தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சி 2023-இன் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 08th, 06:00 pm
இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள எனது நண்பர்களே, திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களே, திரு அர்ஜூன் ராம் மேக்வால் அவர்களே, திருமிகு மீனாட்சி லேகி அவர்களே, திருமிகு டயானா கெல்லாக் அவர்களே, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்களே, கலை உலகின் புகழ்பெற்ற நண்பர்களே, தாய்மார்களே, அன்பர்களே!இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சி 2023 ஐ டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தொடங்கி வைத்தார்
December 08th, 05:15 pm
தில்லி செங்கோட்டையில் முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி 2023 ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, செங்கோட்டையில் தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையத்தை' பிரதமர் திறந்து வைத்தார். நினைவு தபால் தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார். விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பிரதமர் திரு மோடி பார்வையிட்டார்இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முதலாவது இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2023 கண்காட்சியை டிசம்பர் 8 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
December 07th, 02:13 pm
2023 டிசம்பர் 8 ஆம் தேதி மாலை 4 மணியளவில் தில்லி செங்கோட்டையில் நடைபெறும் முதலாவது இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புக் கண்காட்சி 2023- ஐப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியின் போது, செங்கோட்டையில் தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையத்தையும், சாமுன்னாட்டி எனப்படும் மாணவர் கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.'மன் கீ பாத்' (மனதின் குரல்) மீது மக்கள் காட்டிய பாசம் முன்னெப்போதும் இல்லாதது: பிரதமர் மோடி
May 28th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் நெஞ்சம் நிறைய வரவேற்கிறேன். இந்த முறை மனதின் குரலின் இந்தப் பகுதி இரண்டாவது சதத்தின் தொடக்கம். கடந்த மாதம் நாமனைவரும் இதன் சிறப்பான சதத்தினைக் கொண்டாடினோம். உங்களனைவரின் பங்களிப்பு மட்டுமே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலம். 100ஆவது பகுதி ஒலிபரப்பான வேளையிலே, ஒருவகையில் நாடு முழுவதும் ஒரே இழையில் இணைந்தது என்று கூறலாம். துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் நம்முடைய சகோதர சகோதரிகள் ஆகட்டும், அல்லது பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லநர்கள் ஆகட்டும், மனதின் குரலானது அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியைப் புரிந்திருக்கிறது. நீங்கள் அனைவரும் மனதின் குரலின் மீது வெளிப்படுத்தியிருக்கும் நேசம், பாசம், இது, இதுவரை காணாதது, உணர்ச்சிவயப்படச் செய்யக்கூடியது. மனதின் குரல் ஒலிபரப்பு செய்யப்பட்ட போது, உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு நேர மண்டலங்களிலும், ஓரிடத்தில் மாலையாக இருக்கலாம், ஓரிடத்தில் இரவாக இருக்கலாம், இதையெல்லாம் தாண்டி, அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த 100ஆவது பகுதியைக் கேட்கத் தங்கள் நேரத்தை ஒதுக்கினார்கள். ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கும் நியூசிலாந்தின் ஒரு காணொளியை நான் பார்க்க நேர்ந்தது, இதிலே 100 வயது நிரம்பிய ஒரு தாய் தனது நல்லாசிகளை வழங்கிக் கொண்டிருந்தார். மனதின் குரல் தொடர்பாக நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் இருக்கும் மக்களும் சரி, தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்கள். பலர் இதனை ஆக்கப்பூர்வமாக ஆராயவும் செய்திருக்கிறார்கள். மனதின் குரலில் நாடு மற்றும் நாட்டுமக்களின் சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசப்படுகிறது என்ற இந்த விஷயத்தைப் பலர் பாராட்டியிருக்கிறார்கள். நான் மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும், உங்களுடைய இந்த நல்லாசிகளுக்காக, மிகுந்த மரியாதையோடு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சி 2023-ஐ மே 18ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்
May 16th, 06:56 pm
அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாகவும், 47-வது சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் கொண்டாடும் விதமாகவும், இந்த சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. “அருங்காட்சியகங்கள்- நீடித்த நல்வாழ்வு” என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஆண்டு கண்காட்சி நடைபெறுகிறது. இந்தியாவின் கலாச்சார ராஜதந்திரங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் கலாச்சார மையங்களின் வெளிப்பாடாக இந்தக் கண்காட்சி அமையும்.