ஸ்ரீல பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் 125வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் ஆங்கில மொழியாக்கத்தின் சாரம்
September 01st, 04:31 pm
ஹரே கிருஷ்ணா! இந்த நிகழ்ச்சியில் நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி, இஸ்கான் அமைப்பின் தலைவர் ஸ்ரீ கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சக கிருஷ்ண பக்தர்கள் அனைவரும் இணைந்துள்ளனர்.ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு நினைவு நாணயம் ஒன்றை பிரதமர் வெளியிட்டார்
September 01st, 04:30 pm
ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு நினைவு நாணயம் ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று வெளியிட்டார். மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இந்தியாவின் இளைஞர்கள் புதிய மற்றும் பெரிய அளவில் ஏதாவது செய்ய விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’-தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
August 29th, 11:30 am
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்தநாள் என்பது நம்மனைவருக்கும் தெரியும். நமது தேசம் அவருடைய நினைவைப் போற்றும் வகையிலே இந்த நாளை தேசிய விளையாட்டுக்கள் தினமாகக் கொண்டாடவும் செய்கிறது. என் மனதில் ஓர் எண்ணம்…. ஒரு வேளை மேஜர் தியான்சந்த் அவர்களின் ஆன்மா எங்கே இருந்தாலும், மிகவும் சந்தோஷத்தை அனுபவிக்கும் இல்லையா? ஏனென்றால் உலகெங்கிலும் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் முரசை தியான்சந்த் அவர்களின் ஹாக்கி தான் ஓங்கி ஒலிக்கச் செய்தது. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் கழித்து, பாரதநாட்டின் இளைஞர்கள், ஆடவர் மற்றும் பெண்கள், ஹாக்கியில் மீண்டும் ஒரு முறை உயிரூட்டியிருக்கின்றார்கள். எத்தனைப் பதக்கங்கள் கிடைத்தாலும், ஹாக்கியில் பதக்கம் கிடைக்காத வரையில் பாரத நாட்டின் எந்த ஒரு குடிமகனுக்கும் முழுமையான ஆனந்தம் கிடைக்காது.நண்பர்களே, நாட்டின் மிக எளிய குடிமகன் இந்த மாற்றத்தை உணர்ந்திருக்கிறார்.
December 27th, 11:30 am
நண்பர்களே, நாட்டின் மிக எளிய குடிமகன் இந்த மாற்றத்தை உணர்ந்திருக்கிறார். நான் நாட்டின் விருப்பங்களின் அற்புதமான பெருக்கினைக் கவனித்தேன். சவால்கள் நிறைய வந்தன. சங்கடங்களுக்கும் குறைவேதும் இருக்கவில்லை. கொரோனா காரணமாக உலகிலே விநியோகச் சங்கிலி தொடர்பான பல இடையூறுகள் ஏற்பட்டன, ஆனால் நாம் அனைத்துச் சங்கடங்களிலிருந்தும் ஒரு புதிய கற்றலைப் பெற்றோம். நாட்டிலே ஒரு புதிய திறனும் பிறப்பெடுத்தது. இதைச் சொற்களில் வடிக்க வேண்டுமென்றால், இந்தத் திறனின் பெயர் தான் தற்சார்பு.Gita teaches us harmony and brotherhood, says PM Modi
February 26th, 05:11 pm
PM Narendra Modi today unveiled the world’s largest Bhagavad Gita. Addressing the gathering, the PM termed the Bhagavad Gita to be a world heritage which has been enlightening generations across the world since thousands of years. “Gita teaches us harmony and brotherhood”, the PM added.புதுதில்லியில் உள்ள இஸ்கானில் கீதா ஆராதனை மகோத்சவ் விழாவில் பிரதமர் பங்கேற்றார்
February 26th, 05:03 pm
புதுதில்லியில் உள்ள இந்திய கலாச்சாரம் போற்றும் மையமான இஸ்கானில் நடைபெற்ற கீதா ஆராதனை மகோத்சவ் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.