நைஜீரியா அதிபருடன் பிரதமர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்

November 17th, 06:41 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி நைஜீரியாவில் நவம்பர் 17-18 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணமாக அங்கு சென்றுள்ளார். அபுஜாவில், நைஜீரியாவின் அதிபர் திரு போலா அகமது டினுபுவுடன் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு மாளிகையில் பிரதமருக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதையுடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக சிங்கங்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

August 10th, 09:03 am

உலக சிங்கங்கள் தினத்தை முன்னிட்டு சிங்க பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 2024 பிப்ரவரியில் சர்வதேச பெரிய பூனை கூட்டமைப்பை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கூட்டமைப்பு கம்பீரமான பெரிய பூனை வகை விலங்குகளைப் பாதுகாப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு உலகம் முழுவதிலுமிருந்து கிடைத்த உற்சாகமான வரவேற்புக் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெரும்பூனை கூட்டமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

February 29th, 04:31 pm

இந்தியாவில் சர்வதேச பெரும்பூனை கூட்டமைப்பை தலைமையகத்துடன் அமைப்பதற்கு 2023-24-ம் ஆண்டு முதல் 2027-28-ம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.150 கோடி மதிப்பிலான ஒருமுறை ஒதுக்கீட்டிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

There is continuous progress in bilateral trade, investment between India and Kenya: PM Modi

December 05th, 01:33 pm

Addressing the event during the visit of the President of Kenya to India, PM Modi said, Africa has always been given high priority in India's foreign policy. Over the past decade, we have strengthened our collaboration with Africa in mission mode. I am confident that President Ruto's visit will not only enhance our bilateral relations but also provide new impetus to our engagement with the entire African continent.

தான்சானியா ஐக்கியக் குடியரசு அதிபரின் இந்தியப் பயணத்தின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

October 09th, 12:00 pm

முதலாவதாக, இந்தியா வந்துள்ள அதிபர் மற்றும் அவரது பிரதிநிதிக் குழுவை நான் அன்புடன் வரவேற்கிறேன். தான்சானியா அதிபர் என்ற முறையில் அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். ஆனால் அவர் நீண்ட காலமாக இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் தொடர்புடையவர்.

15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு

August 23rd, 03:30 pm

15-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை பிரமாண்டமாக ஏற்பாடு செய்ததற்காகவும், எங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காகவும் எனது அன்பு நண்பர் அதிபர் ராமஃபோசாவுக்கு நான் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பருவநிலை நெருக்கடியில் உலகம் சிக்கியுள்ள நிலையில், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முன்முயற்சியை நாம் காட்டியுள்ளோம் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.

August 15th, 05:08 pm

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜி 20 உச்சிமாநாட்டிற்காக ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருத்தை நாம் முன்வைத்துள்ளோம், அந்த திசையில் செயல்பட்டு வருகிறோம் என்றார். உலகம் காலநிலை நெருக்கடிகளில் சிக்கி திணறி வரும் நிலையில், நாம் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை லைப் இயக்கம் மூலம் வழி காட்டியுள்ளோம் என்று அவர் கூறினார்.

உலக சுற்றுச்சூழல் தினம் 2023 நிகழ்வையொட்டி காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

June 05th, 03:00 pm

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உங்கள் அனைவருக்கும், நமது நாட்டினருக்கும், உலகின் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கைவிடும் இயக்கம் என்பது இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தின கருப்பொருளாகும், உலகளாவிய முன்முயற்சிக்கு முன்னதாகவே, இந்தியா இந்த திசையில் கடந்த 4-5 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றுவதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான பணியை 2018-ல் இரண்டு நிலைகளில் இந்தியா தொடங்கியது. ஒருபக்கம், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நாம் தடை செய்துள்ளோம், மறுபக்கம் பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சியை நாம் கட்டாயமாக்கியுள்ளோம். இதன் காரணமாக இந்தியாவில் உருவாகும் மொத்த வருடாந்திர பிளாஸ்டிக் கழிவுகளில் 75 சதவீதமாக உள்ள சுமார் 30 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது கட்டாயமாகியுள்ளது. இந்த வரம்புக்குள் சுமார் 10 ஆயிரம் உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும், வணிக நிறுவனங்களும் வந்துள்ளன.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டிய சந்திப்பில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்

June 05th, 02:29 pm

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி உலகின் அனைத்து நாடுகளுக்கும் தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தின கருப்பொருளான, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கைவிடும் இயக்கம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தியா இந்த திசையில் கடந்த 4-5 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான பணியை 2018-ல் இரண்டு நிலைகளில் இந்தியா தொடங்கியது என்று பிரதமர் தெரிவித்தார். “ஒருபக்கம், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நாம் தடைசெய்துள்ளோம், மறுபக்கம் பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சியை நாம் கட்டாயமாக்கியுள்ளோம்” என்று அவர் கூறினார். இதன் காரணமாக இந்தியாவில் உருவாகும் மொத்த வருடாந்திர பிளாஸ்டிக் கழிவுகளில் 75 சதவீதமாக உள்ள சுமார் 30 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது கட்டாயமாகியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இந்த வரம்புக்குள் சுமார் 10 ஆயிரம் உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும், வணிக நிறுவனங்களும் வந்துள்ளன.