பூடான் மன்னரையும் ராணியையும் பிரதமர் வரவேற்றார்
December 05th, 03:42 pm
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்க்யெல் வாங்சுக், பூடான் ராணி ஜெட்சன் பெமா வாங்சுக் ஆகியோரை பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று (05.12.2024) வரவேற்றார். மன்னருக்கும் ராணிக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், 2024 மார்ச் மாதத்தில் தமது அரசுமுறைப் பயணத்தின்போது பூடான் அரசும், மக்களும் அளித்த அன்பான விருந்தோம்பலை நினைவுகூர்ந்தார்.பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு பூட்டான் மன்னர் வாழ்த்து
June 05th, 08:05 pm
மன்னரின் அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பூட்டான் மற்றும் இந்தியா இடையே நிலவும் முன்மாதிரியான நட்புறவை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், பூட்டான் அரசுடன் இணைந்து பணியாற்றவும், தனித்துவமான இருதரப்பு பங்களிப்பை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லவும் இந்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறினார்.பூடான் மன்னருடன் பிரதமர் சந்திப்பு
March 22nd, 06:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியெல் வாங்சுக்கை திம்புவில் இன்று சந்தித்தார். பாரோவிலிருந்து திம்பு வரையிலான பயணத்தின் வழியெங்கும் மக்கள் அவருக்கு அளித்த சிறப்பான வரவேற்புக்காக மாட்சிமை தங்கிய மன்னருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.பிரதமர் பூடான் சென்றடைந்தார்
March 22nd, 09:53 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முதல் இரண்டு நாட்கள் (2024 மார்ச் 22 முதல் 23 வரை) பூடானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி இன்று அவர் பாரோ சென்றடைந்தார். இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே வழக்கமான உயர்மட்ட பயணம் மற்றும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற மத்திய அரசின் நோக்கத்திற்கு ஏற்ப இந்தப் பயணம் அமைந்துள்ளது.பிரதமர் பூடான் பயணம் மேற்கொள்கிறார் (மார்ச் 21-22, 2024)
March 22nd, 08:06 am
இந்தப் பயணத்தின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் மற்றும் பூடானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் ஆகியோரை பிரதமர் சந்திக்க உள்ளார். பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேவுடனும் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கை பிரதமர் சந்தித்தார்
April 04th, 06:00 pm
இதுகுறித்து, பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;