அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் – வளர்ச்சியடைந்த வடகிழக்குப் பகுதி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 09th, 11:09 am

அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களே, முதலமைச்சர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, இணை அமைச்சர்களே, சக நாடாளுமன்ற உறுப்பினர்களே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களே, இதர அனைத்து மக்கள் பிரதிநிதிகளே, இந்த மாநிலங்களைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே!

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த வடகிழக்குப் பகுதிகள் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

March 09th, 10:46 am

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் இன்று நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த வடகிழக்குப் பகுதிகள் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் ரூ. 55,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்த திரு நரேந்திர மோடி பல புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சேலா சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்த அவர், சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான உன்னதி திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில்வே, சாலை, சுகாதாரம், வீட்டுவசதி, கல்வி, எல்லை உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளை உள்ளடக்கியதாகும்.

பிரதமர் ஸ்வநிதி ஏழைகளின் வாழ்வில் மகிழ்ச்சியை நிரப்பியுள்ளது: பிரதமர்

March 08th, 04:29 pm

பரம ஏழைகளின் வாழ்க்கையில் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் தாக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கோடிட்டுக் காட்டினார்.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்

March 08th, 04:26 pm

வீட்டின் மையமாகத் திகழும் பெணகளின் கண்ணியம் மற்றும் அதிகாரமளித்தலை உறுதி செய்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

லட்சாதிபதி சகோதரி திட்டம் நாடு முழுவதும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது: பிரதமர்

March 08th, 04:20 pm

மகளிர் தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய பெண்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் வலுவான பிணைப்பாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற முதலாவது தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 08th, 10:46 am

காலம் மாறி, ஒரு புதிய சகாப்தம் உதயமாகும் போது, அதற்கு ஈடுகொடுக்க வேண்டியது தேசத்தின் கடமையாகும். இன்று இங்கே பாரத மண்டபத்தில் இந்தப் பொறுப்பை நாடு நிறைவேற்றி வருகிறது. முதல் தேசிய படைப்பாளிகள் விருது, வளர்ந்து வரும் திறமையாளர்களை அங்கீகரிப்பதைக் குறிக்கிறது. இந்த விருது வரும் நாட்களில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கும். இந்த புதிய சகாப்தத்தை இயக்கும் இளைஞர்களை கௌரவிப்பதற்கும், படைப்பாற்றலைக் கொண்டாடுவதற்கும், படைப்பாளிகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அங்கீகரிப்பதற்கும் இது ஒரு வாய்ப்பு. இந்த விருது உள்ளடக்க படைப்பாளர்களுக்கு சிறந்த ஆதாரமாக செயல்படும். அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும். இன்று நான் தேசிய படைப்பாளிகள் விருது பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் அதில் முழு மனதுடன் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு மிகக் குறைந்த நேரமே இருந்தது. அதனால், இந்த நிகழ்வை எங்களால் அதிகம் பிரபலப்படுத்த முடியவில்லை. குறைந்த நேர கால அளவிலும்கூட, சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் படைப்பாளிகளை இதில் ஈடுபடுத்த முடிந்தது.

முதல் தேசிய படைப்பாளர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

March 08th, 10:45 am

புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முதலாவது தேசிய படைப்பாளர் விருதுகளை வழங்கினார். வெற்றி பெற்றவர்களுடன் சிறிது நேரம் அவர் கலந்துரையாடினார். நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு ஏவுதளமாக இந்த விருது கருதப்படுகிறது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

March 08th, 08:56 am

மகளிர் சக்தியின் வலிமை, தைரியம் மற்றும் மீள்திறனுக்கு அவர் வணக்கம் செலுத்தியதோடு, பல்வேறு துறைகளில் அவர்களின் சாதனைகளையும் பாராட்டியுள்ளார்.

மன் கீ பாத் (மனதின் குரல்): ‘மேரா பெஹ்லா வோட் – தேஷ் கே லியே’...(எனது முதல் வாக்கு, தேசத்துக்காக) பிரதமர் மோடி முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.

February 25th, 11:00 am

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் 110ஆவது பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன். எப்போதும் போலவே, இந்த முறையும் உங்களுடைய பல்வேறு ஆலோசனைகள், உள்ளீடுகள், விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் எப்போதும் போலவே இந்த முறையும் கூட என்ன சவால் என்றால், இந்தப் பகுதியில் எவற்றையெல்லாம் இடம் பெறச் செய்வது என்பது தான். ஆக்கப்பூர்வமான உணர்வில் ஒன்றை ஒன்று விஞ்சிய உள்ளீடுகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றில் பல, மற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதோடு கூடவே, தங்களுடைய வாழ்க்கையையும் மேலும் சிறப்பானதாக ஆக்குவதில் ஈடுபட்டிருக்கும் நாட்டுமக்களைப் பற்றியவை.

குடியரசுத் தலைவரின் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

March 08th, 07:11 pm

குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்முவின் கட்டுரையை சர்வதேச மகளிர் தினமான இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். Her Story, My Story — Why I am hopeful about gender justice என்ற தலைப்பு கொண்ட அந்தக் கட்டுரை, வெல்ல முடியாத இந்தியப் பெண்களின் மனப்பாங்கையும், திரௌபதி முர்முவின் வாழ்க்கைப் பயணத்தையும் உள்ளடக்கியது.

கட்ச்-ல் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

March 08th, 06:03 pm

கடுமையான இயற்கைச் சவால்களுடன் வாழவும், போராடி வெல்லவும், ஒட்டு மொத்த சமூகத்துக்கும் இங்குள்ள பெண்கள் கற்றுகொடுத்துள்ளனர். நெறிமுறைகள், விசுவாசம், உறுதிப்பாடு மற்றும் தலைமைத்துவத்தின் பிரதிபலிப்பு பெண்கள். அதனால் தான், நாட்டை வழிநடத்தும் திறன் பெற்றவர்களாக பெண்கள் இருக்க வேண்டும் என நமது வேதங்கள் மற்றும் பாரம்பரியம் அழைப்பு விடுத்துள்ளன.

கட்ச்சில் நடந்த சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கில் பிரதமர் உரை

March 08th, 06:00 pm

கட்ச்சில் நடந்த சர்வதேசப் பெண்கள் தினக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று உரையாற்றினார்.

‘வளர்ச்சிக்கான நிதியளித்தல் & வளர விரும்பும் பொருளாதாரம்’ குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

March 08th, 02:23 pm

முதலில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்துகள். முற்போக்கான பட்ஜெட்டை அளித்த பெண் நிதி அமைச்சரை இந்தியா பெற்றுள்ளது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயமாகும்.

`வளர்ச்சிக்கான நிதி மற்றும் வளர விரும்பும் பொருளாதாரம்’ என்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

March 08th, 11:57 am

வளர்ச்சிக்கான நிதி மற்றும் வளர விரும்பும் பொருளாதாரம்’ என்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இது பிரதமர் உரையாற்றும் பட்ஜெட்டுக்கு பிந்தைய 10-வது கருத்தரங்காகும்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்கள் சக்திக்கு பிரதமர் வணக்கம்

March 08th, 11:33 am

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி பெண்கள் சக்திக்கு வணக்கம் தெரிவித்துள்ளார்.

கட்ச் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மகளிர் தினம் குறித்த கருத்தரங்கில் பிரதமர் உரையாற்ற உள்ளார்

March 07th, 03:36 pm

கட்ச் நகரில் உள்ள டோர்டோ பெண் துறவிகள் முகாமில் 2022, மார்ச் 08 அன்று மாலை 6 மணிக்கு சர்வதேச மகளிர் தினம் குறித்த கருத்தரங்கில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுவார். சமூகத்தில் பெண் துறவிகளின் பணி மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தலில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. டோர்டோ கருத்தரங்கில் 500-க்கும் அதிகமான பெண் துறவிகள் கலந்து கொள்வார்கள்.

மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடமிருந்து பிரதமர் பொருட்களை வாங்கினார்

March 08th, 02:00 pm

மகளிர் தினமான இன்று, பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரிடமிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி பொருட்களை வாங்கினார்.

Lotus is blooming in Bengal because TMC spawned muck in the state: PM Modi at Brigade Ground rally

March 07th, 02:01 pm

Ahead of upcoming assembly elections, PM Modi attacked the ruling Trinamool Congress saying that it has disrupted West Bengal's progress. Addressing the Brigade Cholo Rally in Kolkata, PM Modi said people of Bengal want 'Shanti', 'Sonar Bangla', 'Pragatisheel Bangla'. He promised “Ashol Poribortan” in West Bengal ahead of the assembly elections.

PM Modi addresses public meeting at Brigade Parade Ground in Kolkata

March 07th, 02:00 pm

Ahead of upcoming assembly elections, PM Modi attacked the ruling Trinamool Congress saying that it has disrupted West Bengal's progress. Addressing the Brigade Cholo Rally in Kolkata, PM Modi said people of Bengal want 'Shanti', 'Sonar Bangla', 'Pragatisheel Bangla'. He promised “Ashol Poribortan” in West Bengal ahead of the assembly elections.

தனித்துவமான தனது காளான் வளர்ப்புத் தொழில்நுட்பத்தைப் பிரதமர் மோடியின் சமூக வலைதளத்தின் மூலம் விளக்குகிறார் வீணா தேவி....

March 08th, 05:37 pm

பிரதமர் மோடியின் டிவிட்டர் பக்கத்தைக் கையாண்ட வீணாதேவி , தனது தனித்துவமான‌ காளான் வளர்ப்பு தொழில்நுட்பம், தன்னைத் தன்னிறைவு பெறச் செய்தது மட்டுமின்றி, தனது மன உறுதியையும் பலப்படுத்தியது என்பதைப் பகிர்ந்து கொண்டார்