சிங்கப்பூர் அதிபரை பிரதமர் சந்தித்துப் பேசினார்

September 05th, 03:00 pm

இந்தியா–சிங்கப்பூர் கூட்டாண்மைக்கு அதிபர் திரு தர்மன் அளித்து வரும் உணர்வுப் பூர்வமான ஆதரவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர உதவி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்த விஷயத்தில், இந்த உறவுகளை விரிவான உத்திசார் கூட்டாண்மையாக உயர்த்துவது, கூட்டு ஒத்துழைப்புக்கான வலுவான முன்னோக்கிய பாதையை வகுக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். மேம்பட்ட உற்பத்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற புதிய துறைகளில் இந்தியாவும், சிங்கப்பூரும் தங்களது ஒத்துழைப்பை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது குறித்த எண்ணங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அடுத்த ஆண்டு, இந்தியாவுக்கு வருகை தரும் அதிபர் திரு தர்மனை வரவேற்க ஆவலுடன் இருப்பதாக, பிரதமர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்குடன் பிரதமர் சந்திப்பு

September 05th, 02:18 pm

சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும், முன்னாள் பிரதமருமான மேதகு திரு. லீ சியன் லூங்கை, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். பிரதமரை கவுரவிக்கும் வகையில் மூத்த அமைச்சர் மதிய விருந்து அளித்தார்.