புதுதில்லியில் முதலாவது போடோலாந்து மஹோத்சவ தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 15th, 06:32 pm
அசாம் ஆளுநர் திரு லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா அவர்களே, காணொலி மூலம் நம்முடன் இணைந்துள்ள முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மேடையில் குழுமியிருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களே, சகோதர, சகோதரிகளே! வணக்கம்.தில்லியில் முதலாவது போடோலாந்து மஹோத்சவத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
November 15th, 06:30 pm
அமைதியை நிலைநிறுத்தவும், துடிப்பான போடோ சமூகத்தை உருவாக்கவும் மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகியவை குறித்த இரண்டு நாள் மாபெரும் நிகழ்ச்சியான முதலாவது போடோலாந்து மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.கார்த்திகை பவுர்ணமி, தேவ் தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
November 15th, 04:55 pm
கார்த்திகை பவுர்ணமி, தேவ் தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.Tribal society is the one that led the fight for centuries to protect India's culture and independence: PM Modi
November 15th, 11:20 am
PM Modi addressed Janjatiya Gaurav Diwas, emphasizing India's efforts to empower tribal communities, preserve their rich heritage, and acknowledge their vital role in nation-building.பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
November 15th, 11:00 am
பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் ஜமுயில் இன்று ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பழங்குடியினர் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரைப் பிரதமர் வரவேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில் இணைந்த எண்ணற்ற பழங்குடியின சகோதர சகோதரிகளையும் பிரதமர் வரவேற்றார். கார்த்திகை பூர்னிமா, தேவ் தீபாவளி, ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 555-வது பிறந்த நாள் ஆகியவை அனுசரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அதற்காக இந்திய குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் நாள் என்பதால் குடிமக்களுக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் கூறினார். இந்தியக் குடிமக்கள், குறிப்பாக பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இன்றைய பழங்குடியினர் கௌரவ தினத்திற்கு முன்னோட்டமாக கடந்த 3 நாட்களில் தூய்மை இயக்கம் ஜமுயில் நடைபெற்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இயக்கத்திற்காக, ஜமுய் நிர்வாகம், குடிமக்கள், குறிப்பாக பெண்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.ஐதராபாத்தில் நடந்த கோடி தீப உற்சவத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
November 27th, 08:18 pm
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த கோடி தீப உற்சவத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி, கோவிட் தொற்றுநோயின் முக்கியமான நேரத்தில் கூட, தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளையும், சவால்களையும் சமாளிக்க நாங்கள் தீபங்களை ஏற்றினோம் என்று கூறினார். மக்கள் நம்பி, ‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பதை’ வெளிப்படுத்தும் போது, லட்சக்கணக்கான இந்தியர்களின் அதிகாரமளிப்புக்காக தீபங்களை ஏற்றுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் பல்வேறு தொழிலாளர்களின் நலனுக்காகவும் அவர் பிரார்த்தனை செய்தார்.கார்த்திகை பௌர்ணமி மற்றும் தேவ் தீபாவளியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
November 27th, 07:57 am
கார்த்திகை பௌர்ணமி மற்றும் தேவ் தீபாவளியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.