பிரகதி மைதானத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை பிரதமர் ஜூலை 26 அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

July 24th, 07:45 pm

நாட்டில் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கான உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தின் (ஐ.இ.சி.சி) கருத்தாக்கத்திற்கு வழிவகுத்தது. பிரகதி மைதானத்தில் உள்ள பழைய மற்றும் காலாவதியான வசதிகளை மறுசீரமைத்த இந்த திட்டம், சுமார் 2700 கோடி ரூபாய் செலவில் ஒரு தேசிய திட்டமாக உருவாக்கப்பட்டது. சுமார் 123 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஐ.இ.சி.சி வளாகம் இந்தியாவின் மிகப்பெரிய எம்.ஐ.சி.இ (கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) இடமாக உருவாக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளுக்கு கிடைக்கக்கூடிய மூடிய இடத்தைப் பொறுத்தவரை, ஐ.இ.சி.சி வளாகம் உலகின் சிறந்த கண்காட்சி மற்றும் மாநாட்டு வளாகங்களில் ஒன்றாகும்.