3-வது கவுடில்யா பொருளாதார மாநாடு 2024-ல் பிரதமர் ஆற்றிய உரை
October 04th, 07:45 pm
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்.கே.சிங் அவர்களே, இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள இதர சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே! இது கௌடில்யர் மாநாட்டின் மூன்றாவது பதிப்பாகும். உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த மூன்று நாட்களில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் பல அமர்வுகள் இங்கு நடைபெறும். இந்த விவாதங்கள் இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்த உதவும் என்று நான் நம்புகிறேன்.புதுதில்லியில் நடைபெற்ற மூன்றாவது கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
October 04th, 07:44 pm
புதுதில்லியில் இன்று (04.10.2024) நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நிதி அமைச்சகத்துடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌடில்யா பொருளாதார மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவி-பொருளாதார பாதிப்பு, வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைத் தவிர்ப்பதற்கான கொள்கைகள் போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தியது.அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
October 03rd, 10:50 am
மூன்றாவது கௌடில்யர் பொருளாதார மாநாடு, அக்டோபர் 4 முதல் 6 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவிசார் பொருளாதார பாதிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைப் பாதுகாப்பதற்கான கொள்கை நடவடிக்கைக்கான கோட்பாடு போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தும். புதுதில்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில், அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் நடைபெறும் கௌடில்யா பொருளாதார மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார். மூன்றாவது கௌடில்யர் பொருளாதார மாநாடு, அக்டோபர் 4 முதல் 6 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவிசார் பொருளாதார பாதிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைப் பாதுகாப்பதற்கான கொள்கை நடவடிக்கைக்கான கோட்பாடு போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தும். இந்திய மற்றும் சர்வதேச அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் இந்தியப் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய தெற்கின் பொருளாதாரங்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சில பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர். இந்த மாநாட்டில், உலகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். கௌடில்யா பொருளாதார மாநாட்டுக்கு, பொருளாதார வளர்ச்சி நிறுவனம், நிதி அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.