Our Government has always given priority towards welfare of farmers: PM Modi
January 02nd, 03:40 pm
PM Modi conferred Krishi Karman Awards and addressed a public meeting in Tumakuru, Karnataka today. He also released the 3rd installment of PM-KISAN of Rs 2000 for the period December 2019 - March 2020, which will benefit several farmers.க்ரிஷி கர்மான் விருதுகளை பிரதமர் வழங்கினார்
January 02nd, 03:39 pm
கர்நாடக மாநிலம் தும்கூருவில் இன்று (02.01.2020) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், பிரதமர் திரு.நரேந்திர மோடி, முன்னோடி விவசாயிகளுக்கு க்ரிஷி கர்மான் விருதுகளையும், மாநில அரசுகளுக்கான விருதுகளையும் வழங்கினார். பிரதமரின் கிசான் (பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு) திட்டத்தின் கீழ் டிசம்பர் 2019 – மார்ச் 2020 வரையிலான காலத்திற்கான 3-வது தவணையாக ரூ.2000-ஐயும் அவர் விடுவித்தார். இதன் மூலம் சுமார் 6 கோடி பயனாளிகள் பயனடைவார்கள். கர்நாடகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகளையும் அவர் வழங்கினார். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 8 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை சேர்ந்த பயனாளிகளுக்கான சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சில மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி கலன் மற்றும் டிரான்ஸ்பாண்டர் கருவிகளையும் பிரதமர் ஒப்படைத்தார்.க்ரிஷி கர்மான் விருதுகளை பிரதமர் வழங்குகிறார்
January 01st, 07:21 pm
கர்நாடக மாநிலம் தும்கூரில் வியாழக்கிழமை 02.01.2020 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில், க்ரிஷி கர்மான் விருதுகளையும், மாநிலங்களுக்கான விருதுகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கவுள்ளார். முன்னோடி விவசாயிகளுக்கான வேளாண் அமைச்சரின் க்ரிஷி கர்மான் விருதுகளையும் அவர் வழங்கவுள்ளார்.