கொவிட்-19 நிலைமையை ஆய்வு செய்வதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 08th, 09:24 pm
தற்போதைய நிலைமையின் தீவிரத்தை அலசும் போது நீங்கள் அனைவரும் பல்வேறு முக்கியமான கருத்துகளையும், அவசியமான ஆலோசனைகளையும் வெளிப்படுத்தினீர்கள். இறப்பு விகிதமும், தொற்று பரவலும் அதிகரித்து வரும் மாநிலங்களுடன் சிறப்பு ஆலோசனைகள் நடத்துவது என்பது இயற்கையானது. அதே சமயம், இதர மாநிலங்களிடமும் நல்ல ஆலோசனைகள் இருக்கலாம். எனவே, யுக்தி ஏதாவதை வகுக்கக்கூடிய நேர்மறை ஆலோசனைகள் ஏதேனும் இருந்தால் என்னிடம் தெரிவிக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.கொவிட்-19 நிலைமை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
April 08th, 09:23 pm
கொவிட்-19 நிலைமை குறித்து பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று கலந்துரையாடினார்.