We are laying a strong foundation for India's next thousand years: PM Modi in Austria

July 10th, 11:00 pm

PM Modi addressed the Indian community in Vienna. He spoke about the transformative progress achieved by the country in the last 10 years and expressed confidence that India will become the third largest economy in the near future, on its way to becoming a developed country - Viksit Bharat - by 2047.

ஆஸ்திரியாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரை

July 10th, 10:45 pm

வியன்னாவில் இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமருக்கு உற்சாகமான மற்றும் சிறப்பான வரவேற்பை அவர்கள் வழங்கினார்கள். ஆஸ்திரிய மத்திய தொழிலாளர் மற்றும் பொருளாதார அமைச்சர் மேதகு திரு மார்ட்டின் கோச்சரும் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.

ஆஸ்திரிய-இந்திய தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

July 10th, 07:01 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும், ஆஸ்திரிய பிரதமர் திரு கார்ல் நெஹாமரும், உள்கட்டமைப்பு, வாகன உற்பத்தி, எரிசக்தி, பொறியியல், புதிய தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி ஆஸ்திரிய, இந்திய நிறுவனங்களைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகளிடையே இன்று (10.07.2024) கூட்டாக உரையாற்றினர்.

பிரதமர் மோடி ஆஸ்திரியாவின் வியன்னா சென்றடைந்தார்

July 09th, 11:45 pm

பிரதமர் நரேந்திர மோடி தனது இரு நாடுகளுக்கான பயணத்தின் இரண்டாவது கட்டத்தின் தொடக்கமாக ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்கு வந்தார். பிரதமர் தனது பயணத்தின் போது, ​​அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன் மற்றும் அதிபர் கார்ல் நெஹம்மர் ஆகியோரை சந்திக்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் செல்வது இதுவே முதல்முறை.

இந்தியப் பிரதமரின் வருகைக்கு ஆஸ்திரியப் பிரதமர் வரவேற்பு தெரிவித்துள்ளார்: பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்

July 07th, 08:57 am

ஆஸ்திரியாவுக்குக் கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் வருகை தருவதற்கு வரவேற்பு தெரிவித்து அந்நாட்டுப் பிரதமர் திரு கார்ல் நெஹம்மர் தெரிவித்த கருத்துகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.நாற்பது ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் முதல் முறையாக வருகை தருவது சிறப்பு மிக்கதாகும். இந்தியாவுடனான தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் தருணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இது அமைகிறது என்று ஆஸ்திரியப் பிரதமர் திரு கார்ல் நெஹம்மர் குறிப்பிட்டிருந்தார்.

ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு ஜூலை 08 முதல் 10-ம் தேதி வரை பிரதமர் பயணம்

July 04th, 05:00 pm

ரஷ்யா- ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 08 முதல் 10 வரை அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.