கத்வா பட்டிடார் சமாஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

May 11th, 12:48 pm

கட்ச்சி படேல்கள் கட்ச் பகுதியின் பெருமிதம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமிதம். இந்தியாவின் எந்தப் பகுதிக்கு நான் சென்றாலும் அந்தப்பகுதியில் இந்த சமூகத்தின் மக்களைக் காண்கிறேன். எனவே, கடலில் மீன் போல, கட்ச் மக்கள் உலகம் முழுவதும் சுற்றிவருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் எங்கே வாழ்கிறார்களோ அங்கே கட்ச்சை உருவாக்குகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாரதா பீடத்தின் ஜகத்குரு பூஜ்ஜிய சங்கராச்சார்ய சுவாமி சதானந்த் சரஸ்வதி, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய அமைச்சரவையின் எனது சகா புருஷோத்தம் பாய் ரூபாலா, அகில இந்திய கட்ச் கத்வா பட்டிடார் சமாஜின் தலைவர் திரு அப்ஜீபாய் விஷ்ரம் பாய் கனானி, இதர நிர்வாகிகள் மற்றும் இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ள எனது சகோதர, சகோதரிகளே!

கத்வா பட்டிடார் சமாஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்

May 11th, 12:10 pm

கத்வா பட்டிடார் சமாஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.