
மனதின் குரல் நிகழ்ச்சியின் 119-வது அத்தியாயத்தில், 23.02.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 23rd, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இன்றைய நாட்களில் சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதில் இருக்கும் புளகாங்கிதம் என்ன என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம். ஆனால் இன்று நான் உங்களனைவரிடத்திலும் கிரிக்கெட்டைப் பற்றியல்ல, பாரதம் விண்வெளியில் சதம் அடித்திருப்பதைப் பற்றி உரையாட இருக்கிறேன். கடந்த மாதம் தான் இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100ஆவது செயற்கைக்கோளின் சாட்சியாக தேசமே இருந்தது. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, மாறாக அன்றாடம் புதிய உச்சங்களைத் ஸ்பரிசிக்கும் நமது உறுதிப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. நமது விண்வெளிப்பயணப் பயணம் மிக எளிய முறையிலே தான் தொடங்கியது. இதிலே ஒவ்வோர் அடியிலும் சவால்கள் இருந்தன. ஆனால், நமது விஞ்ஞானிகள் வெற்றிக்கொடியை நாட்டியபடி தொடர்ந்து முன்னேறினார்கள். காலப்போக்கில் விண்வெளியின் இந்தப் பாய்ச்சலில் நமது வெற்றிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகத் தொடங்கியது. ஏவுகலன் அமைப்பதாகட்டும், சந்திரயானின் வெற்றியாகட்டும், மங்கல்யானாகட்டும், ஆதித்ய எல்-1 அல்லது ஒரே ஒரு ஏவுகலன் மூலமாக, ஒரே முறையில், 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வரலாறுகாணா செயல்பாடாகட்டும், இஸ்ரோவின் வெற்றித்தொடர் மிகவும் பெரியது. கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிலே மற்ற நாடுகளின் பல செயற்கைக்கோள்களும் அடங்கும். அண்மை ஆண்டுகளின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், விண்வெளி விஞ்ஞானிகள் கொண்ட நமது குழுவிலே பெண்சக்தியின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். இன்று விண்வெளித்துறை நமது இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பது மிகுந்த உவகையை எனக்கு அளிக்கிறது. சில ஆண்டுகள் முன்பு வரை இந்தத் துறையில் ஸ்டார்ட் அப் குறித்தோ, தனியார் துறையின் விண்வெளி நிறுவனங்களின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காகும் என்றோ யார் தான் நினைத்தார்கள்!! வாழ்க்கையை விறுவிறுப்பான, சுவாரசியமான வகையில் அனுபவிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, விண்வெளித்துறை ஒரு மிகச் சிறப்பான தேர்வாக ஆகி வருகிறது.
பிரபல பின்னணிப் பாடகர் திரு. பி. ஜெயச்சந்திரனின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
January 10th, 09:39 am
பிரபல பின்னணிப் பாடகர் திரு. பி. ஜெயச்சந்திரனின் மறைவிற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள், தொடர்ந்து தலைமுறைகளின் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கும் என்று கூறினார்.
அரசியலமைப்புச் சட்டம் எங்களின் வழிகாட்டி வெளிச்சம்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
December 29th, 11:30 am
நண்பர்களே, அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நடைபெற இருக்கிறது. இந்த வேளையில், அங்கே சங்கமத்தின் கரையில் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன. சில நாட்கள் முன்பாக நான் பிரயாக்ராஜ் சென்றிருந்த வேளையில், ஹெலிகாப்டர் மூலமாக மொத்த கும்பமேளாவும் நடைபெறவுள்ள இடத்தையும் பார்வையிட்ட போது மனதில் பெரும் நிறைவு உண்டானது. என்னவொரு விசாலம்!! என்னவொரு அழகு!! எத்தனை பிரும்மாண்டம்!! அடேயப்பா!!புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் ஹுசேன் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
December 16th, 12:08 pm
புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் ஹுசேன் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மன் கீ பாத் (மனதின் குரல்): ‘மேரா பெஹ்லா வோட் – தேஷ் கே லியே’...(எனது முதல் வாக்கு, தேசத்துக்காக) பிரதமர் மோடி முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.
February 25th, 11:00 am
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் 110ஆவது பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன். எப்போதும் போலவே, இந்த முறையும் உங்களுடைய பல்வேறு ஆலோசனைகள், உள்ளீடுகள், விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் எப்போதும் போலவே இந்த முறையும் கூட என்ன சவால் என்றால், இந்தப் பகுதியில் எவற்றையெல்லாம் இடம் பெறச் செய்வது என்பது தான். ஆக்கப்பூர்வமான உணர்வில் ஒன்றை ஒன்று விஞ்சிய உள்ளீடுகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றில் பல, மற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதோடு கூடவே, தங்களுடைய வாழ்க்கையையும் மேலும் சிறப்பானதாக ஆக்குவதில் ஈடுபட்டிருக்கும் நாட்டுமக்களைப் பற்றியவை.இந்தியா-ஓமன் கூட்டு இசை நிகழ்ச்சிக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
January 30th, 10:17 pm
குடியரசு தினத்தன்று ஓமனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தியா-ஓமன் கூட்டு இசை நிகழ்ச்சியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.உஸ்தாத் ரஷீத் கான் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
January 09th, 10:37 pm
இந்தியப் பாரம்பரிய இசை உலகின் தலைசிறந்த ஆளுமையான உஸ்தாத் ரஷீத் கானின் மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூடில் உள்ள துளசி பீட நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 27th, 03:55 pm
மதிப்பிற்குரிய ஜகத்குரு ஸ்ரீ ராமபத்ராச்சாரியார் அவர்கள் நம்மை ஆசீர்வதிக்க இங்கு இருக்கிறார்; மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, முதலமைச்சர் சிவராஜ் அவர்களே, இங்கு கூடியிருக்கும் அனைத்து மூத்த துறவிகளே, தாய்மார்களே!PM addresses programme at Tulsi Peeth in Chitrakoot, Madhya Pradesh
October 27th, 03:53 pm
PM Modi visited Tulsi Peeth in Chitrakoot and performed pooja and darshan at Kanch Mandir. Addressing the gathering, the Prime Minister expressed gratitude for performing puja and darshan of Shri Ram in multiple shrines and being blessed by saints, especially Jagadguru Rambhadracharya. He also mentioned releasing the three books namely ‘Ashtadhyayi Bhashya’, ‘Rambhadracharya Charitam’ and ‘Bhagwan Shri Krishna ki Rashtraleela’ and said that it will further strengthen the knowledge traditions of India. “I consider these books as a form of Jagadguru’s blessings”, he emphasized.காசி சன்சாத் சம்ஸ்கிருதிக் மஹோத்சவ் 2023 இன் நிறைவு விழா மற்றும் வாரணாசியில் அடல் அவாசியா வித்யாலயாக்களின் அர்ப்பணிப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 23rd, 08:22 pm
உத்தரப்பிரதேசத்தின் பிரபலமான முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, மேடையில் அமர்ந்துள்ள மதிப்பிற்குரிய விருந்தினர்களே, காசி சன்சாத் சம்ஸ்கிருதிக் மஹோத்சவத்தின் சக பங்கேற்பாளர்களே, ருத்ராக்ஷ மையத்தில் கூடியிருக்கும் காசியின் என் அன்பான சக குடியிருப்பாளர்களே!உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தேசிய கலாச்சார மஹோத்சவ 2023 நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
September 23rd, 04:33 pm
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்று வந்த தேசிய கலாச்சார மஹோத்சவ நிகழ்வின் நிறைவு விழா இன்று நடைபெற்றது.பாடகர் முகேஷின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
July 22nd, 07:53 pm
பாடகர் முகேஷின் இந்திய இசையில் அழியாத முத்திரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். இன்று மெல்லிசை மேதையின் 100-வது பிறந்த நாள்.பிரபல சந்தூர் இசை மேதை பண்டிட் சிவ்குமார் ஷர்மாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
May 10th, 01:25 pm
பிரபல சந்தூர் இசை மேதை பண்டிட் சிவ்குமார் ஷர்மாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.கிராமி வெற்றியாளர் ரிக்கி கெஜ் பிரதமரை சந்தித்தார்
April 14th, 08:57 pm
கிராமி வெற்றியாளரான இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கெஜுடனான தமது சந்திப்பு பற்றிய மகிழ்ச்சியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துகொண்டுள்ளார். அவரின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்து தெரிவித்த பிரதமர், இசை மீதான உங்களின் ஆர்வமும் ஈடுபாடும் மேலும் உங்களுக்குப் புகழ்சேர்க்கும் என்றார்.டிவைன் டைட்ஸ் ஆல்பத்திற்காக கிராமி விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்-க்கு பிரதமர் வாழ்த்து
April 04th, 06:34 pm
டிவைன் டைட்ஸ் ஆல்பத்திற்காக கிராமி விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.பண்டிட் ஜஸ்ராஜ் கலாச்சார அறக்கட்டளை தொடக்க விழாவில் பிரதமர் அற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 28th, 04:45 pm
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள துர்கா ஜஸ்ராஜ் அவர்களே, சாரங் தேவ் பண்டிட் அவர்களே, பண்டிட் ஜஸ்ராஜ் கலாச்சார அறக்கட்டளையின் இணை நிறுவனர் நீரஜ் ஜெட்லி அவர்களே, நாட்டின் பல பகுதியிலிருந்தும், உலகம் முழுவதும் இருந்தும் கலந்து கொண்டிருக்கும் இசை கலைஞர்களே, பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம்!பண்டிட் ஜஸ்ராஜ் கலாச்சார அறக்கட்டளை தொடக்க விழாவில் பிரதமர் உரையாற்றினார்
January 28th, 04:41 pm
இந்திய சாஸ்திரிய சங்கீதத்தின் நிபுணரான பண்டிட் ஜஸ்ராஜ் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டினார். பண்டிட் ஜஸ்ராஜின் நித்தியமான இசை ஆளுமை பற்றி குறிப்பிட்ட பிரதமர், அவரது பெருமைமிகு பாரம்பரியத்தை பண்டிட் சாரங் தேவ் உயிர்ப்புடன் வைத்திருப்பதாக தெரிவித்தார். பண்டிட் ஜஸ்ராஜ் கலாச்சார அறக்கட்டளை தொடக்க விழாவில் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார்.மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரதமரை சந்தித்தனர்
December 20th, 04:32 pm
கஜக்ஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் டிசம்பர் 20, 2021 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர். மூன்றாவது இந்தியா-மத்திய ஆசியா பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் புதுதில்லிக்கு வருகை தந்துள்ளனர்.100 கோடி தடுப்பூசி அளவுகளுக்குப் பிறகு, இந்தியா புதிய உற்சாகம் மற்றும் ஆற்றலுடன் முன்னேறுகிறது: மன் கி பாத்தின் போது பிரதமர் மோடி100 கோடி தடுப்பூசி அளவுகளுக்குப் பிறகு, இந்தியா புதிய உற்சாகம் மற்றும் ஆற்றலுடன் முன்னேறுகிறது: ‘மன் கீ பாத்தின்’ (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
October 24th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள், கோடானுகோடி வணக்கங்கள். நான் ஏன் கோடானுகோடி என்று கூறுகிறேன் என்றால், 100 கோடி தடுப்பூசித் தவணைகளுக்குப் பிறகு இன்று தேசத்திலே புதிய உற்சாகம், புதிய சக்தி பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. நமது தடுப்பூசித் திட்டத்தின் வெற்றி, பாரதத்தின் வல்லமையைப் பறைசாற்றுகிறது, அனைவரின் முயற்சி என்ற மந்திரத்தின் சக்தியைப் பிரதிபலிக்கிறது.ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு பாடகி லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
August 30th, 09:53 pm
ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள பாடகி லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது நன்றிகளைத் தெரிவித்துகொண்டுள்ளார். பழம்பெரும் பாடகியான லதா பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் தனது குஜராத்தி மொழி பஜன் ஒன்றையும் தனது ட்விட்டர் செய்தியில் இணைத்திருந்தார்.