ஜமைக்கா பிரதமர் மேதகு டாக்டர் ஆண்ட்ரூ ஹோல்னெஸின் இந்திய பயணத்தின் போது செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

October 01st, 12:30 pm

இந்தியாவுக்கும், ஜமைக்காவுக்கும் இடையே, இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஜமைக்கா பிரதமரின் அலுவலகம் ஆகியவற்றின் மூலம், நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட வெற்றிகரமான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜமைக்கா பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட பத்திரிகை அறிக்கை

October 01st, 12:00 pm

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் ஹோல்னெஸ் மற்றும் அவரது குழுவினரை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் ஹோல்னெஸ் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். அதனால்தான் இந்தப் பயணத்துக்கு நாம் விசேஷ முக்கியத்துவம் கொடுக்கின்றோம். பிரதமர் ஹோல்னெஸ் இந்தியாவின் நீண்டகால நண்பர். அவரை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு முறையும், இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது உறுதிப்பாட்டை நான் உணர்ந்தேன். அவரது வருகை நமது இருதரப்பு உறவுகளுக்கு புதிய சக்தியைக் கொண்டு வருவதுடன், ஒட்டுமொத்த கரீபியன் பிராந்தியத்துடனும் நமது ஈடுபாட்டை மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

பிரதமர் மோடிக்கு ஜமைக்கா பிரதமர் வாழ்த்து

July 04th, 08:14 pm

ஜமைக்கா பிரதமர் திரு.ஆன்ட்ரு மைக்கேல் ஹோல்னஸ், பிரதமர் திரு.மோடியுடன் தொலைபேசியில் பேசி, அவருக்கும், தேர்தலில் அவரது கட்சி பெற்ற வரலாற்று வெற்றிக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.