
Today, India is not just a Nation of Dreams but also a Nation That Delivers: PM Modi in TV9 Summit
March 28th, 08:00 pm
PM Modi participated in the TV9 Summit 2025. He remarked that India now follows the Equi-Closeness policy of being equally close to all. He emphasized that the world is eager to understand What India Thinks Today. PM remarked that India's approach has always prioritized humanity over monopoly. “India is no longer just a ‘Nation of Dreams’ but a ‘Nation That Delivers’”, he added.
Prime Minister Shri Narendra Modi addresses TV9 Summit 2025
March 28th, 06:53 pm
PM Modi participated in the TV9 Summit 2025. He remarked that India now follows the Equi-Closeness policy of being equally close to all. He emphasized that the world is eager to understand What India Thinks Today. PM remarked that India's approach has always prioritized humanity over monopoly. “India is no longer just a ‘Nation of Dreams’ but a ‘Nation That Delivers’”, he added.
இந்தியா-நியூசிலாந்து கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்
March 17th, 01:05 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு லக்சன் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். பிரதமர் திரு லக்சன் இந்தியாவுடன் நீண்டகால உறவைக் கொண்டவர். சில நாட்கள் முன்பாக, ஆக்லாந்தில் ஹோலிப் பண்டிகையை அவர் எப்படிக் கொண்டாடினார் என்பதை நாம் அனைவரும் கண்கூடாகக் கண்டோம். நியூசிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் மீது பிரதமர் திரு லக்சன் கொண்டுள்ள அன்பை அவருடன் ஒரு பெரிய சமூக தூதுக்குழு இந்தியாவுக்கு வந்திருப்பதிலிருந்தும் அறியலாம். அவரைப் போன்ற இளமையான, ஆற்றல் வாய்ந்த மற்றும் திறமையான தலைவர் இந்த ஆண்டு ரைசினா உரையாடலின் சிறப்பு விருந்தினராக இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.மொரீஷியசில் வசிக்கும் இந்தியர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 12th, 06:07 am
இன்று மொரீஷியஸ் மண்ணில் உங்களுடன் இருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.மொரீஷியஸில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
March 11th, 07:30 pm
மொரீஷியஸில் உள்ள டிரையனான் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய சமூகத்தினர் மற்றும் இந்தியாவின் நண்பர்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலம் உடனிருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள், தொழில்முறையாளர்கள், சமூக கலாச்சார அமைப்புகளின் பிரதிநிதிகள், வணிக தலைவர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர். மொரீஷியஸின் பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 01st, 11:00 am
ஐடிவி நெட்வொர்க் நிறுவனரும் நாடாளுமன்றத்தில் எனது சகாவுமான கார்த்திகேய சர்மா அவர்களே, இந்த நெட்வொர்க்கின் ஒட்டுமொத்த குழுவினரே, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்து வந்துள்ள அனைத்து விருந்தினர்களே, தாய்மார்களே வணக்கம். நியூஸ் எக்ஸ் வேர்ல்டின் மங்களகரமான தொடக்கத்திற்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இன்று, இந்தி, ஆங்கிலம் உட்பட உங்கள் நெட்வொர்க்கின் அனைத்து பிராந்திய அலைவரிசைகளும் உலக அளவில் செல்கின்றன.என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
March 01st, 10:34 am
கடந்த காலங்களில் இதுபோன்ற ஊடக நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொண்டதாகவும், ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் இப்போது ஒரு புதிய போக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறிய திரு நரேந்திர மோடி, இந்த சாதனைக்காக சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுபோன்ற ஊடக நிகழ்வுகள் நாட்டில் ஒரு பாரம்பரியம் என்று அவர் எடுத்துரைத்தார். ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார். இதன் உச்சிமாநாடு, கொள்கைகள் பற்றிய விவாதத்தில் கவனம் செலுத்தியது என்றும், அரசியலை மையமாகக் கொண்டு ஒப்பிடும்போது கொள்கைகள் மையமாக இருந்தன ன்றும் அவர் கூறினார். இந்த உச்சிமாநாடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களின் விவாதங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவர்கள் ஒரு புதுமையான மாதிரியில் பணியாற்றியுள்ளதாக ஒப்புக் கொண்ட அவர், மற்ற ஊடக நிறுவனங்கள் இந்த போக்கையும் வார்ப்புருவையும் தங்கள் சொந்த புதுமையான வழிகளில் வளப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொடக்க உரை
February 11th, 03:15 pm
உங்கள் மருத்துவ அறிக்கையை செயற்கை நுண்ணறிவு செயலியில் பதிவேற்றினால், அது உங்கள் ஆரோக்கியத்தின் நிலைமையை எந்த தொழில்நுட்ப சொற்களும் இல்லாமல் எளிய மொழியில் விளக்கிச் சொல்ல முடியும். ஆனால், அதே செயலியில் யாரோ ஒருவர் தனது இடது கையால் எழுதும் படத்தை வரையச் சொன்னால், அந்தச் செயலி பெரும்பாலும் வலது கையால் எழுதும் ஒருவரை வரைந்துவிடும். ஏனெனில் அதுதான் பயிற்சி தரவுகளின் ஆதிக்கமாகும்.பிரதமர் திரு நரேந்திர மோடி பாரிஸில் செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சிமாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்கினார்
February 11th, 03:00 pm
பாரீசில் இன்று செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மெக்ரோனுடன் இணைந்து தலைமை தாங்கினார். பிப்ரவரி 6-7 இல் அறிவியல் தினங்களுடன் தொடங்கிய ஒரு வார கால உச்சிமாநாடு, பிப்ரவரி 8-9 அன்று கலாச்சார வார இறுதியுடன், உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட நிலையுடன் நிறைவடைந்தது.கூட்டறிக்கை: இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அரசு முறை குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)
December 22nd, 07:46 pm
குவைத் நாட்டின் அமீரான ஷேக் மெஷல் திரு.அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 21-22 தேதிகளில் குவைத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவர் குவைத் செல்வது இதுவே முதல் முறையாகும். பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 21, 2024 அன்று குவைத்தில் 26-வது அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவில் மேதகு அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் 'கௌரவ விருந்தினராகக்' கலந்து கொண்டார்.குவைத் பிரதமரை, பிரதமர் சந்தித்தார்
December 22nd, 06:38 pm
இரு தலைவர்களும் அரசியல், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட துறைகளில் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்து விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் வலியுறுத்தினர். எரிசக்தி, பாதுகாப்பு, மருத்துவ சாதனங்கள், மருந்து, உணவுப் பூங்காக்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளை ஆராய குவைத் முதலீட்டு ஆணையம் மற்றும் பிற பங்குதாரர்கள் அடங்கிய குழுவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். பாரம்பரிய மருத்துவம் மற்றும் விவசாய ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர். கூட்டுறவுக்கான கூட்டு ஆணையத்தில் (ஜேசிசி) சமீபத்தில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றனர், இதன் கீழ் சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஹைட்ரோகார்பன்கள், தொடர்பான ஏற்கனவே உள்ள கூட்டுப் பணிக்குழுக்களுடன், கூடுதலாக வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம், விவசாயம், பாதுகாப்பு, கலாச்சாரம் ஆகிய துறைகளில் புதிய கூட்டுப் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒப்பந்தங்களின் பட்டியல்: பிரதமரின் குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)
December 22nd, 06:03 pm
பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் குவைத் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.கயானாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
November 22nd, 03:02 am
இன்று உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடன் இணைந்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் வந்ததிலிருந்து எனக்கு வழங்கப்பட்ட அன்பு மற்றும் பாசத்தால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். தமது இல்லத்தின் கதவுகளை எனக்காக திறந்து வைத்ததற்காக அதிபர் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினரின் அன்பு மற்றும் கருணைக்கு நான் நன்றி கூறுகிறேன். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதை என்னால் உணர முடிந்தது. அதிபர் அலி மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து நாங்களும் ஒரு மரத்தை நட்டோம். இது தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற எங்கள் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். அது நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் ஆகும்.கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர்
November 22nd, 03:00 am
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பிரதமர் மார்க் பிலிப்ஸ், துணை அதிபர் பரத் ஜக்தியோ, முன்னாள் அதிபர் டொனால்ட் ராமோதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, அதிபருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரவணைப்பு மற்றும் கருணைக்கு அவர் மேலும் நன்றி தெரிவித்தார். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது என்று திரு மோடி கூறினார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து மரம் ஒன்றை நட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்றும், அதை அவர் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.இந்தியா-கரிகாம் 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்
November 21st, 02:15 am
எனது நண்பர்கள், அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிக்கோன் மிட்செல் ஆகியோருடன் இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரிகாம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு
November 21st, 02:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல் ஆகியோர் 20 நவம்பர் 2024 அன்று ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கயானா அதிபர் இர்பான் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முதலாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு, 2019-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் கயானா அதிபர் மற்றும் கிரெனடா பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்:நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி இடைமாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
November 20th, 01:40 am
இன்றைய அமர்வின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானது, மேலும் இது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின்போது, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை விரைவுபடுத்த வாரணாசி செயல் திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமரின் உரை
November 20th, 01:34 am
நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றம் குறித்த ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மும்மடங்காக உயர்த்தவும், எரிசக்தி சிக்கன விகிதத்தை இரட்டிப்பாக்கவும் இந்தக் குழு புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின் போது தீர்மானித்திருந்ததை பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிலையான வளர்ச்சி முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரேசிலின் முடிவை அவர் வரவேற்றார்.நைஜீரியா அதிபருடன் பிரதமர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்
November 17th, 06:41 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி நைஜீரியாவில் நவம்பர் 17-18 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணமாக அங்கு சென்றுள்ளார். அபுஜாவில், நைஜீரியாவின் அதிபர் திரு போலா அகமது டினுபுவுடன் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு மாளிகையில் பிரதமருக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதையுடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் துவக்க நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 23rd, 05:22 pm
பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ள அனைத்து புதிய நண்பர்களையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கிறேன். உலக மனிதகுலத்தில் 40 சதவீதத்தையும், உலகப் பொருளாதாரத்தில் 30 சதவீதத்தையும் பிரிக்ஸ் அமைப்பு தனது புதிய வடிவத்தில் கொண்டுள்ளது.