75-வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டை கொத்தளத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
August 15th, 03:02 pm
இன்று விடுதலையின் அமிர்தப் பெருவிழா நாளில், நாடு தனது விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும், நாட்டைப் பாதுகாப்பதில் இரவு பகலாகப் பாடுபட்டு வரும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கும் தலைவணங்குகிறது. விடுதலைப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றிய மகாத்மா காந்தியடிகள் விடுதலைக்காக அனைத்தையும் தியாகம் புரிந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்லது பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், பிஸ்மில், அசாபகுல்லா கான் போன்ற புரட்சியாளர்கள், ஜான்சிராணி லட்சுமி பாய், கிட்டூர் ராணி சென்னம்மா அல்லது கைடின்லு ராணி அல்லது மதன்கினிஹஸ்ரா, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் நேரு, நாட்டை ஒன்றுபட்ட தேசமாக்கிய சர்தார் வல்லபாய் பட்டேல், இந்தியாவுக்கு எதிர்கால வழியைக் காட்டிய பாபா சாகிப் அம்பேத்கர் உள்ளிட்ட அனைவரையும் நாடு நினைவு கூருகிறது. இப் பெரும் ஆளுமைகளுக்கு நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது.75-ஆவது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையிலிருந்து பிரதமர் ஆற்றிய உரை
August 15th, 07:38 am
75-ஆவது சுதந்திர தினம், விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் இருந்து இந்தியா மீதும் ஜனநாயகத்தின் மீதும் பற்று கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது
August 15th, 07:37 am
நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுடன் உரையாற்றினார். உரையின் போது, பிரதமர் மோடி தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்தார். அவர் தனது பிரபலமான முழக்கமான சப்கா சாத், சப்கா விகாஸ் மற்றும் சப்கா விஸ்வாஸ் (ஒன்றாக, அனைவரின் வளர்ச்சிக்கும், அனைவரின் நம்பிக்கையுடனும்) இன்னொன்றைச் சேர்த்தார். இந்த குழுவிற்கு சமீபத்திய நுழைவு சப்கா பிரயாஸ் (அனைவரின் முயற்சி) ஆகும்.இந்தியத் தொழில் கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டம் 2021-ல் பிரதமர் ஆற்றிய உரை
August 11th, 06:52 pm
இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபட்டுவரும் தொழில்துறை முன்னோடிகள் மற்றும் சிஐஐ உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது அமைச்சரவை சகாக்களே, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் திரு.டி.வி.நரேந்திரன், தொழில் நிறுவனங்களின் தலைவர்களே, வெளிநாட்டுத் தூதர்களே, பல்வேறு நாடுகளுக்கான இந்தியாவின் தூதர்களே, தாய்மார்களே, சகோதரர்களே!இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டம் 2021-இல் பிரதமர் உரையாற்றினார்
August 11th, 04:30 pm
கூட்டத்தில் பேசிய பிரதமர், விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்திற்கு இடையே, 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுவதாகத் தெரிவித்தார். புதிய தீர்வுகளுக்கும், இந்திய தொழில்துறையினரின் புதிய இலக்குகளுக்கும் இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றார் அவர். தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தை வெற்றி அடையச்செய்வது இந்திய தொழில்துறையின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார். பெருந்தொற்றின்போது தொழில் துறையினரின் நெகிழ்வுத் தன்மையை பிரதமர் பாராட்டினார்.நிதி சேவைகள் துறையில் பட்ஜெட் அமலாக்கம் குறித்த இணையதள கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
February 26th, 12:38 pm
நிதி சேவைகள் தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.நிதி சேவைகள் தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்
February 26th, 12:37 pm
நிதி சேவைகள் தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.