பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் தில்லியில் மார்ச் 14 அன்று உரையாட உள்ளார்

March 13th, 07:10 pm

தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் மார்ச் 14 அன்று மாலை 5 மணிக்கு பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் பயனாளிகளிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது, தில்லியைச் சேர்ந்த 5,000 சாலையோர வியாபாரிகள் உட்பட 1 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியின் போது தில்லி மெட்ரோவின் 4-ம் கட்டப் பணிகளில் கூடுதலாக இரண்டு வழித்தடங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

லஜ்பத் நகர் முதல் சாகேத் ஜி-பிளாக் வரை மற்றும் இந்தர்லோக் முதல் இந்திரபிரஸ்தா வரையிலான தில்லி மெட்ரோ நான்காம் கட்ட திட்டங்களுக்கான இரண்டு வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

March 13th, 03:25 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டத்தின் இரண்டு புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை தேசியத் தலைநகரில் மெட்ரோ இணைப்பை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.