ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 10th, 06:25 pm

1951-ம் ஆண்டு இதே இடத்தில், இதே மைதானத்தில்தான் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன என்பது எவ்வளவு அற்புதமான தற்செயல் நிகழ்வு. இன்று, நீங்கள் காட்டிய தைரியம், நீங்கள் செய்த முயற்சிகள் மற்றும் நீங்கள் கொண்டு வந்த வெற்றிகளால், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கொண்டாட்டமான சூழல் நிலவுகிறது. 100 பதக்கங்களைக் கடக்க இரவு பகலாக உழைத்தீர்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உங்களைப் போன்ற அனைத்து விளையாட்டு வீரர்களின் செயல்திறனால் ஒட்டுமொத்த நாடும் பெருமிதம் கொள்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

October 10th, 06:24 pm

புதுதில்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் மைதானத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மத்தியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தப்போட்டிகளில் இந்தியா 28 தங்கப் பதக்கங்கள் உட்பட 107 பதக்கங்களை வென்றது, இது கான்டினென்டல் மல்டி ஸ்போர்ட்ஸ் பிரிவில் வென்ற மொத்தப் பதக்கங்களின் அடிப்படையில் சிறந்த செயல்திறன் ஆகும்.

ஜி 20 பல்கலைக்கழக இணைப்பு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 26th, 04:12 pm

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் எனது இளம் நண்பர்களே! இன்று பாரத் மண்டபத்தில் இருப்பதை விட அதிகமானோர் இணையதளத்தில் மூலம் இணைந்துள்ளனர். ஜி-20 பல்கலைக்கழக இணைப்பு கனெக்ட் என்ற இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்கிறேன். அனைத்து இளைஞர்களையும் வாழ்த்துகிறேன்.

ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் உரை

September 26th, 04:11 pm

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தியாவின் இளைஞர்களிடையே இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பற்றிய புரிதலை உருவாக்கவும், பல்வேறு ஜி20 நிகழ்வுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜி20 பாரத் தலைமைத்துவத்தின் மகத்தான வெற்றி: தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, இந்தியாவின் ஜி20 தலைமை: வசுதைவ குடும்பகம்; ஜி20 பல்கலைக்கழக இணைப்பு திட்டத்தின் தொகுப்பு; மற்றும் ஜி20 இல் இந்திய கலாச்சாரத்தை காட்சிப்படுத்துதல் என்ற 4 வெளியீடுகளையும் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

காசி சன்சாத் சம்ஸ்கிருதிக் மஹோத்சவ் 2023 இன் நிறைவு விழா மற்றும் வாரணாசியில் அடல் அவாசியா வித்யாலயாக்களின் அர்ப்பணிப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 23rd, 08:22 pm

உத்தரப்பிரதேசத்தின் பிரபலமான முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, மேடையில் அமர்ந்துள்ள மதிப்பிற்குரிய விருந்தினர்களே, காசி சன்சாத் சம்ஸ்கிருதிக் மஹோத்சவத்தின் சக பங்கேற்பாளர்களே, ருத்ராக்ஷ மையத்தில் கூடியிருக்கும் காசியின் என் அன்பான சக குடியிருப்பாளர்களே!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தேசிய கலாச்சார மஹோத்சவ 2023 நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றினார்

September 23rd, 04:33 pm

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்று வந்த தேசிய கலாச்சார மஹோத்சவ நிகழ்வின் நிறைவு விழா இன்று நடைபெற்றது.

வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 23rd, 02:11 pm

உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, மேடையில் அமர்ந்துள்ள உத்தரப்பிரதேச அரசின் அமைச்சர்களே, விளையாட்டு உலகின் சிறப்பு விருந்தினர்களே மற்றும் காசியைச் சேர்ந்த எனது அன்பான குடும்ப உறுப்பினர்களே!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார்

September 23rd, 02:10 pm

வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் செப்டம்பர் 23-ம் தேதி வாரணாசி செல்கிறார்

September 21st, 10:16 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 செப்டம்பர் 23 அன்று வாரணாசி செல்கிறார். அங்கு பிற்பகல் 1.30 மணியளவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3:15 மணியளவில், ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தை அடையும் பிரதமர், காசி சங்க கலாச்சார பெருவிழாவில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேசம் முழுவதும் கட்டப்பட்டுள்ள 16 அடல் உண்டு உறைவிட பள்ளிகளையும் அவர் திறந்து வைக்கிறார்.