ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

November 16th, 08:23 am

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவிகளை வழங்கி வருகிறது என்று அவர் உறுதியளித்தார்.

'மன் கீ பாத்' (மனதின் குரல்) கேட்பவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள்: பிரதமர் மோடி

September 29th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்களோடு இணைய, மீண்டுமொரு சந்தர்ப்பம். இன்றைய பகுதி என்னை உணர்ச்சியிலாழ்த்துவது, பழைய நினைவுகள் என்னைச் சூழ்ந்து விட்டன. ஏன் தெரியுமா? நம்முடைய மனதின் குரலுக்கு பத்து வயதாகி விட்டது; பத்தாண்டுகள் முன்பாக மனதின் குரல் அக்டோபர் 3ஆம் தேதியன்று, விஜயதசமி நன்னாளன்று தொடங்கப்பட்டது. அந்த நாள் எத்தனை புனிதமான நாள்!!! இது இயல்பாக அமைந்த ஒன்று. இதோடு கூடவே, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று நாம் மனதின் குரலின் பத்தாண்டுகளை நிறைவு செய்யும் அதே வேளையிலே, நவராத்திரி புண்ணிய காலத்தின் முதல் நாளுமாகவும் இருக்கும். மனதின் குரலின் இந்த நீண்டநெடிய பயணத்திலே பல கட்டங்களை என்னால் மறக்க இயலாது. மனதின் குரலில் கோடிக்கணக்கான நேயர்கள் நம்முடைய இந்தப் பயணத்தின் போது கூட்டாளிகளாக இருந்தார்கள், தொடர்ந்து எனக்குத் தோள் கொடுத்தும் வந்தார்கள். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் தகவல்களை எனக்குத் திரட்டித் தந்தார்கள். மனதின் குரலின் நேயர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் உண்மையான சூத்திரதாரிகள். காரசாரமான விஷயம் இல்லையென்று சொன்னால், எதிர்மறை விஷயங்கள் இல்லையென்று சொன்னால், அந்த விஷயமோ, நிகழ்ச்சியோ அதிக கவனத்தைப் பெறாது என்று பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. ஆனால் ஆக்கப்பூர்வமான தகவல்களுக்காக நாட்டுமக்களிடத்திலே எத்தனை தாகம் இருக்கிறது, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், உத்வேகமளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுகள், நம்பிக்கையூட்டக்கூடிய சம்பவங்கள் ஆகியவற்றை மக்கள் எத்தனை பேரார்வத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள் என்பதை மனதின் குரலின் வெற்றி நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சகோரப் பறவை என்று ஒன்று உண்டு, இது மழைநீர்த்துளிகளை மட்டுமே பருகி உயிர் வாழுமாம். மக்களும் கூட இந்த சகோரப் பறவையைப் போலவே, தேசத்தின் சாதனைகளையும், மக்களின் சமூகரீதியான சாதனைகளையும் எந்த அளவுக்கு பெருமிதத்தோடு செவி மடுக்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் மனதின் குரலில் பார்த்தோம். மனதின் குரலின் பத்தாண்டுக்காலப் பயணம் எப்படிப்பட்டதொரு மாலையைத் தயாரித்திருக்கிறது என்று சொன்னால், இதன் ஒவ்வொரு பகுதியிலும் புதிய காதைகள், புதிய உயர்வுகள், புதிய ஆளுமைகள் இணைந்து கொண்டே வருகின்றன. நமது சமூகத்தின் சமூக உணர்வோடு கூட அரங்கேறும் செயல்களுக்கு மனதின் குரல் வாயிலாக கௌரவம் கிடைக்கிறது. அந்த வேளையிலே மனதின் குரலுக்காக வந்திருக்கும் கடிதங்கள் என் நெஞ்சையும் கூட பெருமிதத்தில் விம்மச் செய்கின்றன. நம்முடைய தேசத்திலே தான் எத்தனை திறமைசாலிகள் இருக்கின்றார்கள்!! அவர்களிடம் தேசம் மற்றும் சமூகத்திற்கு சேவை புரிய வேண்டும் என்று எத்தனை தாகம் இருக்கிறது!! சுயநலமற்ற தன்மையோடு சேவை செய்ய இவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்கின்றார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வேளையிலே என்னுள்ளும் ஆற்றல் பொங்குகிறது. மனதின் குரலின் இந்த மொத்தச் செயல்பாடும் என்னைப் பொறுத்த வரையில் எப்படிப்பட்டதென்றால், இது ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதற்கு ஒப்பானது. மனதின் குரலின் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும், ஒவ்வொரு கடிதத்தையும் நான் நினைத்துப் பார்க்கும் போது, மக்களாகிய மகேசர்கள் எனக்கு இறைவனாரின் வடிவங்கள், அவர்களை நான் தரிசனம் செய்கிறேன் என்றே நான் உணர்கிறேன்.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.

September 05th, 10:09 pm

உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்கு பொதுமக்கள் பங்கேற்பு மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார் இந்த உன்னதப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பிரதமர் திரு. மோடி வாழ்த்து தெரிவித்தார்

போபால் - புதுதில்லி இடையே வந்தே பாரத் விரைவு ரயிலைத் தொடங்கி வைத்து பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம்

April 01st, 03:51 pm

ராமநவமி அன்று இந்தூர் கோவிலில் நடந்த சோகம் குறித்து முதலில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தால் நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன் அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

மத்திய பிரதேசம் போபாலில் உள்ள ராணி கமலாபதி நிலையத்தில் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

April 01st, 03:30 pm

போபால் மற்றும் புது தில்லி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரதமர் ராணி கமலாபதி புது தில்லி வந்தே பாரத் - எக்ஸ்பிரஸை ஆய்வு செய்தார். ரயிலில் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

உலகத்தரம் வாய்ந்த ஜான்சி ரயில் நிலையம் ஜான்சி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் சுற்றுலா மற்றும் வர்த்தகம் அதிகரிப்பதை உறுதி செய்யும்: பிரதமர்

March 26th, 10:54 am

உலகத் தரம் வாய்ந்த ஜான்சி ரயில் நிலையம் ஜான்சி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில், சுற்றுலா மற்றும் வர்த்தகம் அதிகரிப்பதை உறுதி செய்யும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் நவீன ரயில் நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகளின் ஒருங்கிணைந்த பகுதி இது என்றும் பிரதமர் திரு.மோடி கூறினார்.

ராணி லட்சுமிபாய் ஜெயந்தியை முன்னிட்டு அவரை பிரதமர் நினைவுகூர்ந்தார்

November 19th, 08:58 am

ராணி லட்சுமிபாய் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்துள்ளார். நமது துணிச்சலையும், தேசத்திற்கு அவரது மகத்தான பங்களிப்பையும் ஒருபோதும் மறக்க முடியாது என்று திரு மோடி கூறினார்.

PM Modi addresses a public meeting in Fatehpur, Uttar Pradesh

February 17th, 04:07 pm

Addressing an election rally in Uttar Pradesh’s Fatehpur to campaign for the BJP for the upcoming state polls, Prime Minister Narendra Modi said, “I am coming from Punjab. The mood in Punjab is to vote for BJP. Every phase of UP polls is voting for BJP. The people of Uttar Pradesh are determined to hold colourful celebrations of victory on 10th March, ahead of Holi.”

Coronavirus and those opposing vaccine are scared of it: PM Modi in Fatehpur, Uttar Pradesh

February 17th, 04:01 pm

Addressing an election rally in Uttar Pradesh’s Fatehpur to campaign for the BJP for the upcoming state polls, Prime Minister Narendra Modi said, “I am coming from Punjab. The mood in Punjab is to vote for BJP. Every phase of UP polls is voting for BJP. The people of Uttar Pradesh are determined to hold colourful celebrations of victory on 10th March, ahead of Holi.”

என்சிசி தினத்தையொட்டி என்சிசி-யினருக்கு பிரதமர் வாழ்த்து

November 28th, 06:14 pm

தேசிய மாணவர் படை தினத்தையொட்டி, தேசிய மாணவர் படையினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். என்சிசி முன்னாள் மாணவர் சங்கத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என்று என்சிசி முன்னாள் மாணவர் படையினரை திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.

இது இந்தியாவின் வளர்ச்சிக் கதையின் திருப்புமுனை: ‘மன் கீ பாத்’-தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

November 28th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று நாம் மீண்டும் ஒரு முறை மனதின் குரலுக்காக இணைந்திருக்கிறோம். இரண்டு நாட்கள் கழித்து டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கின்றது, டிசம்பர் வந்து விட்டாலே மனோவியல்ரீதியாக, ஆண்டு நிறைவடைந்து விட்டது போன்ற ஒரு உணர்வு பிறந்து விடும். இது ஆண்டின் இறுதி மாதம், புதிய ஆண்டிற்குத் தயாராகும் நடவடிக்கைகளைத் தொடங்கி விடுவோம். இந்த மாதத்தில் தான் கடற்படை தினம் மற்றும் இராணுவப் படைகளின் கொடிநாளை தேசம் கொண்டாடுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் ராஷ்டிர ரக்க்ஷா சம்பர்பன் பர்வ் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்

November 19th, 05:39 pm

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் நடந்த 'ராஷ்ட்ர ரக்ஷா சம்பர்பன் பர்வ்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். ஜான்சி கோட்டை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ராஷ்ட்ர ரக்ஷா சமர்பன் பர்வ்'-வைக் கொண்டாடும் பிரமாண்ட விழாவில், பாதுகாப்பு அமைச்சகத்தின் பல புதிய முன்முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் 'ராஷ்ட்ர ரக்ஷா சம்பர்பன் பர்வ்' நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்

November 19th, 05:38 pm

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் நடந்த 'ராஷ்ட்ர ரக்ஷா சம்பர்பன் பர்வ்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். ஜான்சி கோட்டை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ராஷ்ட்ர ரக்ஷா சமர்பன் பர்வ்'-வைக் கொண்டாடும் பிரமாண்ட விழாவில், பாதுகாப்பு அமைச்சகத்தின் பல புதிய முன்முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

உ.பி. மகோபாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

November 19th, 02:06 pm

உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் அவர்களே, கர்மயோகி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம்!

உத்தரப்பிரதேசம், மகோபாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

November 19th, 02:05 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசத்தின் மகோபாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள், இந்தப் பிராந்தியத்தின் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்சினையை அகற்றுவதுடன், விவசாயிகளுக்குத் தேவையான நிம்மதியைக் கொண்டு வரும். அர்ஜூன் சகாயக் திட்டம், ரட்டவுலி அணை, பாவனி அணை திட்டங்கள், மஜ்கான்-சில்லி தெளிப்பான் திட்டம் ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும். இந்த திட்டங்களின் மொத்த செலவு ரூ.3250 கோடிக்கும் அதிகமாகும். இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், மகோபா, ஹமீர்பூர், பண்டா, லலித்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 65000 ஹெக்டேர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும். இதனால், இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பலனடைவர். இந்தத் திட்டங்கள் பிராந்தியத்துக்கு குடிநீரையும் வழங்கும். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல், முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக் கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை

September 14th, 12:01 pm

உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல் அவர்களே, பிரபலமான மற்றும் அதிரடியாக செயல்படும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா அவர்களே, உத்தரப்பிரதேச அரசின் அமைச்சர்களே, மற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, அலிகாரைச் சேர்ந்த எனது அருமை சகோதர, சகோதரிகளே.

அலிகரில் உள்ள ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

September 14th, 11:45 am

அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்தின் அலிகார் முனையின் கண்காட்சி மாதிரிகள் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்தையும் பிரதமர் பார்வையிட்டார்

அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்திற்கு செப்டம்பர் 14-ஆம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

September 13th, 11:20 am

அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்திற்கு செப்டம்பர் 14-ஆம் தேதி நண்பகல் 12 மணி அளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவார். இதைத் தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் உரையாற்றுவார். அலிகாரில் அமைக்கப்படவுள்ள உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பு தொழில் வழித்தடம் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்தின் கண்காட்சி மாதிரிகளையும் பிரதமர் பார்வையிடுவார்.

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற மாபெரும் தலைவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

March 12th, 03:21 pm

சுதந்திரப் போரின் அனைத்து வீரர்கள், இயக்கங்கள், எழுச்சி மற்றும் போராட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.

‘விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்’ முன்னோட்ட நிகழ்ச்சிகள் தொடக்க விழாவில் பிரதமரின் உரை

March 12th, 10:31 am

இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து ‘பாதயாத்திரை’(சுதந்திர யாத்திரை) மற்றும் விடுதலையின் அம்ருத் மகோத்சவ முன்னோட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.