குஜராத்தின் டஹோடில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

April 20th, 09:49 pm

முதலில் டஹோட் மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் ஹிந்தியில் பேசுவேன், அதன் பிறகு எனது தாய்மொழியில் பேசுவேன்.

குஜராத்தின் டாஹோட் மற்றும் பஞ்ச்மஹாலில் ரூ.22000 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்

April 20th, 04:24 pm

டாஹோடில் இன்று பழங்குடி மக்கள் மகா சம்மேளன கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.22000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். ரூ.840 கோடி மதிப்பில் நர்மதா நதிப் படுகையில் கட்டப்பட்டுள்ள டாஹோட் மாவட்ட தெற்கு பிராந்திய குடிநீர் விநியோகத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். டாஹோட் பொலிவுறு நகரத்துக்கான ரூ.335 கோடி மதிப்புள்ள 5 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ், பஞ்ச்மஹால் மற்றும் டாஹோட் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பில் பழங்குடி மக்களுக்கு 10,000 வீடுகள் வழங்கப்பட்டன.

ஏப்ரல் 18 முதல் 20வரை குஜராத் செல்கிறார் பிரதமர்

April 16th, 02:36 pm

பிரதமர் திரு.நரேந்திரமோடி, 2022 ஏப்ரல் 18 முதல் 20-ந் தேதி வரை குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 18 அன்று மாலை 6 மணியளவில், காந்திநகரில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் பார்வையிடுகிறார். ஏப்ரல் 19 காலை 9.40 மணியளவில், பனஸ்கந்தாவின் தியோதரில் உள்ள பனஸ் பால்பண்ணை வளாகத்தில், பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், பிற்பகல் 3.30மணியளவில் ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஏப்ரல் 20 அன்று காவை 10.30மணியளவில், காந்திநகரில் சர்வதேச ஆயுஷ் முதலீடு & புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, பிற்பகல் 3.30மணியளவில், டாஹோத்தில் ஆதிஜாதி மஹா சம்மேளனத்தில் கலந்துகொள்ளும் பிரதமர், சுமார் ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.