கிஷ்ட்வார் விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
August 31st, 08:52 am
கிஷ்ட்வார் விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு ஏப்ரல் 24 அன்று பிரதமர் ஜம்மு காஷ்மீர் செல்ல இருக்கிறார்
April 23rd, 11:23 am
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 2022 ஏப்ரல் 24 அன்று காலை 11:30 மணிக்கு நாட்டில் உள்ள அனைத்து கிராம சபைகளுடன் அவர் உரையாற்றுவார். சம்பா மாவட்டத்தில் உள்ள பாலி பஞ்சாயத்துக்கும் அவர் செல்லவிருக்கிறார். இந்தப் பயணத்தின்போது ரூ. 20,000 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார். அம்ரித் சரோவர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைப்பார். இதன் பின்னர் மாலை 5 மணி அளவில் மும்பையில் மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். இங்கு அவர் முதலாவது லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதினைப் பெற்றுக் கொள்வார்.கிஷ்த்வார் சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் பிரதமர் துயரடைந்தார்
February 03rd, 08:25 pm
கிஷ்த்வார் சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.கிஷ்த்வார், கார்கிலில் மேகவெடிப்பை அடுத்து மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது: பிரதமர்
July 28th, 12:38 pm
கிஷ்த்வார், கார்கிலில் ஏற்பட்ட மேகவெடிப்பை அடுத்து அங்குள்ள நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார்.