தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
December 15th, 10:15 pm
தில்லியில் இன்று நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 4-வது தேசிய மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். மூன்று நாள் மாநாடு 2024 டிசம்பர் 13 முதல் 15 வரை தில்லியில் நடைபெற்றது.பிரயாக்ராஜில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 13th, 02:10 pm
உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, பிரஜேஷ் பதக் அவர்களே, உத்தரப்பிரதேசத்தின் மதிப்பிற்குரிய அமைச்சர்களே, மதிப்பிற்குரிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, பிரயாக்ராஜ் மேயர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவரே, இதர சிறப்பு விருந்தினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே.உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 13th, 02:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சங்கமத்தின் புனித பூமியான பிரயாக்ராஜுக்கு பக்தியுடன் தலைவணங்கி, மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட துறவிகள், சாதுக்களுக்கு மரியாதை செலுத்தினார். தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் மகா கும்பமேளாவை மாபெரும் வெற்றியாக்கிய ஊழியர்கள், தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார். மகா கும்பமேளாவின் பிரம்மாண்டம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், 45 நாட்கள் நீடிக்கும் மகா யாகத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்கும் உலகின் மிகப்பெரிய கூட்டங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். இந்த நிகழ்வுக்காக ஒரு புதிய நகரம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். பிரயாக்ராஜ் மண்ணில் புதிய வரலாறு எழுதப்படுகிறது என்று பிரதமர் பெருமிதம் கொண்டார். அடுத்த ஆண்டு மகா கும்பமேளா அமைப்பது நாட்டின் ஆன்மீக மற்றும் கலாச்சார அடையாளத்தை புதிய சிகரங்களுக்கு எடுத்துச் செல்லும் என்று கூறிய பிரதமர், ஒற்றுமையின் இத்தகைய 'மகாயாகம்' உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் என்று கூறினார். மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்த மக்களுக்கு அவர் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.“காங்கிரஸ் இந்தியாவின் கல்வி முறையை அழிவுக்குள் தள்ளியது, பிரதமர் மோடி அதை மீட்டெடுத்தார்”: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
December 10th, 05:30 pm
மத்திய கல்வி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் கல்வியறிவு விகிதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் கிராமப்புற கல்வியறிவு விகிதம் 2023-24 இல் 77.5% ஆக கணிசமாக அதிகரித்துள்ளது, இது பெண்களின் கல்வியறிவு அதிகரிப்பால் உந்தப்பட்டது.திரு எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
December 10th, 09:01 am
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு எஸ். எம். கிருஷ்ணா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்தியதற்காக அறியப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க தலைவர் என்று திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.மக்களுக்கு உயர்தரமான உள்கட்டமைப்பை உறுதி செய்யவும் கூடுதல் வளமை பெற இணைப்பின் சக்தியை மேலும் பலப்படுத்தவும் எங்கள் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: பிரதமர்
December 09th, 10:08 pm
மக்களுக்கு உயர்தரமான உள்கட்டமைப்பை உறுதி செய்யவும், எதிர்கால வளத்திற்காக இணைப்பின் சக்தியை மேலும் பலப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். வரவிருக்கும் நொய்டா சர்வதேச விமான நிலையம் தேசிய தலைநகருக்கும் உத்தரப்பிரதேசத்தில் கும் இடையில் இணைப்பையும், வாழ்க்கையை எளிதாக்குவதையும் ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.Cabinet approves Rithala-Kundli corridor of Delhi Metro Phase-IV project
December 06th, 08:08 pm
The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi, approved the Rithala - Narela -Nathupur (Kundli) corridor of Delhi Metro's Phase - IV project consisting of 26.463 kms which will further enhance connectivity between the national capital and neighbouring Haryana. The corridor is scheduled to be completed in 4 years from the date of its sanction.நாட்டில் நவோதயா பள்ளிகள் இல்லாத மாவட்டங்களில் 28 புதிய நவோதயா பள்ளிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
December 06th, 08:03 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், நவோதயா வித்யாலயா திட்டத்தின் (மத்திய துறைத் திட்டம்) கீழ், நாட்டில் நவோதயா பள்ளிகள் இதுவரை திறக்கப்படாத மாவட்டங்களில் 28 நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.Cabinet approves opening of 85 new Kendriya Vidyalayas KVs under civil defence sector
December 06th, 08:01 pm
The Cabinet Committee on Economic Affairs, chaired by Prime Minister Narendra Modi approved opening of 85 new Kendriya Vidyalayas under Civil/Defence sector across the country and expansion of one existing KV i.e. KV Shivamogga, District Shivamogga, Karnataka to facilitate increased number of Central Government employees by adding two additional Sections in all the classes under the Kendriya Vidyalaya Scheme (Central Sector Scheme).பலரது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலை சுற்றுலா கொண்டுள்ளது: பிரதமர்
November 29th, 11:45 am
சுற்றுலாத்துறையானது பலரது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, வியப்பூட்டும் இந்தியாவின் அதிசயங்களை மக்கள் மேலும் அனுபவிக்கும் வகையில் இந்தியாவின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.புவனேஸ்வரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறும் காவல்துறை தலைமை இயக்குநர்கள்/காவல்துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
November 29th, 09:54 am
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள லோக் சேவா பவனில் அமைந்துள்ள மாநில மாநாட்டு மையத்தில் 2024 நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறவுள்ள காவல்துறை தலைமை இயக்குநர்கள் / காவல்துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 26th, 08:15 pm
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவர்களே, நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களே, நீதிபதி சூர்ய காந்த் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, அட்டர்னி ஜெனரல் திரு. வெங்கடரமணி அவர்களே, பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா அவர்களே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு. கபில் சிபல் அவர்களே, உச்சநீதிமன்ற நீதிபதிகளே, முன்னாள் தலைமை நீதிபதிகளே, இதர சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, அன்பர்களே!உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு
November 26th, 08:10 pm
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் திரு. மோடி, அரசியலமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு அனைத்து பிரமுகர்கள், பிரதிநிதிகள் மற்றும் குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு நிறைவு என்பது பெருமைக்குரிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியலமைப்பு உறுப்பினர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.இந்திய ரயில்வேயில் மூன்று பல்வழித் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
November 25th, 08:52 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் மொத்தம் ரூ.7,927 கோடி (தோராயமாக) மதிப்பீட்டிலான மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.Maharashtra has witnessed the triumph of development, good governance, and genuine social justice: PM Modi
November 23rd, 10:58 pm
Prime Minister Narendra Modi addressed BJP workers at the party headquarters following the BJP-Mahayuti alliance's resounding electoral triumph in Maharashtra. He hailed the victory as a decisive endorsement of good governance, social justice, and development, expressing heartfelt gratitude to the people of Maharashtra for trusting BJP's leadership for the third consecutive time.PM Modi addresses passionate BJP Karyakartas at the Party Headquarters
November 23rd, 06:30 pm
Prime Minister Narendra Modi addressed BJP workers at the party headquarters following the BJP-Mahayuti alliance's resounding electoral triumph in Maharashtra. He hailed the victory as a decisive endorsement of good governance, social justice, and development, expressing heartfelt gratitude to the people of Maharashtra for trusting BJP's leadership for the third consecutive time.நியூஸ் 9 உலகளாவிய உச்சிமாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 22nd, 10:50 pm
அமைச்சர் திரு வின்ஃப்ரைட் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது நண்பர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டுள்ள அனைத்து மதிப்புமிக்க தாய்மார்களே!நியூஸ் 9 உலகளாவிய உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 22nd, 09:00 pm
ஜெர்மனி ஸ்டட்கார்ட் நகரில் நடைபெற்ற நியூஸ் 9 உலகளாவிய உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்த உச்சிமாநாடு இந்திய-ஜெர்மன் கூட்டாண்மைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குகிறது என்று கூறினார். இன்றைய தகவல் யுகத்தில் ஜெர்மனி மற்றும் ஜெர்மன் மக்களுடன் தொடர்பு கொள்ள இந்தியாவில் இருந்து ஒரு ஊடகக் குழு முயற்சிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெர்மனியையும், ஜெர்மனி மக்களையும் இந்திய மக்கள் புரிந்து கொள்ள இது ஒரு தளத்தை வழங்கும்”, என்று கூறினார்.The bond between India & Guyana is of soil, of sweat, of hard work: PM Modi
November 21st, 08:00 pm
Prime Minister Shri Narendra Modi addressed the National Assembly of the Parliament of Guyana today. He is the first Indian Prime Minister to do so. A special session of the Parliament was convened by Hon’ble Speaker Mr. Manzoor Nadir for the address.கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை
November 21st, 07:50 pm
கயானாவின் தேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இதன்மூலம் இவ்வாறு உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இவர் படைத்தார். இந்த உரைக்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மாண்புமிகு சபாநாயகர் திரு.மன்சூர் நாதிர் கூட்டியிருந்தார்.