கினலூரில் உஷா தடகள பள்ளியில் செயற்கை ட்ராக்—ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார்

June 15th, 06:39 pm

உஷா தடகள பள்ளியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “S என்றால் Skill (திறமை); P என்றால் Perseverance (பொறுமை); O என்றால் Optimism (நேர்மறை சிந்தனை); R என்றால் Resilience (உறுதி); T என்றால் விடா உறுதி (Tenacity); S என்றால் திண்மை (Stamina), என்று SPORTS-க்கு பொருள் கொள்ளலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவில் திறமைக்கு எப்போதும் குறைவில்லை, சரியான வாய்ப்பை அளித்து திறமையை வளர்க்கும் சூழலை மேம்படுத்துவதே தேவையாக உள்ளது. “நாட்டில் உள்ள பெண்கள் நம்மை பல துறைகளில் பெருமை படுத்தி உள்ளனர் – அது விளையாடு துறையில் அதிகமாக உள்ளது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.