செஸ் சாம்பியன் கொனேரு ஹம்பி பிரதமரைச் சந்தித்தார்
January 03rd, 08:42 pm
செஸ் சாம்பியன் கொனேரு ஹம்பி பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியாவிற்கு மிகுந்த பெருமையைத் தேடித் தந்ததற்காக அவரைப் பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது கூர்மையான அறிவாற்றல், அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவை தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிட்டார்.