நார்வே பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

November 19th, 05:44 am

இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு பிரதமர்களும் ஆய்வு செய்ததுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதித்தனர். இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் – வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (இந்தியா-EFTA-TEPA) கையெழுத்தானது என்பது இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்ட இரு தலைவர்களும், நார்வே உள்ளிட்ட இஎஃப்டிஏ நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான அதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

பிரதமருக்கும் நார்வே பிரதமர் மேன்மைதங்கிய திரு. ஜோனாஸ் கர் ஸ்டோருக்கும் இடையே தொலைபேசி உரையாடல்

September 09th, 07:57 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.08.2022) நார்வே பிரதமர் மேன்மைதங்கிய திரு. ஜோனாஸ் கர் ஸ்டோருடன் தொலைபேசியில் உரையாடினார்.

பிரதமர் மோடி, நார்வே பிரதமருடன் சந்திப்பு

May 04th, 02:25 pm

இந்தியா நார்டிக் இரண்டாவது மாநாட்டுக்கு இடையே கோபன்ஹேகனில் பிரதமர் திரு நரேந்திர மோடி, நார்வே பிரதமர் திரு ஜோனாஸ் கர் ஸ்டோரை சந்தித்து பேசினார். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நார்வே பிரதமர் திரு ஸ்டோர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதன் முறையாக இரு தலைவர்களும் சந்தித்து கொண்டனர்.

நார்வே பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு.ஜோனஸ் கர் ஸ்டோர்-க்கு பிரதமர் வாழ்த்து

October 16th, 09:38 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி, நார்வே பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு.ஜோனஸ் கர் ஸ்டோர்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.