குஜராத்தின் ஜம்புகோடாவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் உரை
November 01st, 01:12 pm
மேலும் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிகழ்ச்சியில், மன்கர் தாமில் உள்ள கோவிந்த் குரு மற்றும் ஆயிரக்கணக்கான பழங்குடி சகோதர, சகோதரி தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் பழங்குடியினரின் மகத்தான தியாகங்களுக்கு வணக்கம் செலுத்தும் வாய்ப்பைப் பெற்றேன். இப்போது நான் உங்களுடன் ஜம்புகோடாவில் இருக்கிறேன். பழங்குடி சமூகத்தின் மாபெரும் தியாகங்களுக்கு ஜம்புகோடா சாட்சியாக இருந்துள்ளது. ஷஹீத் ஜோரியா பரமேஷ்வர், ரூப் சிங் நாயக், கலலியா நாயக், ரவ்ஜிதா நாயக் மற்றும் பாபரியா கல்மா நாயக் போன்ற அழியாப்புகழ் பெற்ற தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு இன்று நமக்குக் கிடைத்துள்ளது. இன்று நாம் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான திட்டங்களுடன் அடிப்படை வசதிகளை விரிவுபடுத்துகிறோம். அதற்காக அடிக்கல் நாட்டப்படும் இந்த திட்டங்கள் பழங்குடி சமூகத்தின் பெருமையுடன் தொடர்புடையவை. கோவிந்த் குரு பல்கலைக்கழகத்தின் நிர்வாக வளாகம் மிகவும் அழகாக மாறிவிட்டது. மேலும் இந்தப் பகுதியில் கேந்திரிய வித்யாலயா அல்லது மத்தியப் பள்ளி நிறுவப்பட்டதன் மூலம், எனது வருங்கால சந்ததியினர் நாட்டின் கொடியை மிகவும் பெருமையுடன் உயர்த்துவார்கள். இந்தத் திட்டங்கள் அனைத்திற்கும் அதிக எண்ணிக்கையில் வந்துள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!குஜராத் மாநிலம் ஜம்புகோதாவில் ரூ.860 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்
November 01st, 01:11 pm
குஜராத் மாநிலம் பஞ்ச் மஹால், ஜம்புகோதாவில் ரூ.860 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன் புதிய திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.