ரோஷ் ஹஷானா பண்டிகையை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

October 02nd, 05:15 pm

ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு இஸ்ரேல் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத சமூகத்தினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்

September 30th, 08:21 pm

இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு. பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமருடன் பேச்சுவார்த்தை

August 16th, 05:42 pm

இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து

June 06th, 08:58 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு பெஞ்சமின் நேதன்யாஹூ தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்.

December 19th, 06:38 pm

இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

யூத மக்களுக்கு பிரதமர் ஹனுக்கா பண்டிகை வாழ்த்து

December 07th, 07:55 pm

இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஹனுக்கா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதிவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் டேக் செய்துள்ளார்.

இஸ்ரேல் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

December 01st, 06:44 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (2023 டிசம்பர் 1) துபாயில் நடைபெற்ற ஐநா பருவ நிலை (சிஓபி 28) உச்சிமாநாட்டின்போது இஸ்ரேல் நாட்டின் அதிபர் திரு ஐசக் ஹெர்சாக்-ஐ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

Human-Centric approach should be the way forward for G20 Nations: PM Modi

November 22nd, 09:39 pm

PM Modi made the concluding remarks at the Virtual G20 Summit. He emphasized on the path-breaking G20 Leaders' Declaration that was accorded a unanimous acceptance. He also reiterated the commitment of 'Zero Tolerance' to terrorism and reinforced the concept of the 'Two State Solution' for the Israel-Palestine conflict.

காணொலி வாயிலான ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் (நவம்பர் 22, 2023) பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

November 22nd, 06:37 pm

எனது அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்களின் சார்பாக, உங்கள் அனைவரையும் மனதார வரவேற்கிறோம்.

எகிப்து அதிபருடன் பிரதமர் திரு மோடி தொலைபேசி வாயிலாக உரையாடல்

October 28th, 08:16 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, எகிப்து அதிபர் மேதகு அப்தெல் ஃபத்தா எல்-சிசியுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.

கோவாவில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 26th, 10:59 pm

கோவா ஆளுநர் திரு. பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை அவர்களே, முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்களே, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களே, மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது பிற சகாக்களே, மேடையில் உள்ள பிரதிநிதிகளே, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா அவர்களே, அனைத்து வீரர்கள், உதவி ஊழியர்கள், பிற அதிகாரிகள் மற்றும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்துள்ள இளம் நண்பர்களே…, இந்திய விளையாட்டுகளின் பிரமாண்ட பயணம் இப்போது கோவாவை அடைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வண்ணங்களும், உற்சாகமும் உள்ளது. கோவாவின் காற்றில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது. 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

கோவாவில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் தொடங்கி வைத்தார்

October 26th, 05:48 pm

கோவாவின் மார்கோவாவில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 28 இடங்களில் 43-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.

பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் திரு மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்

October 19th, 08:14 pm

காஸாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பொதுமக்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சு

October 10th, 05:00 pm

இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்களின் விளைவாக இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்த பிரதமர், இந்தக் கடினமான தருணத்தில் இஸ்ரேலுடன் இந்திய மக்கள் உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

கடினமான இத்தருணத்தில் இஸ்ரேலுடன் இந்திய மக்கள் உறுதியாக துணை நிற்கின்றனர்: பிரதமர்

October 10th, 04:07 pm

இஸ்ரேல் நாட்டில் நிலவும் நிலைமை குறித்த தகவலைத் தமக்குத் தெரிவித்ததற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்தார்.

இஸ்ரேலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்

October 07th, 05:47 pm

இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் இந்தியா ஒற்றுமையாக துணை நிற்கிறது என்றும், எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்குப் பிரதமர் ரோஷ் ஹஷானா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்

September 15th, 02:47 pm

ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நட்புக்குரிய இஸ்ரேல் மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தி திரைப்படங்களின் வசனங்களுடன் இந்தி தினத்தை கொண்டாடியதற்காக இஸ்ரேல் தூதரகத்திற்கு பிரதமர் பாராட்டு

September 14th, 11:05 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இஸ்ரேல் தூதரகம் இந்தி தினத்தை கொண்டாடியதை இந்தி திரைப்படங்களின் பிரபலமான வசனங்கள் மூலம் பாராட்டியுள்ளார். தூதரகத்தின் முயற்சி மகத்தானது என்று பிரதமர் கூறினார்.

இஸ்ரேல் பிரதமருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சு

August 24th, 09:47 pm

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு பெஞ்சமின் நெதன்யாகுவிடம் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து பெற்றார்.

இஸ்ரேல் நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

April 26th, 06:39 pm

இஸ்ரேல் நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.