பீகார் மாநிலம் காராக்கட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பீகார் மாநிலம் காராக்கட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

May 30th, 11:29 am

பீகார் ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான் அவர்களே, முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திரு ஜித்தன் ராம் மாஞ்சி அவர்களே, திரு லாலன் சிங் அவர்களே, திரு கிரிராஜ் சிங் அவர்களே, திரு சிராக் பாஸ்வான் அவர்களே, நித்யானந்த ராய் அவர்களே, சதீஷ் சந்திர துபே அவர்களே, மாநில துணை முதலமைச்சர் திரு சாம்ராட் சவுத்ரி அவர்களே, விஜயகுமார் சின்ஹா அவர்களே, இதர அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே, பீகாரின் எனது அருமை சகோதர சகோதரிகளே!

பீகாரின் காராகட்டில் ரூ.48,520 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

பீகாரின் காராகட்டில் ரூ.48,520 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

May 30th, 10:53 am

பீகாரின் காராகட்டில் இன்று ரூ.48,520 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்தப் புனிதபூமியில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் கடமையை தாம் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். ரூ.48,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதையும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்ததையும் அவர் எடுத்துரைத்தார். தம்மை அசீர்வதிப்பதற்கு வந்துள்ள பெருந்திரளான பீகார் மக்களுக்கு தமது நன்றியை தெரிவித்த பிரதமர், மிக உயர்ந்த அளவில் அவர்களின் ஆதரவை தாம் எப்போதும் பெற்றிருப்பதாக கூறினார். பீகாரின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் தமது பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் காணொலி மூலம் ஆற்றிய உரை

வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் காணொலி மூலம் ஆற்றிய உரை

May 29th, 06:45 pm

இன்று, ஜெகநாதரின் ஆசியுடன், நாட்டின் விவசாயிகளுக்காக ஒரு பெரிய இயக்கம் தொடங்கப்படுகிறது. வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் என்பது ஒரு தனித்துவமான முயற்சியாகும். பருவமழை நெருங்கி வருகிறது, காரீஃப் பருவத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அடுத்த 12 முதல் 15 நாட்களில், விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் அடங்கிய 2,000க்கும் மேற்பட்ட குழுக்கள் நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்குச் செல்ல உள்ளன. இந்தக் குழுக்கள் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளைச் சந்திக்க உள்ளனர். இந்தப் பிரமாண்டமான இயக்கம், இந்த லட்சியத் திட்டம் மற்றும் இந்திய விவசாயத்தின் அடித்தளமாக பிரகாசமான எதிர்காலம் ஆகியவற்றுக்காக நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும், இந்தக் குழுக்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றினார்

May 29th, 06:44 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்க நிகழ்ச்சியில் உரையாற்றினார். இந்த இயக்கம் தொடங்கப்பட்டிருப்பது, விவசாயிகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்றும், வேளாண் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒரு தனித்துவமான முயற்சி என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். பருவமழை நெருங்கி, வருவதுடன் காரீஃப் பருவத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கும் வேளையில், ​​அடுத்த 12 முதல் 15 நாட்களில், விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் அடங்கிய 2000 குழுக்கள் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குப் பயணம் செய்து கிராமங்கள் முழுவதும் லட்சக் கணக்கான விவசாயிகளைச் சென்றடையும் என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவின் விவசாயத் துறையை வலுப்படுத்துவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டி, அனைத்து விவசாயிகளுக்கும், இந்தக் குழுக்களின் பங்கேற்பாளர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

2025-26 சந்தைப் பருவத்தில் காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது

May 28th, 03:49 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2025-26-ம் ஆண்டு சந்தைப் பருவத்தில் 14 காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

வேளாண்மை, கிராமப்புற வளம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 01st, 01:00 pm

பட்ஜெட்டுக்குப் பிறகு, பட்ஜெட் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் உங்களது பங்கேற்பு மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்ச்சியில் இணைந்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டின் பட்ஜெட் எங்கள் அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் முழு பட்ஜெட் ஆகும். இந்த நிதிநிலை அறிக்கை எங்களது கொள்கைகளின் தொடர்ச்சியைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையில் புதிய விரிவாக்கத்தையும் காட்டுகிறது. பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நீங்கள் அனைவரும் அளித்த உள்ளீடுகள், ஆலோசனைகள் பட்ஜெட் தயாரிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இப்போது இந்த வரவு செலவுத் திட்டத்தை மிகவும் திறம்பட செயல்படுத்துவதிலும், சிறந்த, விரைவான பயன்களைப் பெறுவதிலும், உங்கள் பங்கு மேலும் அதிகரித்துள்ளது.

வேளாண்மை, கிராமப்புற வளம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 01st, 12:30 pm

வேளாண்மை, கிராமப்புற வளம் ஆகியவை குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (01.03.2025) உரையாற்றினார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இந்த கருத்தரங்கில் இணைந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, இந்த ஆண்டின் பட்ஜெட் அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் முழு பட்ஜெட் என்பதை எடுத்துரைத்தார், இது கொள்கைகளின் தொடர்ச்சியையும் வளர்ச்சி அடைந்த பாரத்திற்கான பார்வையின் புதிய விரிவாக்கத்தையும் காட்டுகிறது என்று அவர் கூறினார். பட்ஜெட்டுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் மதிப்புமிக்க உள்ளீடுகள், ஆலோசனைகள் ஏற்கப்பட்டதாகவும் அவை மிகவும் உதவிகரமாக இருந்தன என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டை மேலும் சிறப்பானதாக மாற்றுவதில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்கு மேலும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

2024-25 சந்தைப் பருவத்திற்கு கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

June 19th, 09:14 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (19.06.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவை, 2024-25 சந்தைப் பருவத்திற்கு கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மூன்று புதிய உரவகைகள் உட்பட பாஸ்பேட், பொட்டாஷியத்திற்கு 2024 காரிஃப் பருவத்திற்கான (01.04.2024 முதல் 30.09.2024 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

February 29th, 04:28 pm

ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய திட்டத்தின் கீழ், மூன்று புதிய உரவகைகள் உட்பட பாஸ்பேட், பொட்டாஷியத்திற்கு 2024 காரிஃப் பருவத்திற்கான (01.04.2024 முதல் 30.09.2024 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வை விவசாயிகள் வரவேற்றுள்ள நிலையில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

June 09th, 08:33 pm

விவசாயிகளின் மகிழ்ச்சி புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் பணியாற்ற அரசுக்கு ஊக்கம் அளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவுவிலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

June 07th, 05:35 pm

2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-இல் பிரதமரின் உரை

February 10th, 11:01 am

உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர்கள் கேஷவ் பிரசாத் அவர்களே, பிரஜேஷ் பதக் அவர்களே, மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளே, உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்களே, தொழில்துறை உறுப்பினர்களே, உலகளாவிய உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள தாய்மார்களே அன்பர்களே!

லக்னோவில், உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்

February 10th, 11:00 am

லக்னோவில், உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது உலகளாவிய வர்த்தக கண்காட்சியைத் தொடங்கி வைத்து, முதலீட்டாளர் உத்தரப்பிரதேசம் 2.0 திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். உத்தரபிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு என்பது உத்தரப்பிரதேச மாநில அரசின் முன்னோடி முதலீட்டு மாநாடாகும். தொழில்துறையினர், கல்வியாளர்கள், உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வருகை தருவதன் மூலம் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைக்கான வழிமுறைகள் கண்டறியப்படும்‌. நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் சுற்றிப் பார்த்தார்.

CCEA approves Minimum Support Prices (MSP) for Kharif Crops for Marketing Season 2022-23

June 08th, 05:30 pm

CCEA chaired by PM Modi has approved increase in MSP for all mandated Kharif Crops for Marketing Season 2022-23. This has been done to ensure remunerative prices to the growers for their produce and to encourage crop persification.

பிரதம மந்திரி ராய்ப்பூரில் சிறப்பு குணங்கள் கொண்ட 35 பயிர் வகைகளை தேசத்திற்கு அர்ப்பணித்து பேசிய உரையின் சுருக்கம்

September 28th, 11:01 am

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு புபேஷ் பாகல் மற்றும் எனது அமைச்சரவை சகாக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். அனைத்து துணைவேந்தர்கள், வேளாண் கல்வியோடு தொடர்புடைய விஞ்ஞானிகள் மற்றும் விவசாய சகோதர சகோதரிகளுக்கும் வணக்கம்.

சிறப்பு பண்புகள் கொண்ட 35 பயிர் வகைகளை தேசத்திற்கு பிரதமர் அர்ப்பணித்தார்

September 28th, 11:00 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்புப் பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை இணையக் கலந்தாய்வு மூலம் தேசத்திற்கு அர்ப்பணித்தார். ராய்பூரில் உள்ள தேசிய உயிர் வாழ்வு நெருக்கடி மேலாண்மை நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட வளாகத்தையும் தேசத்திற்கு பிரதமர் அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில், விவசாயப் பல்கலைக்கழகங்களுக்கான பசுமை வளாக விருதையும் பிரதமர் வழங்கினார். அத்துடன் அந்த இணையக் கலந்தாய்வில், புதுமையான முறைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளிடையே அவர் உரையாற்றினார்.