்றும் கேரளாவுக்குப் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

December 31st, 12:56 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2024 ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

லட்சத்தீவில் 'ஊட்டச்சத்து தோட்ட திட்டத்துக்கு ' பிரதமர் பாராட்டு

June 10th, 08:15 pm

லட்சத்தீவில் 'ஊட்டச்சத்து தோட்ட திட்டத்தை' பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். லட்சத்தீவு மக்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை இந்த முயற்சி காட்டுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.

டாமனில் நமோ பாதை, தேவகா கடல்முனை ஆகியவற்றை நாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்தார்

April 25th, 11:23 pm

5.45 கிலோமீட்டர் தூரம் கொண்ட தேவகா கடல்முனை ரூ. 165 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு தலமாகவும், சுற்றுலா பயணிகளின் வரத்தை அதிகரித்து, அதன் மூலம் இந்த கடல்முனை உள்ளூர் பொருளாதாரத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறன்மிகு விளக்குகள், வாகன நிறுத்தும் வசதி, பூங்காக்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை நிறைந்த உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக இந்த கடற்கரை முகப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு விழாவின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்ட 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

November 22nd, 10:31 am

வேலை வாய்ப்பு விழாவில் கலந்து கொண்டுள்ள எனது இளம் நண்பர்களே, வணக்கம். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று 71,000 இளைஞர்களுக்கு நாட்டின் 45 நகரங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான இல்லங்களில் முன்னேற்றத்தின் புதிய சகாப்தம் இன்று தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு 75,000 இளைஞர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க இயக்கமுறையில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இன்றைய வேலைவாய்ப்பு விழா எடுத்துக்காட்டாகும்.

வேலைவாய்ப்பு விழாவின் மூலம் புதிய பணியாளர் சேர்ப்புக்கு 71,000 நியமன கடிதங்களை பிரதமர் விநியோகித்தார்

November 22nd, 10:30 am

புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இணையதளத்தில் புத்தாக்க பயிற்சி வழங்க கர்மயோகி ப்ராரம்ப் இணைய தளத்தை தொடங்கிவைத்தார். இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் தேச வளர்ச்சியில் நேரடி பங்கேற்பிற்கு அர்த்தம் உள்ள வாய்ப்புகளை வழங்குவதிலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் இந்த விழா கிரியா ஊக்கியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் தொடக்கத்தில் வேலை வாய்ப்பு விழாவின் மூலம் புதிதாக நியமனம் செய்யப்பட்டோருக்கு 75,000 நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்திய கடற்படையின் கொவிட் தொடர்பான நடவடிக்கைகளை பிரதமர் ஆய்வு செய்தார்

May 03rd, 07:40 pm

பெருந்தொற்றின் போது நாட்டு மக்களுக்கு உதவ இந்திய கடற்படை எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைத்தார். அனைத்து மாநில அரசுகளையும் அணுகியுள்ள கடற்படை, மருத்துவமனை படுக்கைகள், போக்குவரத்து மற்றும் இதர உதவிகளை செய்து வருவதாக பிரதமரிடம் அவர் தெரிவித்தார்.

The digital potential of our nation is unparalleled, perhaps even in the history of mankind: PM

December 08th, 11:00 am

PM Modi addressed India Mobile Congress via video conferencing. PM Modi said it is important to think and plan how do we improve lives  with the upcoming technology revolution. Better healthcare, Better education, Better information and opportunities for our farmers, Better market access for small businesses are some of the goals we can work towards, he added.

இந்திய செல்போன் தொழில் துறையினர் மாநாடு 2020-ல் பிரதமர் ஆற்றிய உரை

December 08th, 10:59 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் நடந்த இந்திய செல்போன் தொழில் துறையினர் மாநாடு 2020-ல் தொடக்க உரையாற்றினார். “பங்கேற்பு புதுமை சிந்தனை – புத்திசாலித்தனமான, உத்தரவாதமான, நீடித்த செயல்பாடு'' என்பது இந்த மாநாட்டின் அடிப்படை விவாதப் பொருளாக உள்ளது. `தற்சார்பு இந்தியா,' `டிஜிட்டல் பங்கேற்புநிலை' மற்றும் `நீடித்த வளர்ச்சி, தொழில்முனைவோர் முயற்சி & புதுமை சிந்தனை படைப்பு' என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு இசைவான செயல்பாடுகளை உருவாக்குவது இதன் நோக்கமாக உள்ளது. தொலைத்தொடர்பு மற்றும் புதிய தொழில்நுட்பத் துறைகளுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

2020 ஆகஸ்ட் 15, 74-வது சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு ஆற்றிய உரையின் மொழியாக்கம்

August 15th, 02:49 pm

எனது நாட்டு மக்களே, இந்தப் புனிதமான சுதந்திர தினத்தில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.