உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
September 25th, 11:00 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கடந்த நாட்களில், நம்மனைவரின் கவனங்களையும் கவர்ந்த ஒன்று என்றால் அது வேங்கை தான். வேங்கைகள் குறித்து உரையாட ஏராளமான செய்திகள் வந்திருக்கின்றன, அது உத்தரப் பிரதேசத்தின் அருண் குமார் குப்தா அவர்களாகட்டும் அல்லது தெலங்கானாவின் என். ராமச்சந்திரன் ரகுராம் அவர்களாகட்டும், குஜராத்தின் ராஜன் அவர்களாகட்டும், அல்லது தில்லியைச் சேர்ந்த சுப்ரத் அவர்களாகட்டும். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள் பாரதத்தில் வேங்கைகள் திரும்ப வந்தமைக்குத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். 130 கோடி பாரதநாட்டவர்கள் சந்தோஷப்படுகிறார்கள், பெருமிதம் கொள்கிறார்கள் – இது தான் பாரதம் இயற்கை மீது கொண்டிருக்கும் காதல். இந்த விஷயம் குறித்து அனைவரிடமும் உள்ள ஒரு பொதுவான வினா என்னவென்றால், மோதி அவர்களே, வேங்கையைக் காணும் சந்தர்ப்பம் எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது தான்.NEP is a big factor in the ‘mahayagya’ of national development: PM Modi
July 29th, 05:54 pm
The Prime Minister, Shri Narendra Modi addressed policy makers in the domain of education and skill development, students and teachers, across the country via video conferencing, to mark the completion of one year of reforms under the National Education Policy 2020. He also launched multiple initiatives in the education sector.தேசிய கல்விக்கொள்கை 2020, முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கல்வியாளர்களிடம் பிரதமர் உரை
July 29th, 05:50 pm
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் ஒராண்டு நிறைவு செய்ததை குறிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு கொள்கைகளை உருவாக்கியவர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். கல்வித்துறையில் பல நடவடிக்கைகளையும் அவர் தொடங்கி வைத்தார்.