Cabinet approves rail connectivity between Mumbai and Indore

September 02nd, 03:30 pm

The Union Cabinet has approved a new rail line connecting Mumbai and Indore. This strategic project will enhance connectivity and promote economic growth between these two major cities. The rail line is expected to significantly reduce travel time and boost trade and tourism in the region.

இந்தூரில் 'தொழிலாளர்களின் வெற்றியை தொழிலாளர்களுக்கே சமர்ப்பித்தல் ’ நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

December 25th, 12:30 pm

மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் அவர்களே, இந்தூரில் நீண்ட காலம் பணியாற்றிய மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா அவர்களே, எனது நாடாளுமன்ற சகாக்கள்; புதிய சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்; மற்ற பிரமுகர்கள், என் அன்பான தொழிலாளர் சகோதர சகோதரிகளே, வணக்கம்!

தொழிலாளர்களின் வெற்றி தொழிலாளர்களுக்கே சமர்ப்பணம் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

December 25th, 12:06 pm

தொழிலாளர்களின் வெற்றி தொழிலாளர்களுக்கே சமர்ப்பணம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (25-12-2023) காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். ஹுக்கும்சந்த் மில் தொழிலாளர்களின் நிலுவைத் தொகை ரூ. 224 கோடிக்கான காசோலையை இந்தூரில் உள்ள ஹுக்கும்சந்த் ஆலையின் அதிகாரப்பூர்வ அதிகாரி மற்றும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்களிடம் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சி ஹுக்கும்சந்த் ஆலைத் தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைந்தது. கார்கோன் மாவட்டத்தில் 60 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையத்திற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

தொழிலாளர்களின் வெற்றி தொழிலாளர்களுக்கே சமர்ப்பணம் என்ற நிகழ்ச்சியில் டிசம்பர் 25-ம் தேதி பிரதமர் பங்கேற்று, ஹுகும்சந்த் மில் தொழிலாளர்களின் நிலுவைத் தொகைக்கான காசோலையை வழங்குகிறார்

December 24th, 07:46 pm

தொழிலாளர்களின் வெற்றி தொழிலாளர்களுக்கே சமர்ப்பணம் என்ற நிகழ்ச்சியில் டிசம்பர் 25-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, ஹுக்கும்சந்த் மில் தொழிலாளர்களின் நிலுவைத் தொகை ரூ. 224 கோடிக்கான காசோலையை 2023, டிசம்பர் 25 அன்று நண்பகல் 12 மணிக்கு இந்தூரில் உள்ள ஹுக்கும்சந்த் மில் தொழிலாளர் சங்கத் தலைவர்களிடம் காணொலி காட்சி மூலம் வழங்க உள்ளார். ஹுக்கும்சந்த் மில் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்நிகழ்ச்சி அமையும். இதில் பிரதமர் உரையாற்றுகிறார்.

அக்டோபர் 5-ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு பிரதமர் பயணம்

October 04th, 09:14 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2023, அக்டோபர் 5-ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 02nd, 09:07 pm

நம்மைப் போன்ற கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நாட்டின் விடுதலைக்காகப் போராடும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால் பாரதத்தை வளர்ச்சியடையச் செய்து, இந்தியாவை வளமாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் உள்ளது. இன்றும், இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்காக மீண்டும் உங்கள் மத்தியில் குவாலியருக்கு வந்துள்ளேன். தற்போது, சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ரூ.19,260 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

October 02nd, 03:53 pm

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ரூ.19,260 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் . தில்லி-வதோதரா விரைவுச்சாலை அர்ப்பணிப்பு, பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2.2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளின் புதுமனை புகுவிழா, பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் அர்ப்பணிப்பு, ஜல் ஜீவன் இயக்கத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 9 சுகாதார மையங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ஐ.ஐ.டி இந்தூரின் கல்விக் கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல், இவ்வளாகத்தில் விடுதி மற்றும் பிற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், இந்தூரில் பல்வகை ராணுவத் தளவாடப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.

மத்தியப் பிரதேசத்தின் பினாவில் வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்

September 14th, 12:15 pm

மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா ஹர்தீப் சிங் பூரி, மத்தியப் பிரதேசத்தின் பிற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எனது அன்பான குடும்ப உறுப்பினர்களே!

மத்தியப் பிரதேச மாநிலம் பினாவில் ரூ.50,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

September 14th, 11:38 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தின் பினாவில் ரூ.50,700 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (பிபிசிஎல்) பினா சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பெட்ரோகெமிக்கல் வளாகம் சுமார் 49,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் திட்டங்களில் அடங்கும்; நர்மதாபுரம் மாவட்டத்தில் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம்; இந்தூரில் இரண்டு ஐடி பூங்காக்கள்; ரத்லாமில் ஒரு மெகா தொழில் பூங்கா; மத்தியப் பிரதேசம் முழுவதும் ஆறு புதிய தொழில்துறை பகுதிகள் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஜி20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலிக் காட்சி வாயிலான பிரதமரின் உரை

July 21st, 09:06 am

வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் துடிப்பான இந்தூருக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இது அதன் வளமான சமையல் பாரம்பரியங்களில் பெருமை கொள்ளும் ஒரு நகரமாகும். இந்த நகரத்தை அதன் அனைத்து வண்ணங்களிலும், சுவைகளிலும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஜி20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை

July 21st, 09:05 am

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற ஜி20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

ஐந்து வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

June 27th, 10:17 pm

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஐந்து வந்தே பாரத் ரயில்கள், போபால் (ராணி கமலாபதி) - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; போபால் (ராணி கமலாபதி) - ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ராஞ்சி - பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; தார்வாட் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் கோவா (மட்கான்) - மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஆகும்.

நேபாளப் பிரதமர் வருகையின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஊடக அறிக்கையின் மொழிபெயர்ப்பு

June 01st, 12:00 pm

பிரதமர் பிரசாந்தா அவர்கள் மற்றும் அவரது தூதுக்குழுவை நான் மனதார வரவேற்கிறேன். 9 ஆண்டுகளுக்கு முன்பு, 2014ல், பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள், நான் நேபாளத்திற்கு எனது முதல் பயணத்தை மேற்கொண்டேன். அந்த நேரத்தில், நான் இந்தியா-நேபாள உறவுகள், நெடுஞ்சாலைகள், சாலைப்போக்குவரது குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொண்டிருந்தேன். இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே நமது எல்லைகள் தடையாக மாறாத வகையில் இணைப்புகளை ஏற்படுத்துவோம் என்று கூறியிருந்தேன்.

இந்தூரில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அறிவித்தார் பிரதமர்

March 30th, 07:21 pm

இந்தூரில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார். இது குறித்து ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தூர் விபத்து சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது: பிரதமர்

March 30th, 02:42 pm

இந்தூரில் நிகழ்ந்த விபத்து சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அங்குள்ள நிலைமை குறித்து மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹானிடம், பிரதமர் திரு மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தார்.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற 17-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

January 09th, 12:00 pm

கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி அவர்களே, சுரிநாம் அதிபர் திரு.சந்திரிகா பிரசாத் சந்தோகி அவர்களே, மத்தியப்பிரதேச மாநில ஆளுநர் திரு.மங்குபாய் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் திரு.சிவ்ராஜ் சிங் சவுகான் அவர்களே, வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களே, இதர அமைச்சரவை சகாக்களே, உலகெங்கிலுமிருந்து இங்கு கூடியுள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே வணக்கம்.

மத்திய பிரதேசம், இந்தூரில் 17-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை பிரதமர் தொடங்கிவைத்தார்

January 09th, 11:45 am

மத்திய பிரதேசம் இந்தூரில் 17-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோதி இன்று தொடங்கிவைத்தார். பாதுகாப்பாக செல்லுங்கள் திறன் பெற்று செல்லுங்கள் நினைவு தபால்தலையையும் பிரதமர் வெளியிட்டார். அத்துடன், விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்ற கருப்பொருளில் இந்திய சுதந்திர போராட்டத்தில் வம்சாவளியினரின் பங்களிப்பு குறித்த முதலாவது டிஜிட்டல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின கண்காட்சியையும் அவர் திறந்துவைத்தார்.

இந்தூரில் பிரவாசி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) விழாவில் பிரதமர் நாளை பங்கேற்கிறார்

January 08th, 05:54 pm

பிரவாசி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) விழாவை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை இந்தூர் வருகிறார்.

Vision of self-reliant India embodies the spirit of global good: PM Modi in Indonesia

November 15th, 04:01 pm

PM Modi interacted with members of Indian diaspora and Friends of India in Bali, Indonesia. He highlighted the close cultural and civilizational linkages between India and Indonesia. He referred to the age old tradition of Bali Jatra” to highlight the enduring cultural and trade connect between the two countries.

இந்தோனேஷியாவின் பாலியில் இந்திய சமுதாயத்தினர் மற்றும் இந்திய நண்பர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

November 15th, 04:00 pm

இந்தோனேஷியாவின் பாலியில் இந்திய சமுதாயத்தினர், இந்தியாவின் நண்பர்கள் அடங்கிய 800-க்கும் மேற்பட்டோருடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடியதுடன் அவர்களிடையே உரையாற்றினார். இந்தோனேஷியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவர்கள் எழுச்சியுடன் குழுமியிருந்தனர்.