ஓஎஸ்பி (இதர சேவை அளிப்பவர்களுக்கான) வழிகாட்டுதல்கள் மேலும் தாராளமயமாக்கப்பட்டுள்ளன
June 23rd, 04:51 pm
ஓஎஸ்பி-க்கான (இதர சேவை அளிக்கும் நிறுவனங்கள்) வழிகாட்டுதல்களை, தொலை தொடர்புத்துறை மேலும் தாராளமயமாக்கியுள்ளதாக, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். இந்த வெளியிடப் பணி நிறுவனங்கள்(பிபிஒ), இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஒலி அடிப்படையிலான சேவைகளை வழங்குகின்றன. இன்று வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள், ஓஎஸ்பி நிறுவனங்களுக்கு கடந்த 2020 நவம்பரில் வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை மேலும் தாராளமயமாக்கியுள்ளது.