வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த ராஜஸ்தான் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 16th, 11:30 am

உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தவும், அதை மக்களிடையே கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கும் முதலமைச்சரையும் நான் பாராட்டுகிறேன். சில நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் பிரான்ஸ் அதிபருக்கு நீங்கள் அளித்த சிறப்பான வரவேற்பு பாரதத்தில் மட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டிலும் எதிரொலித்தது. இது ராஜஸ்தான் மக்களின் அடையாளம். நமது சக ராஜஸ்தானியர்கள் தாங்கள் மிகவும் நேசிப்பவர்கள் மீது தங்கள் பாசத்தைப் பொழிவதற்கு எந்த முயற்சியையும் விட்டுவைப்பதில்லை. சட்டமன்றத் தேர்தலின் போது, நான் ராஜஸ்தானுக்கு வருகை தந்த போதெல்லாம் நீங்கள் எங்களுக்கு அளித்த மகத்தான ஆதரவை நான் நினைவு கூர்கிறேன். நீங்கள் அனைவரும் மோடியின் உத்தரவாதத்தின் மீது நம்பிக்கை வைத்து, ஒரு வலுவான 'இரட்டை இன்ஜின்' அரசை அமைத்தீர்கள். இப்போது, ராஜஸ்தானில் விரைவான முன்னேற்றத்தை நாம் காண்கிறோம். இன்று, ராஜஸ்தானின் வளர்ச்சிக்காக சுமார் ரூ. 17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நாங்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளோம். இந்தத் திட்டங்களுக்கு பங்களிப்பு அளித்த ராஜஸ்தானைச் சேர்ந்த எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

February 16th, 11:07 am

வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் 17,000 கோடி மதிப்பிலான சாலைகள், ரயில்வே, சூரிய மின்சக்தி, மின் பகிர்மானம், குடிநீர், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல முக்கிய துறைகளைச் சேர்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

PM Modi addresses Grand Public Rallies in poll-bound Rajasthan’s Baran, Kota and Karauli

November 21st, 12:00 pm

Ahead of the assembly election in poll-bound Rajasthan, PM Modi addressed grand public rallies in Baran, Kota and Karauli. He said, “The people of Mewar’s intent for change in favour of BJP are clearly visible in the whole of Rajasthan”.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 104 வது அத்தியாயத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 27th, 11:30 am

எனதருமை குடும்பத்தாரே, வணக்கம். மனதின் குரலின் ஆகஸ்ட் மாதப் பகுதியில் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நிறைவான வரவேற்பை அளிக்கிறேன். இப்படி முன்பு எப்போதாவது நடந்திருக்கிறதா என்று நினைவில் இல்லை, அதாவது மழைக்கால மாதங்களில் இருமுறை மனதின் குரல் நிகழ்ச்சி இடம் பெற்றதாகத் தெரியவில்லை, ஆனால் இந்த முறை அப்படித்தான் நடக்க இருக்கிறது. மழைக்காலம் அதாவது மஹாசிவனுடைய மாதம், உற்சவம் மற்றும் உல்லாசம் நிறைந்த காலம். சந்திரயானுடைய வெற்றியின் கொண்டாட்டம் இந்த உற்சவச் சூழலுக்கு பல பங்கு உல்லாசத்தைச் சேர்த்திருக்கிறது. சந்திரயான் சந்திரனுக்குப் பயணித்து மூன்று நாட்களுக்கும் கூடுதலாக ஆகியிருக்கிறது. இந்த வெற்றி எத்தனை பெரியது என்றால், இதைப்பற்றி நாம் எத்தனை விவாதித்தாலும், அது குறைவே. நான் இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் வேளையிலே, என்னுடைய பழைய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது. …….

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் ‘அன்னையருக்கு ஊட்டச்சத்து’ முன்முயற்சிக்கு பிரதமர் பாராட்டு

February 21st, 11:26 am

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மேற்கொண்டுள்ள ‘அன்னையருக்கு ஊட்டச்சத்து’ முன்முயற்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். திரு ஓம் பிர்லா, கோட்டா பகுதியைச் சேர்ந்த ராம்கஞ்ச்மண்டி என்னுமிடத்தில் இந்த இயக்கத்தை தொடங்கிவைத்துள்ளார். ஒவ்வொரு தாயும், சேயும் ஆரோக்கியமாக இருப்பதை இந்த முன் முயற்சி இலக்காகக் கொண்டுள்ளது.

ராஜஸ்தானின் கோட்டா சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கருணைத் தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்

February 21st, 09:52 am

ராஜஸ்தானின் கோட்டா சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை வழங்கவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆதரவற்ற விலங்குகளுக்கு உதவிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு பிரதமர் திரு மோடி பாராட்டு

July 18th, 12:44 pm

இந்திய ராணுவத்திலிருந்து மேஜராக ஓய்வு பெற்று ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் வசிக்கும் திருமிகு பிரமிளா சிங்கின் அன்பு மற்றும் சேவையைப் பாராட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பொது முடக்கத்தின் போது தமது தந்தை திரு ஷியாம்வீர் சிங்குடன் இணைந்து ஆதரவற்ற விலங்குகளைப் பராமரித்து, அவற்றின் வேதனையைப் புரிந்து மேஜர் பிரமிளா சிங் உதவ முன்வந்தார். மேஜர் பிரமிளாவும் அவரது தந்தையும் தங்களது தனிப்பட்ட வைப்புத் தொகையைக் கொண்டு தெருவில் உள்ள விலங்குகளின் உணவு மற்றும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். மேஜர் பிரமிளாவைப் பாராட்டுகையில், அவரது முயற்சிகள், சமூகத்திற்கு மிகுந்த ஊக்கமளிக்கும் என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார்.

ராஜஸ்தானின் கோட்டாவில் நடந்த படகு விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

September 16th, 07:29 pm

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Prime Minister interacts with BJP Karyakartas from five Lok Sabha seats

November 03rd, 06:53 pm

The Prime Minister Narendra Modi, today interacted with BJP booth workers from Bulandshahr, Kota, Korba, Sikar and Tikamgarh Lok Sabha constituencies, through video conferencing. The interaction was sixth in the series of ‘Mera Booth Sabse Mazboot’ program.